September

பனையையும் கேதுருவையும் போல

September 17

Like Palm and Cedar

The righteous shall flourish like the palm tree: he shall grow like a cedar in Lebanon. (Psalm 92:12)

These trees are not trained and pruned by man: palms and cedars are “trees of the Lord,” and it is by His care that they flourish. Even so it is with the saints of the Lord: they are His own care. These trees are evergreen and are beautiful objects at all seasons of the year. Believers are not sometimes holy and sometimes ungodly: they stand in the beauty of the Lord under all weathers. Everywhere these trees are noteworthy: no one can gaze upon a landscape in which there are either palms or cedars without his attention being fixed upon these royal growths. The followers of Jesus are the observed of all observers: like a city set on a hill, they cannot be hid.

The child of God flourishes like a palm tree, which pushes all its strength upward in one erect column without a single branch. It is a pillar with a glorious capital. It has no growth to the right or to the left but sends all its force heavenward and bears its fruit as near the sky as possible. Lord, fulfill this type in me.

The cedar braves all storms and grows near the eternal snows, the Lord Himself filling it with a sap which keeps its heart warm and its bough strong. Lord, so let it be with me, I pray Thee. Amen.

செப்டெம்பர் 17

பனையையும் கேதுருவையும் போல

நீதிமான் பனையைப்போல செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருவான் (சங்.92:12).

இந்த மரங்களைமனிதன் விரும்பியபடி கத்தரித்துச் செப்பனிடுவதுமில்லை. இவற்றில் வேண்டாத கிளைகளை அவன் வெட்டி அகற்றுவதுமில்லை. இவை ஆண்டவரின் மரங்கள் அவர் பராமரிப்பில் அவை செழித்து வளருகின்றன. ஆண்டவரின் பரிசுத்தவான்களும் இவ்விதமே அவரால் பராமரிக்கப்படுகிறார்கள். மேலேகுறிப்பிடப்பட்ட மரங்கள் எப்போதும் பசுமையாய் ஆண்டின் எவ்லாப் பருவங்களிலும் அழகாய்க் காணப்படுகின்றன. விசுவாசிகள் சில வேளைகளில் தூய்மை அற்றவர்களாயும் சிலவேளைகளில் தெய்வ பக்தி அற்றவர்களாயும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாக் காலத்திலும் ஆண்டவரின்அழகு உடையவர்களாய் இருக்கிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள் எங்கே இருந்தாலும் அவை கவனிக்கத்தக்கவையாய் இருக்கின்றன. பனை அல்லது கேதுரு ஓங்கி வளர்ந்து நிற்கும் நிலப்பகுதியைப் பார்ப்பவர் எவரும் கம்பீரமான அவற்றின் தோற்றத்தால் கவரப்படாமல்இருப்பதில்லை. மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைக்கப்படாமல் இருப்பது போல இயேசுவைப் பின்பற்றுகிறவர்களும் பார்க்கிறவர்கள் எவராலும் கவனிக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள்.

ஒரு கிளை கூட இல்லாமல் தன் முழு வலுவையும் உயர்ந்து வளரும் ஒரே மரத்தில் இருக்கச்செய்யும் பனைபோல கடவுளின் பிள்ளையும் செழித்து வளருகிறான். அவன் சிறப்பான தலைப்பாகம் உள்ள தூண் போல இருக்கிறான். அவன் ஆற்றல் வலது இடது புறம் செல்வதில்லை. ஆனால் நேரே பரலோகத்தை நோக்கிச் சென்று அதற்கு எவ்வளவு அருகில் கனிகொடுக்க முடியுமோ அவ்வளவுஅருகில் கனி கொடுக்கிறது. ஆண்டவரே நானும் இவ்விதம் ஓங்கி வளரச் செய்யும்.

கேதுரு மரமானது பலத்த காற்றையும் தாங்கிக் கொண்டு எப்போதும் பனிமூடியிருக்கும் மலைகளில் வளருகிறது. அதன் உட்புறம் வெப்பமாயும் அதன் கிளை வலுவானதாயும் இருக்கத்தக்கதாக ஆண்டவரே அதைஉயிர்ச் சாறினால் நிரப்புகிறார். ஆண்டவரே நானும் அவ்விதம் வளர்ந்து நிலைக்கச் செய்யும் என்று வேண்டிக் கொள்கிறேன். ஆமென்!

17. September

„Der Gerechte wird grünen wie ein Palmbaum, er wird wachsen wie eine Zeder auf dem Libanon.“ Ps. 92, 13.

Diese Bäume werden nicht von Menschen gezogen und beschnitten; Palmen und Zedern sind „Bäume des Herrn,“ und seine Sorgfalt ist‘s, durch die sie grünen; ebenso ist es mit den Heiligen des Herrn, Er selbst trägt Sorge für sie. Diese Bäume sind immer grün und schön in allen Jahreszeiten. Gläubige sind nicht zuweilen heilig und zuweilen ungöttlich: sie stehen in allen Wettern in der Schönheit des Herrn da. Überall sind diese Bäume bemerkenswert; niemand kann eine Landschaft betrachten, in der Palmen oder Zedern sind, ohne dass seine Aufmerksamkeit sich auf diese königlichen Gewächse richtet. Die Nachfolger Christi werden von allen Beobachtern beobachtet: gleich einer Stadt, die auf einem Berge liegt, können sie nicht verborgen bleiben.

Das Kind Gottes grünt wie ein Palmbaum, der mit all seiner Kraft nach oben strebt in einer aufrechten Säule ohne einen einzigen Zweig. Er ist ein Pfeiler mit einem herrlichen Knauf. Er hat keinen Auswuchs zur Rechten oder zur Linken, sondern sendet seine ganze Kraft himmelwärts und trägt seine Frucht so nahe dem Himmel wie möglich. Herr, erfülle dieses Vorbild in mir!

Die Zeder trotzt allen Stürmen und wächst nahe beim ewigen Schnee, der Herr selbst füllt sie mit einem Saft, der ihr Herz warm und ihre Zweige stark erhält. Herr, lass es so mit mir sein, ich bitte Dich. Amen.