October

வேலை முடியும்வரை இறவாப்புகழ்

October 31

Immortal Till Work Done

I shall not die, but live, and declare the works of the Lord. (Psalm 118:17)

A fair assurance this! It was no doubt based upon a promise, inwardly whispered in the psalmist’s heart, which he seized upon and enjoyed. Is my case like that of David? Am I depressed because the enemy affronts me? Are there multitudes against me and few on my side? Does unbelief bid me lie down and die in despair-a defeated, dishonored man? Do my enemies begin to dig my grave?

What then? Shall I yield to the whisper of fear, and give up the battle, and with it give up all hope? Far from it. There is life in me yet: “I shall not die.” Vigor will return and remove my weakness: “I shall live.” The Lord lives, and I shall live also. My mouth shall again be opened: “I shall declare the works of Jehovah.” Yes, and I shall speak of the present trouble as another instance of the wonder-working faithfulness and love of the Lord my God. Those who would gladly measure me for my coffin had better wait a bit, for “the Lord hath chastened me sore, but he hath not given me over unto death.” Glory be to His name forever! I am immortal till my work is done. Till the Lord wills it, no vault can close upon me.

ஒக்டோபர் 31

வேலை முடியும்வரை இறவாப்புகழ்

நான் சாவாமல் பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன் (சங்.118:17).

இது தெளிவான வாக்குறுதியாகும். இதுசங்கீதக்காரனின் இதயத்தில் இரகசியமாய்க் கூறப்பட்ட மறை உரையாகும். அவர் அதை நம்பி, அனுபவித்து மகிழ்ச்சி அடைந்தார். என் நிலையும் தாவீதைப்போல் இருக்கிறதா? எதிரி நேர்முகமாக அவமதிப்பதால் நான் சோர்வுற்றிருக்கிறேனா? எனக்கு எதிராக எண்ணிக்கைஅற்றவர்களும் என் பக்கமாகச் சிலருமே இருக்கிறார்களா? நம்பிக்கையின்மை என்னைத் தோல்வியும் அவமானமும் அடைந்த மனிதனாகப் படுத்து தளர்ச்சியினால் மரித்துவிட ஏவுகிறதா? பகைவர் என் கல்லறையைத் தோண்டுகிறார்களா?

அப்படியானால் என்ன? பயத்தின் மறைஉரைக்கு நான்செவிகொடுத்து போர்செய்வதை நிறுத்தி, அதோடு எல்லா நம்பிக்கையையும் இழந்து விடலாமா? அவ்விதம் செய்யவே மாட்டேன். இன்னும் என்னில் உயிர் இருக்கிறது நான் சாகமாட்டேன். நான் மறுபடியும் வலிமை அடைந்து என் பெலவீனம் நீங்கப்பெறுவேன். நான் பிழைத்திருப்பேன் என்ஆண்டவர் உயிரோடிருக்கிறார். நானும் உயிரோடு இருப்பேன் என் வாய் மறுபடியும் திறக்கப்பட்டு நான் யேகோவாவின் செய்கைகளை விவரிப்பேன். ஆம் இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள தொல்லை என் ஆண்டவராகிய கடவுளின் வியப்பளிக்கும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் மற்றுமொருஎடுத்துக்காட்டாகும். என் சவப்பெட்டியின் அளவெடுப்பவர்கள் சிறிது காத்திருக்க வேண்டியதிருக்கும். ஏனெனில் கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும் என்னைச் சாவுக்கு ஒப்புக் கொடுக்கவில்லை. அவர் நாமத்துக்கு எப்போதும் மகிமை உண்டாவதாக! என்வேலை முடியும்வரை நான்இறவாப்புகழோடு இருப்பேன். ஆண்டவர் குறித்திருக்கும் காலத்துக்கு முன் எந்தக் கல்லறையும் என்னை ஏற்றுக் கொள்ள முடியாது.

31. Oktober

„Ich werde nicht sterben, sondern leben und des Herrn Werk verkündigen.“ Ps. 118, 17.

Eine erwünschte Zusicherung ist dies! Sie war ohne Zweifel auf eine Verheißung gegründet, die innerlich dem Herzen des Psalmisten zugeflüstert wurde, die er ergriff und sich ihrer erfreute. Bin ich in gleichem Fall wie David? Bin ich niedergedrückt, weil der Feind mich übermütig behandelt? Sind große Mengen gegen mich und wenige auf meiner Seite? Heißt der Unglaube mich niederliegen und in Verzweifl ung sterben – ein besiegter, entehrter Mann? Beginnen meine Feinde mein Grab zu graben?

Was denn? Soll ich den Einflüsterungen der Furcht folgen, den Kampf und damit alle Hoffnung aufgeben? Weit entfernt. Es ist noch Leben in mir! „Ich werde nicht sterben.“ Die Kraft wird wiederkehren und meine Schwäche beseitigen. „Ich werde leben.“ Der Herr lebt und ich werde auch leben. Mein Mund soll wiederum aufgetan werden. „Ich werde das Werk Jehovahs verkünden.“ Ja, und ich werde von den gegenwärtigen Leiden sprechen als von einem anderen Beispiel der wunderwirkenden Treue und Liebe des Herrn, meines Gottes. Die, welche mir gern Maß zu meinem Sarg nehmen möchten, täten besser daran, ein wenig zu warten; denn „der Herr züchtigt mich wohl, aber Er gibt mich dem Tode nicht“. Ehre sei seinem Namen auf ewig! Ich bin unsterblich, bis mein Werk getan ist. Bis der Herr es will, kann kein Grabgewölbe sich über mir schließen.