January

ஐனவரி 21

தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் (1.கொரி.10:13). சோதனைகளும், குழப்பங்களும் வரும்போது இவை யாவும்நமக்குத்தான் வருகின்றன. வேறு யாருக்கும் வருவதில்லை என்றும் நாம் கருதிய வேளைகள் பலஉண்டு. இது சரியல்ல. தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம்அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்முடைய விசுவாசத்தையும், பொறுமையையும்சோதித்து அறிவதற்கென்றும் சோதனைகள் நமக்கு வருகின்றன. குழப்பமும், இருமனமுள்ள நிலைமையும் யாவருக்கும்வருவது இயல்பு. இதில் விதிவிலக்கு இல்லை. சிலர் மற்றவர்களை விட மிகவும் மனம் தளர்ந்துபோய்விடுகின்றனர். குழப்பமும், வேதனையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்போது, அவை நமக்குஅர்த்தமற்றவையாகவும், முடிவேயில்லாதவையாகவும் தோன்றும். நமக்கு இவைகள்…

January

ஐனவரி 20

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை. நாணாதே, நீ இலட்சையடைவதில்லை. (ஏசா.54:4) கவலைகள் பெருகி நம்மை வெட்கப்படுத்தும்போதுநமக்கு அது கசப்பாகத் தோன்றும். தவறுதலாக எதையாவது செய்துவிட்டு வெட்கப்படும்போது,நமக்கு வேதனையாகத்தான் இருக்கும். உண்மையுள்ள தேவன் நம்மை விட்டு விலகிவிட்டார் என்றுபயப்படுவதுதான் அதிகமாக வெட்கப்படவேண்டிய செயல். கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்,நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும் (சங்.31:1) என்று நாமும்சங்கீதக்காரனைப்போல கதறவேண்டியதுதான். தேவன் மனதுருகுகிறவர். அவர் தள்ளுண்டவர்களையும்,தனிமையில் வாடுவோரையும், அன்புக்கு ஏங்குவோரையும், கவலையில் ஆழ்ந்துள்ளோரையும்மக்களால் மறக்கப்பட்டோரையும், தகப்பனற்றவர்களையும், விதவைகளையும் குறித்து அக்கறைகொள்கிறார். இவர்களுக்கு கடந்த காலம்…

January

ஐனவரி 19

பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள். ஆவியானவரோ அவாகளைப் போகவெட்டாதிருந்தார் (அப்.16:7). தேவன் தமது பிள்ளைகளைத் திறவுண்ட கதவுகள்மூலம்வழிநடத்துவதுபோன்றே அடைபட்ட வாசல்களைக்கொண்டும் வழிநடத்துகிறார். சில வேளைகளில்நாம் இது சிறந்த வழியென திட்டமிட்டுச் செல்வோம். ஆனால் அங்கு வழி நமக்கு முன்பாகஅடைக்கப்பட்டு இருக்கும். இப்படித்தான் நாம் தேவனுடைய வழி நடத்துதலை அறியமுடியும். பாதைஅடைபட்டிருந்தால் நாம் வேறு பாதையாகத்தான் செல்லவேண்டும் அல்லது நம் சுயநம்பிக்கையாலும்,உறுதியினாலும் தடைகளைத் தாவிக் குதித்து செல்லவேண்டும் என்பதுதான் இதன் பொருளா? நாம் முன்னேறிச் செல்வதைத் தடுப்பவன்…

January

ஐனவரி 18

நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி (2.தீமோ.2:2). ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் போதித்து, அவர்கள்கற்றுக்கொண்டபின்பு, அவர்களைக்கொண்டு பிறருக்கும் கற்றுக்கொடுக்கத் தூண்டுவதுதான்ஆசிரியரின் தலைசிறந்த பண்பு. அதில்தான் அவர் மகிழ்ச்சியடைகிறார். கற்றது கைமண்ணளவு,கல்லாதது உலகளவு என்பது பழமொழி. அறிவுபசி தணியக்கூடாதது. கற்றுக்கொடுக்கும் பணியும்முடிவுற்றது. இதனால் பயன்பெறுவோர் பலர் உண்டு. நமது பெரிய போதகர் பணியே அலாதியானது. அவர் இணையற்றஅறிவுள்ளவர். மிகுந்த அதிகாரத்துடன் போதித்தார். தெய்வீக சத்தியங்களைப் பூக்கள்,வயல்வெளி, கடல், வானம் முதலியற்றின்மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாகவேதவாக்கியங்களை மையமாக…

