April

ஏப்ரல் 20

ஏப்ரல் 20

கர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதி.39:2).

யோசேப்பிற்கு யாவரும் எதிர்ப்பாக இருந்தனர். எல்லாச் சூழ்நிலைகளும் பாதகமாகவே தோன்றிற்று. அவனது அண்ணன்மார் அவனைப் பகைத்தனர். கொன்றுபொட விரும்பினர். கடைசியில் அவனை உயிருடன் செத்தவனைப் போலாக்கி, அடிமையாக எகிப்தியருக்கு விற்றுப்போட்டனர். அங்கு போத்திபாரின் அரண்மனையில் மோசமாக நடத்தப்பட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான். ஒரு புதிய நாட்டில் அவன் அந்நியனாக, அடிமையாக கைதியாக நண்பர்களற்றவனாக இருந்தான்.

ஆனால் அண்டவர் அவனோடு இருந்தார். கைவிடாத ஆண்டவரின் பிரசன்னம் யோசேப்போடிருந்ததை எவராலும், எந்தச் சூழ்நிலையிலும் தடைசெய்ய இயலவில்லை. அவனது வாழ்க்கையில் எவ்வித அர்த்தமில்லாதிருந்தபோதிலும், எதிhகால நம்பிக்கையற்றிருந்த சூழ்நிலையிலும், தேவன் தனக்கு வெளிப்படுத்தினவை நிறைவேறும் என்று நம்பி அதைச் சார்ந்திருந்தான். அவன் உயர்ந்த நிலைக்கு வருவான். தன் சகோதரரை ஒருநாள் ஆளுகை செய்வான் என்று அவர் வெளிப்படுத்தியிருந்தார். அவன் தேவனுடைய கரத்தில் இருந்ததால் எல்லா மனுஷருடைய கரமும் அவனுக்கு விரோதமாக இருந்தது.

உன்னுடைய உள்ளம் தேவனிடத்திலும், மற்ற மனுஷரிடத்திலும் செம்மையாக இருக்கும்போது எவராலும் எந்தச் சூழ்நிலையானாலும் தேவனை உன்னுடைய வாழ்க்கையைவிட்டுப் பிரித்து வெளியே நிறுத்திவிட முடியாது.

யோசேப்பைப்போல நாமும் இரும்பு விலங்கினால் கட்டப்பட்டு இருக்கலாம். நாம் உன்னதமானவரால், நம்மைவிட்டு விலகாதவரால், தம்மை நம்புகிற யாவரையும் கைவிடாத கர்த்தரின் கரத்தினால் சோதிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறோம். இனிமை பெறுகிறோம் என்பதை மறவாதிருப்போம்.