April

ஏப்ரல் 18

ஏப்ரல் 18

சாமுவேல் முதிர் வயதானபோது…. (1.சாமு.8:1)

தன் பிள்ளைகள் தன்னைப்போன்று நடக்கவில்லை என்று சாமுவேல் வேதனைப்பட்டான். அவன் சிறுவனாக இருந்தபோது ஏலியைக் குறித்து தேவன் கூறியதைக் கேட்டான். அவன் குமாரார் தங்கள் மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும் அவர்களை அடக்காமற்போனான் (3:13). இதனால் வந்த விளைவுகளைச் சாமுவேல் தன் கண்களால் கண்டான் (4:1-18). ஏதோ சில காரணங்களால் இவனும் தன் பிள்ளைகளை ஊழியத்திற்கு ஏற்றவர்களாக வளர்க்கவில்லை. இப்படிப்பட்ட திறமையற்ற வளர்ப்புக்கென மக்கள் சாமுவேலைச் சாடினர். திறமையற்ற வளர்ப்புக்கென மக்கள் சாமுவேலைச் சாடினர். ஆவிக்குரிய காரியங்களிலோ, ஊழியத்திலோ மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளைக் கவனிக்காதபடியால் வேதனையடைவது இயல்பு. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான். மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான் (நீதி.15:20).

முதிர்வயதான வேளையில் இளைய தலைமுறையினர் வழி தவறிய புதிய வழிகளில் செல்வதைக் காணும்போது அது நமக்கு மிகவும் வேதனையையும், மனக்கசப்பையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. வேதனைப்பட்டு அவர்களைத் திட்டி, கடினப்படுத்தி, கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்….. நன்மையும், செம்மையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன் (12:20,22,23) என்று இனிய வார்த்தைகளால் வசப்படுத்தி, தேவனிடத்தில் வழிநடத்தவேண்டும்.