June

யூன் 20

யூன் 20 பர்சிலா…. மெத்தைகளையும் கலங்களையும்…. கோதுமையையும், வாற்கோதுமையையும்,… தேனையையும், வெண்ணையும்….. தாவீதுக்குக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும்…. கொண்டுவந்தார்கள் (2.சாமு.17:27-29). நண்பர்கள் தேவையா? பர்சிலாவைப் போன்றவர்களைத் தேடுங்கள். வேதப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் பர்சிலாதான். அவனைப்பற்றி வேதாகமத்தில் அதிகமாகக் கூறப்படாவிடினும், அவனைப் பற்றிய செய்தி ஊக்கமளிக்கக் கூடியதாகவும், மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. யோர்தானுக்கு கிழக்கேயுள்ள மேய்ச்சல் நிலமான கீலேயாத்தில் அவன் பெரிய பணக்காரனாகவும், மேய்ப்பனாகவும் இருந்தான் என்பது தெளிவு. இராஜா வுக்கும் அதிகம் தேவையான வேளையில் அவன்…

June

யூன் 19

யூன் 19 ….. பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் (லூக்.8:60). யவீரு பயந்தபடியே நடந்துவிட்டது. அவனது மகள் இறந்து விட்டாள். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அவன்தன் ஆழ்ந்த துக்கத்திலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில் ஆண்டவர் இயேசு அவன் வீட்டிற்குப் புறப்பட்டு வந்து கொண்ருந்தார். மரண அவஸ்தையிலிருக்கும் பன்னிரண்டு வயது சிறுமியை அவரால் குணமாக்க முடியும். இயேசுவின் பின்னாக வந்து அவரது வஸ்திரத்தைத் தொட்டு குணமான பெண்ணினால் எதிர்பாராத வகையில் அவர் வீட்டிற்கு வருவது தாமதமாகி…

June

யூன் 18

யூன் 18 … உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது (சங்.36:5). ஆதியந்தமில்லாத தேவனின் பண்புகளை நம்மால் அளவிடவோ, கற்பனை செய்யவோ இயலாது. அவரது உண்மையும், இரக்கங்களையும் நம்மால் அளக்க முடியுமா? குறைபாடுள்ள மனிதர்களாகிய நம்மால் பரிபூரணமுள்ள தேவனைப்பற்றி அளவிட்டுக் கூறமுடியாது, ஆகவே நமக்குத் தெரிந்த அளவுமுறைகளால் மட்டுமே கூறமுடியும். இதையே சங்கீதக்காரன், பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரியதாயிருக்கிறது எனத் தன்னால் முடிந்த அளவு கோலைக் கொண்டு அளவிட்டுள்ளான்.…

June

யூன் 17

யூன் 17 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் (மத்.5:5). மற்றவர்களைச் சரியான வழியில் நடத்துவதற்குச் சாந்தகுணமே சிறந்தமுறை. துரோகம் செய்து தன் உள்ளத்தை அதிக வேதனைப்படுத்தியவர்களுக்கு தலைசிறந்த அப்போஸ்தலன் எழுதுகிறார். பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும், தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன் (2.கொரி.10:1). அவருக்கு அதிகாரம் செலுத்தவும், புத்தி சொல்லவும், கடிந்துகொள்ளவும், உக்கிரகோபம் கொள்ளவும் உரிமையுண்டு. ஆயினும் சாந்தத்துடன், அவர்கைளத் தேவனுடைய வழிகளில் நடக்கும்படி கெஞ்சுகிறார். நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த மோசே, கொடுங்கோலைனப்போல கட்டளையிடாமல்…

June

யூன் 16

யூன் 16 கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார் (சங்.138:6). தாழ்மையுள்ளவர்களைப் பாராட்டியும், பெருமையும், சுயநிறைவுள்ளவர்களைத் தாக்கியும் வேதாகமத்தில பல வசனங்கள் கூறப்பட்டுள்ளன. நீதிமொழிகள் 16:5ல் மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்றும், வசனம் 18ல் அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னாவது மனமேட்டிமை என்று காண்கிறோம். சாத்தான் ஒரு காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபாக இருந்தான் (எசேக்.28:14). அவன் விழுந்துபோனதற்கு காரணம் கர்வம்தான். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் எனப்…

