June

யூன் 15

யூன் 15 அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை (சங்.34:5). மற்றவர்களுடைய சாட்சி நம்மை அதிகமாக ஊக்குவிக்கிறது. ஆண்டவரை நம்பி, அவர்கள் வெட்கப்பட்டுப் போகாதிருந்தனர் எனக் கேள்விப்படும்போது நம் உள்ளங்களும் உற்சாகமடைகிறதல்லவா? ஏனோக்கு தேவனோடு நடந்தான். அவனது விசுவாசத்தைக் கண்டு நமது பரமபிதா மகிழ்ந்தார் என்று நாம் அறிகிறோம். அதரிசனமானவரை மோசே கண்டு உயிரோடு இருந்தான். தேவன் தனக்கு வாக்களித்தததை நிறைவேற்றுவார் என்று நம்பி தன் விசுவாசத்தில் ஆபிரகாம் உறுதியாக நின்றான். தேவனிடத்தில்…

June

யூன் 14

யூன் 14 ….. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18). உபத்திரவம் பொறுமையைக் கொடுக்கிறது. இளம் விசுவாசிகளாக இருக்கும்வரை, நாம் துன்பத்திலும், பாடுகளிலிருந்தும் தேவன் நம்மை விடுதலையாக்குகிறார் என்று உணருகிறோம். அதன் பின்பு, நம் வாழ்வின் கருத்தாழமிக்க பாடங்களை, வாழ்வில் புயல் சூழும் வேளையிலும் இருண்ட சூழ்நிலையிலும், தேவனாலும் பிறராலும் கைவிடப்பட்டு விட்டோம் என்று உணரும் வேளையிலும்தான் கற்றுக்கொள்ள முடிகிறது என்று உணருவோம். அப்பொழுதுதான் ஆவியானவர் அளிக்கும் ஈவுகளைக் காணலாம். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து,…

June

யூன் 13

யூன் 13 ….. தேவன் உங்களோடே இருப்பார். அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் (ஆதி.48:21). ஜீவனுள்ள தேவனிடத்து விசுவாமாயிருப்பதுதான் தலை சிறந்த பாக்கியம். முற்பிதாக்களில் ஒருவனாகிய யாக்கோபு தன் முன்னோர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு என்பவர்கள்மூலம் தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பதைக் கற்றுக்கொண்டான். ஆகவே அவன் தன் மரணப்படுக்கையில் இருக்கும்போது இப்படிப்பட்ட சிலாக்கியத்தைப் பற்றித் தன் பன்னிரண்டு மகன்களுக்கும் தெரிவிக்கிறான். மரணவாயிலிலிருக்கும் அவன் நெடுங்காலம் வாழ்ந்து, பூரண ஆயுளில் மரிக்கப்போகிறான். இவ்வுலகில் அவன் வாழ்ந்த காலமெல்லாம் உன்னதமான…

June

யூன் 12

யூன் 12 கர்த்தர்தாமே….. உன்னோடே இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் (உபா.31:8). ஓர் இளம் விசுவாசி வளர்ச்சியடைவதற்கென தேவன் கிருபையாக அனுபவமுள்ள ஒருவரை உதவி செய்யவும், ஆலோசனை கூறவும் ஏற்படுத்தி வைக்கிறார் என்பதை வேதாகமத்தில் பல இடங்களில் காண்கிறோம். ரூத்துக்கென ஒரு நகோமி, எலிசாவிற்கென ஒரு எலியா, யோசுவாவிற்கென ஒரு மோசே, தீமோத்தேயுவுக்கென ஒரு பவுல் என்று தேவன் ஏற்படுத்தியிருந்தார். கைவிடாமல் காக்கும் தேவனில் பூரண விசுவாசம் வைக்கும்படியாக…

June

யூன் 11

யூன் 11 …. நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும். உம்மை நம்பியிருக்கிறேன் (சங்.25:20). கிறிஸ்தவனுக்கு விரோதிகள் அதிகம். கொடிய வார்த்தைகளைக் கூறி அவனை வேதனைப்படுத்துகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல. நமது அயலார். நமக்கு அறிமுகமானோர். பாவத்தை விரும்பி இயேசுவின் நாமத்தைத் தரித்திருப்போரை வெறுப்பவர், நம் குடும்பத்தில் உள்ள இரட்சிக்கப்படாதவர்கள் முதலியோர்தான். இதை அனுபவித்த தாவீது தேவனை நோக்கி, என் சத்துருக்களைப் பாரும். அவர்கள் பெருகியிருந்து, உக்கிர பகையாய் என்னைப் பகைக்கிறார்கள் (சங்.25:19) என்று முறையிடுகிறான். பன்யன் எழுதிய…

