April

ஏப்ரல் 20

ஏப்ரல் 20 கர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதி.39:2). யோசேப்பிற்கு யாவரும் எதிர்ப்பாக இருந்தனர். எல்லாச் சூழ்நிலைகளும் பாதகமாகவே தோன்றிற்று. அவனது அண்ணன்மார் அவனைப் பகைத்தனர். கொன்றுபொட விரும்பினர். கடைசியில் அவனை உயிருடன் செத்தவனைப் போலாக்கி, அடிமையாக எகிப்தியருக்கு விற்றுப்போட்டனர். அங்கு போத்திபாரின் அரண்மனையில் மோசமாக நடத்தப்பட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான். ஒரு புதிய நாட்டில் அவன் அந்நியனாக, அடிமையாக கைதியாக நண்பர்களற்றவனாக இருந்தான். ஆனால் அண்டவர் அவனோடு இருந்தார். கைவிடாத ஆண்டவரின் பிரசன்னம் யோசேப்போடிருந்ததை எவராலும், எந்தச் சூழ்நிலையிலும்…

April

ஏப்ரல் 19

ஏப்ரல் 19 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள் (சங்.106:3). தனி மனிதனாயினும் சரி, ஒரு தேசமாயினும் சரி, நியாயத்தைக் கைக்கொள்ளுவதும், நீதியைச் செய்வதும் அவசியமே. நியாயத்தைக் கைக்கொள்ள தவறிவிட்ட தனி நபர்களைப்பற்றியும், கூட்டத்தாரைப்பற்றியும் சங்கீதக்காரன் எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கிறான். துன்பமும், இடுக்கணும் நேரிடும்போது நம்மைக் கோழைகளாக்கிக்கொள்வது இயல்பு (சங்.106:7-12). இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் இரும்புப் பிடியிலிருந்து தப்பிச் சென்றனர். வழியில் திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எகிப்தியரின் படைக்கும், செங்கடலுக்கும் நடுவே அகப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டனர். கிறிஸ்தவ…

April

ஏப்ரல் 18

ஏப்ரல் 18 சாமுவேல் முதிர் வயதானபோது…. (1.சாமு.8:1) தன் பிள்ளைகள் தன்னைப்போன்று நடக்கவில்லை என்று சாமுவேல் வேதனைப்பட்டான். அவன் சிறுவனாக இருந்தபோது ஏலியைக் குறித்து தேவன் கூறியதைக் கேட்டான். அவன் குமாரார் தங்கள் மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும் அவர்களை அடக்காமற்போனான் (3:13). இதனால் வந்த விளைவுகளைச் சாமுவேல் தன் கண்களால் கண்டான் (4:1-18). ஏதோ சில காரணங்களால் இவனும் தன் பிள்ளைகளை ஊழியத்திற்கு ஏற்றவர்களாக வளர்க்கவில்லை. இப்படிப்பட்ட திறமையற்ற வளர்ப்புக்கென மக்கள் சாமுவேலைச் சாடினர்.…

April

ஏப்ரல் 17

ஏப்ரல் 17 ……. நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவன் இன்னார் என்று அறிவேன் (2.தீமோ.1:12). நான்… அறிவேன் என்று பவுல் மிகுந்த நிச்சயத்தோடு இங்கு கூறியுள்ளார். இதில் எவ்வித சந்தேகத்தின் நிழலையும் காணமுடியாது. இப்படிப்பட்ட நிச்சயத்தோடு உள்ள பலரை நாம் வேதாகமத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது. தன் வேதனையிலும், பாடுகளிலும் உறுதியாக நின்ற யோபு, என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். மிகுந்த இக்கட்டில் சிக்கிக்கொண்ட பவுல் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு…

April

ஏப்ரல் 16

ஏப்ரல் 16 ….. ஒருவன் என் பின்னே வரவிரும்பினால்…. (லூக்.9:23). மனந்திரும்புதலின் அனுபவத்திற்குள் வந்தவன்தான் இயேசுவின் சீடனாக முடியும். தேதவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணிக்கொண்டிருந்த பழைய விழுந்துபோன நிலையினை, உணர்ந்து, மனஸ்தாப்பப்பட்டு இரட்சகரண்டை வந்தோம். நம் மனம் விரும்பிய வாழ்வில் அவனவன் தன் தன் வழியிலே போனோம் (ஏசா.53:6). அதனால் எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானோம் (ரோ.3:23). ஆகவே வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின் கீழ் அடைத்துப்போட்டது (கலா.3:22). கட்டுப்பாட்டுக்குள் வருவது யாருக்கும் சற்று கடினமே. நம்…