June

யூன் 15

யூன் 15 அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை (சங்.34:5). மற்றவர்களுடைய சாட்சி நம்மை அதிகமாக ஊக்குவிக்கிறது. ஆண்டவரை நம்பி, அவர்கள் வெட்கப்பட்டுப் போகாதிருந்தனர் எனக் கேள்விப்படும்போது நம் உள்ளங்களும் உற்சாகமடைகிறதல்லவா? ஏனோக்கு தேவனோடு நடந்தான். அவனது விசுவாசத்தைக் கண்டு நமது பரமபிதா மகிழ்ந்தார் என்று நாம் அறிகிறோம். அதரிசனமானவரை மோசே கண்டு உயிரோடு இருந்தான். தேவன் தனக்கு வாக்களித்தததை நிறைவேற்றுவார் என்று நம்பி தன் விசுவாசத்தில் ஆபிரகாம் உறுதியாக நின்றான். தேவனிடத்தில்…

June

யூன் 14

யூன் 14 ….. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18). உபத்திரவம் பொறுமையைக் கொடுக்கிறது. இளம் விசுவாசிகளாக இருக்கும்வரை, நாம் துன்பத்திலும், பாடுகளிலிருந்தும் தேவன் நம்மை விடுதலையாக்குகிறார் என்று உணருகிறோம். அதன் பின்பு, நம் வாழ்வின் கருத்தாழமிக்க பாடங்களை, வாழ்வில் புயல் சூழும் வேளையிலும் இருண்ட சூழ்நிலையிலும், தேவனாலும் பிறராலும் கைவிடப்பட்டு விட்டோம் என்று உணரும் வேளையிலும்தான் கற்றுக்கொள்ள முடிகிறது என்று உணருவோம். அப்பொழுதுதான் ஆவியானவர் அளிக்கும் ஈவுகளைக் காணலாம். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து,…

June

யூன் 13

யூன் 13 ….. தேவன் உங்களோடே இருப்பார். அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் (ஆதி.48:21). ஜீவனுள்ள தேவனிடத்து விசுவாமாயிருப்பதுதான் தலை சிறந்த பாக்கியம். முற்பிதாக்களில் ஒருவனாகிய யாக்கோபு தன் முன்னோர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு என்பவர்கள்மூலம் தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பதைக் கற்றுக்கொண்டான். ஆகவே அவன் தன் மரணப்படுக்கையில் இருக்கும்போது இப்படிப்பட்ட சிலாக்கியத்தைப் பற்றித் தன் பன்னிரண்டு மகன்களுக்கும் தெரிவிக்கிறான். மரணவாயிலிலிருக்கும் அவன் நெடுங்காலம் வாழ்ந்து, பூரண ஆயுளில் மரிக்கப்போகிறான். இவ்வுலகில் அவன் வாழ்ந்த காலமெல்லாம் உன்னதமான…

June

யூன் 12

யூன் 12 கர்த்தர்தாமே….. உன்னோடே இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் (உபா.31:8). ஓர் இளம் விசுவாசி வளர்ச்சியடைவதற்கென தேவன் கிருபையாக அனுபவமுள்ள ஒருவரை உதவி செய்யவும், ஆலோசனை கூறவும் ஏற்படுத்தி வைக்கிறார் என்பதை வேதாகமத்தில் பல இடங்களில் காண்கிறோம். ரூத்துக்கென ஒரு நகோமி, எலிசாவிற்கென ஒரு எலியா, யோசுவாவிற்கென ஒரு மோசே, தீமோத்தேயுவுக்கென ஒரு பவுல் என்று தேவன் ஏற்படுத்தியிருந்தார். கைவிடாமல் காக்கும் தேவனில் பூரண விசுவாசம் வைக்கும்படியாக…

June

யூன் 11

யூன் 11 …. நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும். உம்மை நம்பியிருக்கிறேன் (சங்.25:20). கிறிஸ்தவனுக்கு விரோதிகள் அதிகம். கொடிய வார்த்தைகளைக் கூறி அவனை வேதனைப்படுத்துகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல. நமது அயலார். நமக்கு அறிமுகமானோர். பாவத்தை விரும்பி இயேசுவின் நாமத்தைத் தரித்திருப்போரை வெறுப்பவர், நம் குடும்பத்தில் உள்ள இரட்சிக்கப்படாதவர்கள் முதலியோர்தான். இதை அனுபவித்த தாவீது தேவனை நோக்கி, என் சத்துருக்களைப் பாரும். அவர்கள் பெருகியிருந்து, உக்கிர பகையாய் என்னைப் பகைக்கிறார்கள் (சங்.25:19) என்று முறையிடுகிறான். பன்யன் எழுதிய…