February

பெப்ரவரி 6

பெப்ரவரி 6

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளில் உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (மீகா 7:8).

கர்த்தருடைய பிள்ளைகளின் வாழ்வில் இருண்டபகுதியைக் காண்பது அரிது. நம்முடைய கீழ்ப்படியாமையால் இருண்ட அனுபவம் கிட்டுமேயொழியவேறுவகையில் ஏற்படாது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதனை விசுவாசிக்கும்போது நம்சொந்த நிழலைக் கண்டால்கூட பயந்து அவரிடம் ஓடுவோம். தேவன் நமக்கு முன்பாகச்செல்கிறார் என்பதனை நாம் அறியாத வரையில் நாம் தனித்தே நிற்கிறவர்களாயிருப்போம்.

யோபுவின் வாழ்வில் இருள் சூழ்ந்தது. அதற்குரியபதிலை அறியமுடியவில்லை. அவனது நண்பர்கள் அவனோடு வாதிட்டு அந்த மன இருளைமிகுதியாக்கிவிட்டனர். அதனால் தேவனுடைய பிரசன்னத்தை உணர இயலவில்லை.

இந்த இருளை உணர்ந்த எரேமியா, பூர்வகாலத்தில்செத்துக் கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப் பண்ணினார். நான்புறப்படக்கூடாதபடி என்னைச் சூழ வேலியடைத்தார் (புல. 3:6-7) எனப் புலம்புகிறார்.

எதிர்ப்பு, சோர்வு, தோல்வி போன்ற இருள்சூழ்ந்துகொண்டு ஒரு விசுவாசியைக் குழப்பும்போது மெய்யான ஒளியைக் கொடுக்கிறவரும், இரட்சகருமாகியதேவன் நமக்குண்டு என்று உணரவேண்டும். இருள் சூழ்ந்த வேளையில்தான் ஒருவன் சங்கீதக்காரன்கண்ட அற்புதமான அனுபவத்தை அடையமுடியும். அவன் செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம்உதிக்கும் (சங்.112:4) எனக் கூறியுள்ளான். வெளிச்சம் வந்தால் இருளுக்கு அங்கு இடமில்லையே!

நமக்காக தேவன் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தஆவலாய் இருக்கிறார். இரவின் நாலாம் ஜாமத்தில் விடிவதற்கு சற்று முன்பு இயேசு வருகிறார்.அலைகளிலே அலைவுபட்ட கப்பலைக் கரைசேர்க்க மனிதனின் முயற்சி யாவும் முடிந்து, நம்பிக்கைஅற்றுப் போயிற்று. அப்பொழுதுதான் அவர் பவுலுக்குத் தரிசனமாகி பயப்படாதே எனக் கூறினார்.இதை அவர் இருள் கடந்தபின் கூறாமல் இருள் சூழ்ந்த அவ்வேளையில் தான் கூறினார்.