September

நான் எங்கிருந்தாலும் என்னோடிருப்பார்

September 5

With Me Wherever I Am

The Lord will be with you. (2 Chronicles 20:17)

This was a great mercy for Jehoshaphat, for a great multitude had come out against him; and it will be a great mercy for me, for I have great need, and I have no might or wisdom. If the Lord be with me, it matters little who may desert me. If the Lord be with me, I shall conquer in the battle of life, and the greater my trials the more glorious will be my victory. How can I be sure that the Lord is with me?

For certain He is with me if I am with Him. If I trust in His faithfulness, believe His words, and obey His commands, He is assuredly with me. If I am on Satan’s side, God is against me and cannot be otherwise; but if I live to honor God, I may be sure that He will honor me.

I am quite sure that God is with me if Jesus is my sole and only Savior. If I have placed my soul in the hands of God’s only-begotten Son, then I may be sure that the Father will put forth all His power to preserve me, that His Son may not be dishonored.

Oh, for faith to take hold upon the short but sweet text for today! O Lord, fulfill this word to Thy servant! Be with me in the house, in the street, in the field, in the shop, in company, and alone. Be Thou also with all Thy people.

செப்டெம்பர் 5

நான் எங்கிருந்தாலும் என்னோடிருப்பார்

கர்த்தர் உங்களோடே இருக்கிறார் (2 நாளா.20:17).

இது யோசபாத்துக்குக் கிடைத்த பெரிய கிருபை. ஏனெனில், அவனுக்குஎதிராகப் பெருங்கூட்டத்தார் வந்திருந்தார்கள். எனக்கும் இது பெரிய கிருபையாகும். ஏனெனில், நான் தேவையில் இருக்கிறேன் எனக்கு ஆற்றலோ ஞானமோ இல்லை. ஆண்டவர் என்னோடு இருந்தால் என்னை விட்டு யார் பிரிந்துபோய் விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. வாழ்க்கைப்போரில் நான் வெற்றி பெறுவேன். என் சோதனைகள் எவ்வளவு பெரியவையாய் இருக்கின்றனவோ அவ்வளவு மகத்தானதாய் என் வெற்றி இருக்கும். ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்பதை நான் எப்படி நிச்சயமாய் அறியலாம்?

நான் அவரோடு இருந்தால் அவர் நிச்சயமாய் என்னோடுஇருக்கிறார். அவர் உண்மையுள்ளவர் என்று நான் நம்பி, அவர் வார்த்தைகளை விசுவாசித்து, அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவர் நிச்சயமாக என்னோடிருக்கிறார். நான் சாத்தானின் பக்கம் இருந்தால் தேவன் எனக்கு விரோதமாயிருப்பார். அவர் அப்படித்தான் இருக்கமுடியும்.ஆண்டவருக்கு மகிமையாக நான் வாழ்ந்தால் அவர் என்னை மகிமைப்படுத்துவார்.

இயேசுவே என் இரட்சகராயிருந்தால் கடவுள் என்னோடு இருக்கிறார் என்கிற நிச்சயம் எனக்கு உண்டு. கடவுளின் ஒரே பேறான குமாரனின் கையில் என் ஆன்மாவை ஒப்படைத்து விட்டால் அவர் குமாரன்அவமானப்பட்டுவிடாதபடி என்னைக் காப்பாற்ற அவர் ஆற்றலையெல்லாம் பயன்படுத்துவார் என்று நான் நிச்சயமாய் நம்பலாம்.

சுருக்கமானதாயிருந்தாலும் பொருள் புதைந்துள்ளதான இந்த வசனத்தை இன்று நான் நம்பினால் எவ்வளவு நன்றாயிருக்கும். ஆண்டவரே, உம் அடியானில்இந்த வாக்குறுதியை நிறைவேற்றும். என்னோடு வீட்டிலும், தெருவிலும், வயல்வெளியிலும், கடைத்தெருவிலும், பலரோடு இருக்கும் போதும், தனியாய் இருக்கும் போதும் இரும். உம்முடைய மக்கள் எல்லோரோடும் இரும்.

5. September

„Der Herr ist mit euch.“ 2. Chron. 20, 17.

Dies war eine große Gnade für Josaphat, denn eine große Menge war wider ihn ausgezogen; und es wird eine große Gnade für mich sein, denn ich bin in großer Not und ich habe weder Macht noch Weisheit. Wenn der Herr mit mir ist, so macht es wenig aus, wer mich verlässt. Wenn der Herr mit mir ist, so werde ich siegen in dem Kampf des Lebens, und je größer meine Prüfungen, desto herrlicher wird mein Sieg sein. Wie kann ich mich versichert halten, dass der Herr mit mir ist?

Sicherlich ist Er mit mir, wenn ich mit Ihm bin. Wenn ich auf seine Treue baue, seinen Worten glaube und seinen Geboten gehorche, so ist Er sicher mit mir. Wenn ich auf Satans Seite bin, so ist Gott gegen mich und es kann nicht anders sein; aber wenn ich lebe, um Gott zu ehren, so kann ich gewiss sein, dass Er mich ehren wird.

Ich bin ganz gewiss, dass Gott mit mir ist, wenn Jesus mein einziger und alleiniger Heiland ist. Wenn ich meine Seele in die Hände des eingebornen Sohnes Gottes gelegt habe, so kann ich sicher sein, dass der Vater alle seine Macht gebrauchen wird, mich zu bewahren, damit sein Sohn nicht verunehrt werde.

O, dass ich Glauben hätte, den kurzen, aber süßen Spruch für den heutigen Tag fest zu ergreifen. O Herr, erfülle dieses Wort an Deinem Knecht! Sei mit mir in dem Hause, in der Straße, in dem Felde, in dem Laden, in Gesellschaft und allein. Sei auch mit all den Deinen.