April

ஏப்ரல் 15

ஏப்ரல் 15 நான் கர்த்தர். எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய் (ஏசா.49:23). நமக்கு நேரிடுகிற காரியங்கள் யாவற்றிலும் நாம் வெட்கப்பட்டுப் போய்விடுவோமோ என்று நினைக்கத் தோன்றும். இதைப்பற்றி வேறு யாரும் அறியமாட்டார்கள். இதைப்பற்றி யாருக்கும் அக்கறை இராது. அவர்கள் யாவரும் நமக்கு விரோதமாக இருந்தாலும் சந்தேகப்படவேண்டியதில்லை. இங்கு இவ்வசனத்தின் முன்பகுதியில் உன் கால்களின் தூள் களை நக்குவார்கள் என்று கூறியதின் பொருள் என்ன? எப்படியோ எனக்கு விரோதமாய் நின்றவர்கள் தாழ்ந்துவிடுவார்கள் என்பதுதானே இதன் பொருள்.…

April

ஏப்ரல் 14

ஏப்ரல் 14 கர்த்தாவே, மனுஷருடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன் (எரேமி.10:23). தன்னால் எவ்வளவு வேலை செய்யமுடியும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டும். ஏனெனில் ஒரு காரியத்தில் ஒருவன் தன் தகுதியைக் கடந்து செயல்ப்பட முயன்றால், விரைவில் தன் அறியாமையை வெளிப்படுத்துவான். உண்மையான தேவவழிநடத்துதலிலும் இப்படித்தான். நாம் நம்மால் ஏதும் ஆகிறதில்லை என உணரவேண்டும். ஏனெனில் நமக்கு தேவனுடைய வழிகளை உணர்வதற்குப் போதுமான அறிவும், உணர்வும் கிடையாது. நாம் சர்வ ஞானமுள்ள,…

April

ஏப்ரல் 13

ஏப்ரல் 13 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்… எழுதியிருக்கிறபடியே நடந்தார் (ரோ.15:3). நான் இவ்விதமாக நடந்தேனா? நடக்க விரும்புகிறேனா? இப்படி நடப்பது அவசியம்தானா? இது சரியான முறையா? என்று ஒவ்வொரு விசுவாசியும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டும். கிறிஸ்தவ வாழ்விற்குரிய பண்புகளை நாம் வளர்த்துக் கொள்வதற்குக் கீழக்கண்ட சில காரியங்கள் பயன் தரும் என நம்புகிறேன். (1) உலகத்தோடு உறவு கொள்ளாமை வேண்டும் (ரோ.12:1-2). இதையே ஜான் வெஸ்லி, கிறிஸ்துவின் மேலுள்ள என் அன்பைக் குறைத்துப்போடும் யாவும் உலக சிநேகம்…

April

ஏப்ரல் 12

ஏப்ரல் 12 கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடிக்கு செய்யும் (சங்.31:1). மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்க போக்கையும் உண்டாக்குவார் என்று நாம் 1.கொரிந்தியர் 10:13ல் காண்கிறோம். சங்கீதங்காரனைப்போல நானும் தேவைனையே நம்பிப் கொண்டிருக்கிறேன். ஆயினும் தற்போதுள்ள இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கொள்ள மார்க்கமில்லையே என்று ஏங்குகிறாயா? அவரில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதினால் நாம் வெட்கப்பட்டு விடுவோமா?…

April

ஏப்ரல் 11

ஏப்ரல் 11 ஏன் என்னை மறந்தீர் (சங்.42:9) நமக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் தூரத்தில் இருந்தபோதிலும், வேலை மிகுதியினால் அவர்கள் நம்மை மறந்துவிடலாம். ஆனால் நமது நம்பிக்கைக்குரிய ஆண்டவரோ நம்மை மறப்பதில்லை. இதையே அவர் நமக்கு,   ஸ்திரியானவள் தன் கர்ப்பதின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் (ஏசா.49:15-16) என்று உறுதியளித்துள்ளார். இரட்சகரின் காயப்பட்ட கரங்களைக் காட்டிலும் சிறந்த, மேலான பாதுகாப்பளிக்கக்கூடிய நம்பிக்கைக்குரிய…