October

வெளிச்சத்தின் அறுவடை மகிழ்ச்சி

October 23

Harvest of Light, Gladness

Light is sown for the righteous, and gladness for the upright in heart. (Psalm 97:11)

Righteousness is often costly to the man who keeps to it at all hazards, but in the end it will bear its own expenses and return an infinite profit. A holy life is like sowing seed: much is going out, and apparently it is buried in the soil, never to be gathered up again. We are mistaken when we look for an immediate harvest; but the error is very natural, for it seems impossible to bury light. Yet light is “sown,” says the text. It lies latent: none can see it; it is sown. We are quite sure that it must one day manifest itself.

Full sure are we that the Lord has set a harvest for the sower of light, and they shall reap it, each man for himself. Then shall come their gladness. Sheaves of joy for seeds of light. Their heart was upright before the Lord, though men gave them no credit for it, but even censured them: they were righteous, though those about them denounced them as censorious. They had to wait, as husbandmen wait for the precious fruits of the earth: but the light was sown for them, and gladness was being prepared on their behalf by the Lord of the harvest.

Courage, brothers! We need not he in a hurry. Let us in patience possess our souls, for soon shall our souls possess light and gladness.

ஒக்டோபர் 23

வெளிச்சத்தின் அறுவடை மகிழ்ச்சி

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது (சங்.97:11).

நீதியின் பாதையில் செல்ல துணிந்து முயற்சி செய்பவன் முதலில் இடர் அடைந்தாலும் இறுதியில் இடரெல்லாம் நீங்கப் பெற்று பயனும் அடைவான். தூயவாழ்க்கை விதைப்பதைப் போன்றது. பார்வைக்கு எல்லாம் மறுபடியும் சேர்க்கப்படுவதற்கு ஏற்றதாயிராமல்பூமிக்குள் புதைக்கப்பட்டது போல் காணப்படும். அதன் பலனை உடனே அறுவடை செய்வோம் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. ஆனால் அத்தவறு இயற்கையானதே. ஏனெனில் வெளிச்சத்தை பூமிக்குள் புதைத்து வைக்கமுடியாது. ஆயினும் மேலே கொடுக்கப்பட்ட வசனத்தில் வெளிச்சம்விதைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது வெளியில் காணப்படாமலிருக்கிறது. அதை விதைக்கப்பட்டிருப்பதால் யாரும் அதைப்பார்க்க முடியாது. ஒருநாள் அது தன்னை வெளிப்படுத்தும் என்று நாம் நிச்சயமாய் நம்பலாம்.

வெளிச்சத்தை விதைப்பவர்களுக்குஅறுவடையை ஆண்டவர் ஏற்படுத்தி இருக்கிறார். ஒவ்வொருவரும் தங்களுக்காக அறுவடை செய்வார்கள். பின் மகிழ்ச்சி உண்டாகும். வெளிச்சத்தின் விதைகள் மகிழ்ச்சி என்னும் கதிர்களை வளரச்செய்யும். அவர்கள் நேர்மையைக்குறித்து மனிதர் அவர்களைப் பாராட்டாவிட்டாலும் அவர்களைக்கண்டித்தாலும் கடவுளுக்கு முன் அவர்கள் நேர்மையாய் நடந்தார்கள். சுற்றியுள்ளவர்கள் அவர்கள் குற்றம் கண்டுபிடிக்கிறவர்கள் என்று பழித்துரைத்தாலும் அவர்கள் நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள். பூமியின் அரிய பலனைக்காண விவசாயிகள் காத்திருப்பது போல் அவர்கள் காத்திருக்கவேண்டியதாயிருந்தது. ஆனால் அவர்களுக்காக வெளிச்சம் விதைக்கப்பட்டது. அறுவடையின் ஆண்டவரால் அவர்கள் சார்பில் மகிழ்ச்சி ஆயத்தம்பண்ணப்பட்டது.

சகோதரரே தைரியம் கொள்ளுங்கள். நாம் அவசரப்படவேண்டியதில்லை. பொறுமையுடன் நம் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்வோமாக. ஏனெனில் சீக்கரத்தில் நம் ஆத்துமாக்கள் வெளிச்சத்தையும் மகிழ்ச்சியையும் அடையும்.

23. Oktober

„Licht ist gesät für die Gerechten, und Freude für die aufrichtigen Herzen.“ Ps. 97, 11.

Gerechtigkeit kostet dem oft viel, der auf alle Gefahr hin daran festhält, aber am Ende wird sie die Kosten einbringen und einen unendlichen Gewinn liefern. Ein heiliges Leben gleicht dem Säen des Samens: viel wird ausgeworfen und scheinbar ist es im Boden begraben, um nie wieder eingesammelt zu werden. Wir irren uns, wenn wir eine sofortige Ernte erwarten; aber der Irrtum ist sehr natürlich, denn es scheint unmöglich, Licht zu begraben. Doch das Licht wird „gesät“, sagt der Text. Es liegt verborgen: Niemand kann es sehen, es ist gesät. Wir sind ganz gewiss, dass es sich eines Tages offenbaren muss.

Völlig gewiss sind wir, dass der Herr eine Ernte bestimmt hat für die Säer des Lichtes und dass sie dieselbe einheimsen sollen, ein jeder für sich selbst. Dann wird ihre Freude kommen. Garben der Freude für Samen des Lichtes. Ihr Herz war aufrichtig vor dem Herrn, obwohl die Menschen dies nicht glauben wollten und sie sogar tadelten: sie waren gerecht, obwohl ihre Umgebung sie als tadelsüchtig verklagte. Sie hatten zu warten, wie der Ackersmann auf die köstlichen Früchte der Erde wartet: aber das Licht war für sie gesät, und Freude war für sie bereitet vom Herrn der Ernte.

Mut, Brüder, wir brauchen nicht in Hast zu sein. Lasst uns „in Geduld unsere Seelen besitzen“, denn bald sollen unsere Seelen Licht und Freude besitzen.