April

ஏப்ரல் 22

ஏப்ரல் 22

…. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18).

எரேமியாவின் காலத்தில் சிறையிருப்பிற்குத் தப்பி, மீதியாயிருந்த இஸ்ரவேலர் அடைக்கலம் தேடி எகிப்துக்குப் போக புறப்பட்டனர் (எரேமி.42). இது நம் வாழ்விலும் ஏற்படுவது இயல்பே! ஒருவனுடைய இருதயம் கர்த்தருடைய வேளைக்கும், வழிக்கும் காத்திராவிடில் அவன் தன் இச்சைப்படி நடப்பான் என்பது உறுதி. ஆiகாயல் மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வாக்குத்த்ததம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:35-36).

நாம் காத்திருக்கும் வேளையில் நம்முடைய எண்ணங்களைச் சோதித்தறிய வாய்ப்புண்டு. அப்பொழுது நம் வாஞ்சைகள் சரியானதா அல்லது தவறானதா, சுயநலமுள்ளதா அல்லது சுயநலமற்றதா, இது என் மகிழ்சிக்காக செய்யப்படுவதா, அல்லது தேவனைப் பிரிய்படுத்துவதா என்று நம்மால் ஆராய்ந்து அறிய முடியும். விசுவாச வீரராகிய ஜார்ஜ் முல்லர் ஜெபிக்கும்போது தனக்கு விருப்பமானவற்றைக் கேட்காமல் தேவனுடைய வழிநடத்துதலுக்காகவும், அவரது நாம மகிமைக்காகவும் வேண்டுவாராம். நாமும்கூட தேவையற்ற ஜெபங்களைத் தவிர்த்து விடுவது நலம்.

காத்திருப்பதற்கு மிகுந்த பலன் கிட்டும். பலன் கிட்டாத ஜெபங்களை மாற்றிக்கொள்வோம். பதில் கிடைப்பதற்காகக் காத்திருப்பது ஜெபங்களை மாற்றிக்கொள்வது பயனற்றவை. பதில் கிட்டாத ஜெபங்களுக்கென தேவனை ஸ்தோத்த ரிக்க வேண்டும். தங்கள் ஜெபங்கள் யாவற்றிற்கும் பதில் கிடைக்காமற்போனதற்கென தேவனுடைய பிள்ளைகள் பலன் நன்றி சொல்லுவதுதான் சிறந்தது எனக் கண்டு கொண்டுள்ளனர்.