February

பெப்ரவரி 8

பெப்ரவரி 8

நீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்படவேண்டாம். (ஆதி.46:3)

தேவாதி தேவனை முழுமையாக நம்புகிற பிள்ளைகளுக்குஅவரது ஆலோசனைகள் தெளிவாகக் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் இதுவே சில சமயங்களில்அவர்களுக்கு முரணானதாகத் தோன்றும். அவருடைய சித்தம் என்று நாம் புரிந்து கொண்டதற்குமாறாக சில வேளைகளில் அவரது ஆலோசனைகள் இருக்கும்.

தன் தகப்பனுக்கும், பாட்டனுக்கும்வாக்களிக்கப்பட்ட நாட்டிலேதான் யாக்கோபு இருந்தான். அங்கு பஞ்சம் உண்டாயிற்று. இதறக்காகநாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டுமா? பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்றதல்லவாஉங்கள் விசுவாசம். ஆகவே தேவன் நமக்கென தெரிந்துகொண்ட இடத்திற்குச் சென்று நாம்விசுவாசமுள்ள பிள்ளைகள்தான் என்பதை நிரூபிக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் தேவன்யாக்கோபை எகிப்திற்கு அனுப்பினானர். அவர் அபிரகாமிடம், உன் சந்ததியார்தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து சேவிப்பார்கள் (ஆதி.15:13) எனக்கூறியுள்ளார். தேவன் கிருபையாக யோசேப்பை முன்னதாக எகிப்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இப்பொழுதோஅவர், அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என யாக்கோபுக்கு வாக்கு கொடுத்து போகச்சொல்லுகிறார்.

இவ்விதமாகவே அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்புஎலியாவைச் சாறிபாத் என்கிற புறஜாதியாரின் ஊருக்குச் செல்லும்படி கூறி, அங்கே தங்கியிரு.உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்(1.இராஜா.17:9) என்று வாக்களித்து அனுப்புகிறார். நமக்கு விருப்பமற்ற இடங்களையும்,மக்களையும் தேவன் தெரிந்தெடுப்பார். நம் வாழ்விற்கு இன்னொரு வழி திறக்கப்படும்வரையில்தங்கியிருக்க வேண்டிய இடம் அதுதான்.

தேவனுடைய சித்தத்தின்படி அமையும் இடத்தைப்போன்றுபாதுகாப்பான இனிமையான இடம் இந்த உலகத்தில் வேறு எங்குமே இல்லை. ஆகவே பயப்படவேண்டியஅவசியமேயில்லை.