January

ஐனவரி 17

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள் (யாத்.14:15). தமது பலத்த கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும்சர்வ வல்லமையுள்ள தேவன் தம் மக்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார்.அவர் சர்வ வல்லமையள்ளவர். உதவி செய்யக்கூடியவர் என்பதற்கு சிவந்த சமுத்திரத்தின் கரையில்உள்ளனர். பார்வோன் தன் பிரதானமான இரதங்களுடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வருகிறான்.இதைக் கண்ட இஸ்ரவேலர் கதிகலங்கி நிற்கின்றனர். இவர்களைத் தேவன் ஏன் எகிப்தைவிட்டுவெளியேற்றிக்கொண்டு வரவேண்டும்? இப்படிப்பட்ட திகிலான வேளையில்…

January

ஐனவரி 16

அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும். அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப் போவார்களாக. உமது அடியானோ மகிழக்கடவன் (சங்.109:28). தன் கொடிய, தந்திரமுள்ள விரோதிகள் தன்னைச்சூழ்ந்து நெருங்குகையில், தாவீது ஆவியில் நிறைந்தவனாக தன்னைச் சபிப்பவர்கள்சபிக்கட்டும், நிந்திக்கிறவர்கள் நிந்திக்கட்டும் என்று விட்டுவிடுகிறான். இயேசுகிறிஸ்து தன் பாடுகளிலும், வேதனைகளிலும், மரணத்திலும் வெளிப்படுத்தின அந்த மனப்பக்குவத்தையே தாவீது தீர்க்தரிசனமாக வெளிப்படுத்துகிறான். யூதாஸ் காட்டிக்கொடுத்தபோதும், பாடுகள்பட்டபோதும் இருந்த நமது இரட்சகரின் மனநிலையினையே இந்தச் சங்கீதம் படம் பிடித்துக் காட்டுகிறது. இது பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதீர்க்கதரிசனம். இயேசுவும்…

January

ஐனவரி 15

“உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியம் உறுதியுமானவைகள்” (ஏசா.25:1) ‘உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக் கொள்ளுகிறவனுமாயிருக்க வேண்டும்” (தீத்து 1:9) என்கிற வசனம் ‘உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமுள்ளவைகள்” என்கிற ஏசாயாவின் வார்த்தைகளை எதிரொலிப்பதுபோல் தோன்றுகிறது. ‘தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்” (நீதி.30::5) எனக் கூறுகிறார் சாலமோன் ஞானி. அவரது வாக்குத்தத்தங்கள் யாவும் உண்மையுள்ளவைகள். வேதாகமம் முழுவதும் ஜீவனுள்ள தேவனுடைய உயிருள்ள வார்த்தைகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் ‘பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல…. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா?” (எண்.23:19).…

January

ஐனவரி 14

ஆபிரகாமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்” (ஆதி.15:1) தன்னிடம் கேடகமும், பலனுமில்லாத நிலையினை ஆபிராம் கண்டான். அவனுடைய எதிரிகள் அநேகர். அவர்கள் கொடியர். கானான் நாட்டின் வட பகுதியிலுள்ள இராஜாக்கள் தென் பகுதியின் மன்னர்களுக்கு விரோதமாகச் சதி செய்தனர். இறுதியில் வெற்றிவாகை சூடி, ஆபிரகாமின் சகோதரன் லோத்தையும் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். லோத்தை விடுவிக்க ஆபிராம் எதிர்த்துப் போரிடவேண்டியிருந்தது. நாம் தேவனுக்கும், அயலானுக்கும் உண்மையாக நடந்து கொள்ளும்போது, நமக்கு ஆத்திரத்தைத் தூண்டும்…

January

ஐனவரி 13

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10) ஆனாலும், என்ற வார்த்தை எவ்வளவு பெரிய மாறுதலைக் கொடுக்கிறது. யோபுவைப்போல நாமும் மிகுந்த கலவரமடைந்ததுண்டு. ஆனாலும் நாம் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஏனெனில், இதை அவர் அறிவார் என்று நாம் நம்புகிறோம். அதே வேளையில் ‘நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்” என்றும் பெருமூச்சுடன் கூறுகிறோம். நமக்கென வழியேதும் தெளிவாகத் தென்படவில்லை. நாம் அவர்…

January

ஐனவரி 12

“உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தாவாகிய அவருக்கு……” (1.பேது.4:19) வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய தேவனை நம்புவதற்கு அதிக விசுவாசம் தேவை. ஏனெனில், இவ்விசுவாசத்தின் நிச்சயத்தின்மூலம், ஒருவரை ஆண்டவர் இயேசுவண்டை வழிநடத்தி அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ள உதவமுடியும். அறிவியலார் கணக்கிட்டபடி மிக நுட்பமாக உருவாக்கப்பட்டது இப்பரந்த உலகம். இது தானாக தற்செயலாக அமைந்தது எனக்கூறுவது தவறு. இது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. வெறுமையிலிருந்து உலகத்தையும், உயிரற்றவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், பயனற்றவைகளிலிருந்து பயனுள்ளவற்றையும் உருவாக்கிய தேவன் ஒருவன் உண்டென்பதை மறவாதே! அவரது படைப்புகளின் உருவ…