February

பெப்ரவரி 10

பெப்ரவரி 10

கர்த்தரோ உண்மையுள்ளவர். அவர் உங்களை ஸ்திரப்படுத்தி தீமையினின்று விலக்கிக் காத்துக் கொள்ளுவார் (2.தெச.3:3).

சோதிக்கப்படுகிற விசுவாசிகளுக்குத் தேவன் பலமும்,ஆறுதலும் அளிக்கக்கூடிய உண்மையுள்ளவர். தெசலோனிக்கேயிலுள்ள விசுவாசிகளிடம் பவுல்,தனக்காகவும், சீலாவுக்காகவும், தீமோத்தேயுவுக்காகவும் ஜெபி க்கும்படி கேட்டுக்கொண்டார்.முதலாவது, கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பிமகிமைப் பட (2.தெச.3:1) ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஏனெனில் சுவிசேஷத்தைஅறிவிப்பதையே பவுல் தன் தலையாயக் கடனாகக் கொண்டார். மன இருளிலும், மரண இருளிலும் இருக்கும்மக்களுக்கு ஒளியைக் கொடுக்க வல்லது தேவ வசனம்தான் என அவருக்கு நன்கு தெரியும். அது ஜீவனும்வல்லமையையும் உள்ளது. இருபுறமும் கருக்குள்ள பட்டயம். ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும்ஈஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்தும், உள்ளங்களை மாற்றும். இதனால் இளம்விசுவாசிகள் வளர முடிகிறது எனவும் அவர் நன்கறிவார்.

மேலும் அவர், துர்க்குணராகிய பொல்லாத மனுஷர்கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கு, எங்களுக்கு வேண்டிக்கொள்ளுங்கள் (வச.2)எனவும் விசுவாசிகளிடம் கேட்டுக்கொள்கிறார். ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள்தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் என்பது பவுலுக்குத்தெரியாததல்ல.

கிறிஸ்தவர்களுக்கு, அதுவும் வளரும் விசுவாசிகளுக்கு இவ்வுலகமக்கள் அதில் துன்பத்தினைத் தருவர். அவர்களிடம் தந்தரங்களைக் கையாளுவர். காட்டுப்பகுதியிலும், விக்கிரக ஆராதனைக்காரர் நடுவிலும் வாழும் நம் கிறிஸ்தவ சகோதரர்கள்பாடுகளை அனுபவித்து வருகின்றனர். நம்மைப்போல பாடுகளை அனுபவிக்கும் அவர்களும் கர்த்தரேஉண்மையுள்ளவர் என்று விசுவாசிக்கின்றனர். தேவன் தம் பிள்ளைகளின் விசுவாசத்தைநிலைநிறுத்துவதற்கும் கொடியருக்கும் கொடுமைகட்கும் விலக்கிக் காப்பதற்கும்உண்மையுள்ளவராயிருக்கிறார்.