April

ஏப்ரல் 15

ஏப்ரல் 15

நான் கர்த்தர். எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய் (ஏசா.49:23).

நமக்கு நேரிடுகிற காரியங்கள் யாவற்றிலும் நாம் வெட்கப்பட்டுப் போய்விடுவோமோ என்று நினைக்கத் தோன்றும். இதைப்பற்றி வேறு யாரும் அறியமாட்டார்கள். இதைப்பற்றி யாருக்கும் அக்கறை இராது. அவர்கள் யாவரும் நமக்கு விரோதமாக இருந்தாலும் சந்தேகப்படவேண்டியதில்லை. இங்கு இவ்வசனத்தின் முன்பகுதியில் உன் கால்களின் தூள் களை நக்குவார்கள் என்று கூறியதின் பொருள் என்ன? எப்படியோ எனக்கு விரோதமாய் நின்றவர்கள் தாழ்ந்துவிடுவார்கள் என்பதுதானே இதன் பொருள். ஆம், இதைப்பற்றித்தான் இவ்வசனம் வலியுறுத்துகிறது.

கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவா என்னை மறந்தார் (வச.14) என்று நாம் கருதும் வேளையில் அவர் நான் மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் (வச.15:16) என்று உறுதியளிக்கிறார். உதவி தேவையென தவிக்கும் நம் பிள்ளைகளை அவர் தமது காயப்பட்ட கரங்களில் வரைந்து என்றும் நினைவில் வைத்துக்கொண்டுள்ளார்.

அவர்களுடைய தேவைகளைச் சந்திக்க தமது ஊழியர்களை அனுப்பி வைக்கிறார். சாறிபாத் விதவையைப் போஷிக்க எலியாவை அனுப்பினதுபோல தாழ்மையுள்ளவர்களுக்கு உதவி செய்ய தமது ஊழியர்களைத் தேவன் அனுப்புகிறார். அவர் யாரை அனுப்புகிறார், எவ்விதம் அனுப்புகிறார் என்பது நமக்குத் தேவையில்லை. அவருக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பது உறுதி. இதைக் கருத்தில் கொண்டு அவருக்கே காத்திருப்போம்.