June

யூன் 10

யூன் 10 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1). இரட்டிப்பான துன்பத்திற்குப் பதிலாக இங்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் மகிழ்ச்சியினை எடுத்துரைக்கும் தலைசிறந்த அதிகாரங்களில் இதுவும் ஒன்றாகும். இது தேவனுடைய மன்னிப்பில் ஆரம்பமாகிறது. நீதிமான்களின் ஆனந்த முழக்கத்துடன் முடிவடைகிறது. இவ்விரு உயர்ந்த நிலைகளுக்கும் இடையே துயரம் ஆழத்தில் மண்டிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட பள்ளத்தாக்கினைக் கடந்து சென்றால்தான் உயரமான இடத்தை அடையமுடியும். கிப்போவைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் இச்சங்கீதத்தை அதிகமாக விரும்பினார்.…

June

யூன் 9

யூன் 9 ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான் (நீதி.11:13). புறங்கூறுதலைக் குறித்த கடிந்துரைத்தலையும், அதற்கு வரும் ஆக்கினைத் தீர்ப்பைப்பற்றியும் வேதாகமத்தில் காண்கிறோம். மோசேயின் நியாயப்பிரமாணம், உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக என எச்சரிக்கிறது (லேவி.19:16). இதைப்பற்றி ஆராய்ந்த சாலோமோன், கோள் சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். கோள்காரனுடைய வார்த்தைகள்…. உள்ளத்தில் தைக்கும் (நீதி.26:20,22) என்றும், பேலியாளின் மகன் கிண்டி விடுகிறான். எரிகிற அக்கினி போன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான். கோள்…

June

யூன் 8

யூன் 8 இந்த மனுஷர் வேலையை உண்மையாகச் செய்தார்கள் (2.நாளா.34:12) இவ்வுலகிலுள்ள நாமனைவரும் தேவனால் படைக்கப்பட்டவர்களேயன்றி படைக்கிறவர்களல்ல. மனித ஆவியால் கொடுக்கப்பட்ட பொருளை ஒழுங்குபடுத்தி அழகுபடுத்தி வைக்கவே இயலும். ஆகவே புதிய கண்டுபிடிப்புகள்மூலம் நாம் பொருள்களை முன் இருந்ததைக் காட்டிலும் அழுகுள்ளதாயும், சிறப்புள்ளதாயும், பயனுள்ளதாயும் மாற்றமுடியும். வாழ்க்கைத்தரம் எவ்வளவுக்கெவ்வளவு உயரவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதற்கேற்ப நாம் உழைக்கவும், சிந்திக்கவும் வேண்டும். படைப்பின்போது தேவன் படைத்த பொருள்களிலிருந்து மாத்திரமே நாம் யாவற்றையும் உருவாக்குகிறோமேயன்றி புதிய படைப்புகள் அல்ல.…

June

யூன் 7

யூன் 7 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி.3:5-6). இவ்வசனத்தில் “உன்” என்கிற சொல் நான்கு முறை வந்திருப்பதைச் சற்றுக் கவனியுங்கள். வேதாகமம் உனக்கு வழி காட்டும் நூல் என்பதற்கு இதுதான் சிறந்த சான்று. இவ்வசனம் நாம் செல்லவேண்டிய வழி இதுவெனத் தெளிவாகக் கூறுகிறது. நாம் முழு இருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கவேண்டும். அரைகுறையான, மாறுபாடான இருதயம் வேதனையையும், பயத்தையும்…

June

யூன் 6

யூன் 6 இவன் தச்சன் அல்லவா? (மாற்.6:3) இயேசு கிறிஸ்து தச்சன் என்பது நாசரேத்தூரார் யாவருக்கும் தெரியும். தங்கள் ஊரைச் சேர்ந்த அவரைப்பற்றி அவர்கள் புகழ்ந்து கூறிய சொற்களல்ல இவை. அவரை இழிவுபடுத்தும்படிக்கு கூறப்பட்டுள்ள இழிவான சொற்களாகும். தாவீதின் சந்ததியில் வந்த நமது இரட்சகருக்கு, மற்றவர்களால் தான் இழிவுபடுத்தப்படுவது நன்கு தெரியும். அவர் மென்மையான உள்ளமும் உதவி செய்யும் கரங்களும் கொண்டவர். தன் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார். அங்கு அவர் ஞானமுள்ள வார்த்தைகளைக் கூறினார். குணமாகும்படி…