February

பெப்ரவரி 15

பெப்ரவரி 15

பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் (2.இராஜா.6:16).

ஒரு மனிதனுடைய பார்வை 20-20 அக இருந்தால் அதுதான்மிகச் சிறந்த கண்பார்வை என மருத்தவர் கூறுகின்றனர். இங்கு எலியாவின் வேலைக்காரன்கண்களில் எந்தவிதக் கோளாறுமில்லை. விசுவாசக் கண்கள் காணுவதை மிகக் கூர்மையானகண்களுள்ள வேறு மனிதர்களால் காண இயலாது.

வேலைக்காரனுக்கு அந்தச் சூழ்நிலையின் கஷ்டம்தெளிவாகத் தெரிந்தது. சீரியாவின் படை தோத்தானை முற்றுகையிட்டபடியால் இனி தானும்எலியாவும் தப்ப முடியாது என்று கலங்கினான். ஆனால், கர்த்தாவே இவன் பார்க்கும்படி இவன்கண்களைத் திறந்தருளும் என்று பயமற்ற கலக்கமற்ற தீர்க்கதரிசி ஜெபித்தான். அப்பொழுதுஎலியாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலைநிறைந்திருக்கிறதை அவன் கண்டான் (வச.17).

கண்களால் சூழ்நிலையைக் காணலாம். விசுவாசத்தால்இரட்சகரைக் காணலாம். கண்கள் இக்கட்டையும், அபாயத்தையுமே காணமுடியும். விசுவாசத்தால்தேவனை நம்புகிறதின் சந்தோஷத்தைக் காணலாம். கண்களால் கவலையும் துன்பத்தையும் கண்டுவேதனைப்படுவோம். விசுவாசத்தினால் தூதர்களைக் காணலாம். தூதர்கள் யாவரும் இரட்சிப்பைச்சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தம் ஊழியம் செய்யும்படிக்கு… அனுப்பப்படும் பணிவிடைஆவிகளாயிருக்கிறார்கள் (எபி.1:14) என வேதம் கூறுகிறது.

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்குவிரோதமாயிருப்பவன் யார்? (ரோ.8:31). இதற்குச் சாட்சியாக தாவீது, நான்: கர்த்தரைநோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன். அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச்செவிகொடுத்தார். நான் படுத்து நித்திரை செய்தேன். விழித்துக் கொண்டேன். கர்த்தர்என்னைத் தாங்குகிறார். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படைடியெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன் (சங்.3:46) என்றான்.

எலியாவும், தாவீது காண்பித்த விசுவாசத்தை நாமும்காண்பிக்கவேண்டும். நம்முடைய உள்ளத்தின் கண்களைத் தேவனிடம் திருப்பி நாம் தரிசித்துநடவாமல், விசுவாசித்து நடக்க தேவன் தாமே அருள் புரிவாராக.