April

ஏப்ரல் 6

ஏப்ரல் 6

‘தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்”;. (லூக்.11:28)

நம்முடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தைக்கு  முதல் இடம்கொடுக்கவேண்டும் என்பதை இயேசுக்கிறிஸ்து தமது போதனையில் அதிகமாய் வலியுறுத்தியுள்ளார். வானமும் பூமியும் ஓழிந்துபோம். என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை  (லூக்கா 21:33).நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது (யோவான் 6:63). முடிவு பரியந்தம் அவர் இதையே போதித்தார். அவரது நீண்ட ஜெபத்தின்போதும், நீர் எனக்குக்கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக்கொடுத்தேன். அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர்  என்று விசுவாசித்து இருக்கிறார்கள்…….. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன் (யோவான் 17:8,16) என ஜெபித்தார்.

நமது ஆண்டவர் வேதத்தைக் குறித்து தெளிவாகப் போதித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் நாம் கேட்டு, விசுவாசித்து ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியவேண்டும். தேவனுடைய வார்த்தைகளைக்கேட்டு அதன்படி செய்கிறவர்களைக் குறித்து அவர் உவமை ஒன்றைக் கூறி வலியுறுத்தியுள்ளார். இதை நாம் லூக்கா 6:47-49ல் காணலாம். இதில் இருவகையான மக்களைப் பற்றிக்கூறியுள்ளார். இருவகையினரும் வசனத்தைக் கேட்டனர். வெள்ளத்தினால் வீடுகள் சோதிக்கப்பட்டதுபோல் வசனத்தைக் கேட்ட அவ்விருவரும் கீழ்படிதல் மூலம் சோதிக்கப்பட்டனர். ஒருவன் கேட்டான், கீழ்ப்படிந்தான். மற்றவன் கேட்டான் விசுவாசிக்கவில்லை, கீழ்ப்படியவில்லை. அதன் விளைவு தெளிவாகத் தெரிகிறது.

நிச்சயத்தை இழந்தபின்பு தேவனுடைய வார்த்தைகளை நினைவி;ல்கூர்ந்து என்ன பயன்? இந்த வேதவாக்கியங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள ஞானவானாக்கும்.  இதை அறிந்தும் மறுதலித்து ஏற்றுக்கொள்ளாதவன் முடிவு என்னவாகும்.