September

நெரிந்ததும் புகைகிறதும்

September 8

Broken and Smoking

A bruised reed shall he not break, and the smoking flax shall he not quench. (Isaiah 42:3)

Then I may reckon upon tender treatment from my Lord. Indeed, I feel myself to be at best as weak, as pliant, as worthless as a reed. Someone said, “I don’t care a rush for you”; and the speech, though unkind, was not untrue. Alas! I am worse than a reed when it grows by the river, for that at least can hold up its head. I am bruised—sorely, sadly bruised. There is no music in me now; there is a rift which lets out all the melody. Ah, me! Yet Jesus will not break me; and if He will not, then I mind little what others try to do. O sweet and compassionate Lord, I nestle down beneath Thy protection and forget my bruises!

Truly I am also fit to be likened to “the smoking flax,” whose light is gone, and only its smoke remains. I fear I am rather a nuisance than a benefit. My fears tell me that the devil has blown out my light and left me an obnoxious smoke, and that my Lord will soon put an extinguisher upon one. Yet I perceive that though there were snuffers under the law, there were no extinguishers, and Jesus will not quench me; therefore, I am hopeful. Lord, kindle me anew and cause me to shine forth to Thy glory and to the extolling of Thy tenderness.

செப்டெம்பர் 8

நெரிந்ததும் புகைகிறதும்

அவர் நெரிந்த நாணலை முறியாமலும் மங்கி எரிகிற திரியை அணையாமலும்……. வெளிப்படுத்துவார் (ஏசா.42:3).

ஆகையால் என் ஆண்டவர் என்னை அன்போடு நடத்துவார் என்று நான் நம்பலாம். நான் சிறந்தவன் என்று நினைக்கும் போதே நாணலைப்போல் திடமற்று எளிதில் வளையக்கூடியவனாயும், மதிப்பற்றவனாயும் இருப்பதாக உணருகின்றேன். ஒருவர் என்னிடம் நாணலைப்போல் கூடி நான் உன்னை மதிப்பதில்லை என்றார். இது இரக்கமற்ற குறிப்பானாலும் உண்மை அற்றதில்லை. ஏனெனில் ஆற்றில் வளரும் நாணலைவிட நான் கேவலமானவனாயிருக்கிறேன். நாணலாவது தலைதூக்கி நிற்கிறது. நனோ நெரிந்தவனாய் முழுவதும் நெரிந்தவனாய் இருக்கிறேன். இப்போதுஎன்னில் எந்த இசையும் இல்லை. ஒரு பிளவினால் இன்னிசையெல்லாம் சிதறிப் போய்விடுகிறது. ஆயினும் இயேசு என்னை முறித்து விடமாட்டார். அவர் அவ்விதம் செய்யாதிருக்கும் போது மற்றவர்கள் என்ன செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். இனிய இரக்கம் நிறைந்த ஆண்டவரே உம்பாதுகாப்பில் நான் வாழ்ந்து என் காயங்களை மறந்து விடுகிறேன்.

உண்மையாகவே என்னை மங்கியெரியும் திரிக்கும் ஒப்பிட முடியும். அதில் வெளிச்சம் இல்லை புகை மட்டும் இருக்கிறது. நான் நன்மை செய்பவனாய் இராமல் தொந்தரவு கொடுப்பவனாகவே இருக்கிறேன்.சாத்தான் அருவருப்பான புகையை மட்டும் விட்டு விட்டு என் ஒளியை மங்கிவிடச் செய்துள்ளான் என்றும், சீக்கிரத்தில் ஆண்டவர் என்னை அணைத்து விடுவார் என்றும் பயப்படுகிறேன். சட்டப்படி திரியைக் கத்தரித்து விடுபவர்களைப் போன்றவர்கள் இருந்தாலும் அணைந்து விடுபவர்கள்இல்லையென்றே கண்டிருக்கிறேன். இயேசு என் ஒளியை அணைக்க மாட்டார். ஆகையால் நான் நம்பிக்கை உள்ளவனாய் இருக்கின்றேன். ஆண்டவரே, என் திரியை மறுபடியும் கொளுத்தி நான் உம் மகிமைக்கென்றும் உம் இரக்கத்தைப் புகழ்வதற்கென்றும் வாழச்செய்யும்.

8. September

„Das zerstoßene Rohr wird Er nicht zerbrechen, und den glimmenden Docht wird Er nicht auslöschen.“ Jes. 42, 3.

Dann kann ich auf sanfte Behandlung von meinem Herrn rechnen. In der Tat, ich fühle mich, im besten Falle, so schwach, so biegsam, so wertlos wie ein Rohr. Jemand sagte: „Ich gebe kein Binsenrohr um dich,“ und das Wort war, obwohl unfreundlich, doch nicht unwahr. Ach! ich bin schlimmer als ein Rohr, wenn es am Fluss wächst, denn das kann wenigstens den Kopf aufrecht halten. Ich bin zerstoßen, zutiefst, traurig zerstoßen. Es ist jetzt kein Klang in mir; es ist eine Spalte da, durch die alle Melodie entweicht. Weh mir! Doch Jesus will mich nicht zerbrechen, und wenn Er es nicht will, so kümmere ich mich wenig darum, was andere zu tun versuchen. O, huldreicher und mitfühlender Herr, ich flüchte mich unter Deinen Schutz und vergesse meine Wunden.

Wahrlich, ich kann auch sehr wohl „dem glimmenden Docht“ verglichen werden, von dem das Licht geschwunden und nur der Rauch geblieben ist. Ich fürchte, eher lästig als nützlich zu sein. Meine Furcht sagt mir, dass der Teufel mein Licht ausgeblasen und mich als einen beißenden Rauch zurückgelassen habe, und dass mein Herr mir bald das Löschhorn aufsetzen werde. Doch bemerke ich, dass, obwohl es unter dem Gesetz Lichtschnäuzen gab, doch keine Löschhörner da waren *); und Jesus will mich nicht auslöschen; deshalb bin ich hoffnungsvoll. Herr, zünde mich aufs Neue an und lass mich leuchten zu Deiner Ehre.

*) 2. Mose 37, 23. „Lichtschnäuzen und Lichtschnäuzenteller“, nach der englischen Übersetzung. (Anm.d.Üb.)