February

பெப்ரவரி 7

பெப்ரவரி 7

மன்னா…. அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது (யாத்.16:31).

இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் தேவைகள் அதிகம் இருந்தது.பசியுள்ளவர்களாயிருந்தனர். தேவனுடைய கட்டளையின்படியே அவர்கள் எகிப்த்தைவிட்டு தானியங்கள்,காய்கறிகள், இறைச்சி, மீன் முதலியவற்றோடு புறப்பட்டனர். ஆனால் வனாந்தரத்தில்அவர்களுக்குப் பனியைப்போன்று பெய்த மன்னாவைத் தவிர வேறு எவ்விதமான உணவும்கிடைக்கவில்லை. அந்த மன்னா தேனிட்ட பணிகாரம்போன்று இனிமையாக இருந்தது. இது பசியைத்தாங்கும் சக்தியைக் கொடுக்கவல்லது.

ஆனால் இஸ்ரவேலரோ அவிசுவாசமுள்ளவர்களாகவும்,நன்றியற்றவர்களாகவும் முறுமுறுக்க ஆரம்பித்தனர். அப்பொழுது அந்த மன்னாவின் ருசி புது ஒலிவஎண்ணெயின் ருசி போலிருந்தது (எண்.11:8). தேவனுடைய பண்டகசாலையிலிருந்து அனுப்பப்பட்டதேனிட்ட பணிகாரம்போன்ற அதே மன்னாதான் இப்படியிருந்தது. மன்னா மாறிவிடவில்லை. அதைப்பெற்றவர்கள்தான் மாறிவிட்டனர்.

சுய திருப்தி, சுய நிறைவு இரண்டும் தேவனுடையஉதவிகளைக் குறித்து முறுமுறுக்கும். அவர் ஆயத்தமாக்கி வைத்ததை அவமாக்கும். அவர்கள்எகிப்தின் சுவைகளை இச்சித்தனர். (எண்.11:5). ஆகவேதான் தேவனுடைய வார்த்தைஎண்ணெயைப்போன்று ருசித்தது பூமிக்குரியவற்றைச் சிந்திப்பவர்களுக்கு பரலோகத்தின்காரியங்களைக் குறித்து அக்கறையும் ஆர்வமும் இராது.

தாழ்மையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கோ தேவனுடையவார்த்தை இனிய உணவாகத் தோன்றும். ஜெபத்திற்குக் கிடைக்கும் பதில் யாவும் வாழ்விற்குவல்லமையையும் வலிமையையும் அளிக்கிறது. அவரது உதவிகள் யாவும் இனிய சுவையுள்ளவைகள் எனஅறிவர். ஏனெனில், தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவைநன்மையினால் நிரப்புகிறார் (சங்.107:8) என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.