February

பெப்ரவரி 14

பெப்ரவரி 14

பாலும் தேனும் ஓடுகிற தேசம்… அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம். (உபா.11:9,12)

ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் தேவையானவற்றை உருவாக்கி இணைத்து, நலமாக்கித் தருபவர் தேவன் ஒருவரே. இவ்வுலகமும், அதன் டாம்பீகமும் ஒரு மனிதனின் இருதயத்திற்கு திருப்தியளிக்க முடியாது. இவ்வுலக ஆடம்பரங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சியாகத் தோன்றும். நாள்பட இது மங்கிவிடும். ஏனெனில், இது பாவத்தின் அடிமைத்தளையில் கட்டப்பட்டுள்ளது. பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என நமது இரட்சகர் கூறியுள்ளார். பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும் என்று வேதத்தில் கூறியிருப்பதை நாம் அறிவோம்.

பாவப் பிரமாணத்திற்கும், மரணத்திற்கும் விடுதலையடைந்து, இரட்சகர் இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களாகிய நம்மைப் பவுல், நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன் (ரோ.6:22) எனக் கூறுகிறார். இதனால் நம்மை அவர் மலைகளும், பள்ளத்தாக்குகளுமுள்ள வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசத்திற்கு வழிநடத்துவார் (உபா.11:11).

கிறிஸ்துவில் வெற்றியுள்ள வாழ்க்கை நடத்துகிறவர்களுக்கு இவ்வுலகம்தான் கானான் தேசம். இதில் நாம், பூமியின் மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமயாயிருக்கும் (உபா.11:18). கிருபையும், ஊக்கமும், வலிமையும் கொடுக்கும் தேவ வார்த்தையாகிய பால் ஓடும் தேசம் இதுதான். அவரது அன்பின் இனிமையாகிய தேன் ஓடும் தேசம் இதுதான். பிரசன்னம் நம்மோடு இருக்கிறது. அவரது வல்லமை நமக்குள் இருக்கிறது. நம் தேவைகளை நிறைவாக்கித்தரும் அவர், நாம் அவருக்கென சாட்சி சொல்லவேண்டும்மென விரும்புகிறார். அவர் தரும் ஆசீர்வாதங்கள் குறைந்து போகக்கூடியவையல்ல. இது வற்றாத ஆசீர்வாதம் நிறைந்த தேசம். இதில் பரிபூரண ஜீவனும் உண்டு.