October

அவர் வாக்குறுதியைக் குறித்து மன்றாடுதல்

October 22

Plead His Own Promise

Thou, O Lord God, hast spoken it: and with thy blessing let the house of thy servant be blessed for ever. (2 Samuel 7:29)

This is a promise pleaded, and so it yields double instruction to us. Anything which the Lord God has spoken we should receive as surely true and then plead it at the throne.

Oh, how sweet to quote what our own God has spoken! How precious to use a “therefore,” which the promise suggests, as David does in this verse!

We do not pray because we doubt but because we believe. To pray unbelievingly is unbecoming in the Lord’s children. No, Lord, we cannot doubt Thee: we are persuaded that every word of Thine is a sure foundation for the boldest expectation. We come to Thee and say, “Do as Thou hast said.” Bless Thy servant’s house. Heal our sick; save our hesitating ones; restore those who wander; confirm those who live in Thy fear. Lord, give us food and raiment according to Thy Word. Prosper our undertakings; especially succeed our endeavors to make known Thy gospel in our neighborhood. Make our servants Thy servants, our children Thy children. Let the blessing flow on to future generations, and as long as any of our race remains on earth may they remain true to Thee. O Lord God, “let the house of thy servant be blessed.”

ஒக்டோபர் 22

அவர் வாக்குறுதியைக் குறித்து மன்றாடுதல்

கர்த்தரான ஆண்டவரான தேவரீர் அதைச்சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக (2.சாமு.7:29).

இது கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை எடுத்துக்கூறி மன்றாடுவதனால் நமக்கு இரண்டு மடங்கு போதனை அளிக்கிறது. ஆண்டவராகிய தேவன் கூறிய எல்லாம் உண்மையென்று நாம் ஏற்றுக்கொண்டு கிருபாசனத்தின் முன் எடுத்துக் கூறி மன்றாடவேண்டும்.

நமக்குஉரியவரான தேவன் கூறியதை மேற்கோளாக எடுத்துக் கூறுவது எவ்வளவு இனிமையானது என்று நினைத்துப் பாருங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தில் முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் நடுவில் ஆகையால் என்னும் வார்த்தை இருப்பது போல் தாவீது மன்றாடுகிறார்.

நாம்சந்தேகப்படுவதால் அல்லாமல் நம்புவதாலே ஜெயிக்கிறோம். நம்பிக்கையில்லாமல் ஜெயிப்பது ஆண்டவரின் பிள்ளைகளுக்கு ஏற்றதல்ல. ஆம் ஆண்டவரே நாங்கள் உம்மேல் சந்தேகம் கொள்ள முடியாது. நாங்கள் தைரியமாக எதிர்பார்ப்பதற்கெல்லாம் உம்முடைய ஒவ்வொரு வார்த்தையும்திடமான ஆதாரம் என்று நம்ப ஏவப்படுகிறோம். நாங்கள் உம்மண்டை வந்து நீர் சொன்னபடி செய்யும். என்று கேட்கிறோம். உம் ஊழியக்காரனுடைய வீட்டை ஆசீர்வதியும். எங்களில் நோயுற்றவர்களைச் சுகப்படுத்தும். தயக்கம் உற்றவர்களை இரட்சியும். வழிவிலகி அலைந்து திரிபவர்களைமீட்டுக் கொள்ளும். உமக்குப் பயந்து வாழ்பவர்களை நிலைநாட்டியருளும். ஆண்டவரே உம் வார்த்தையின்படி எங்களுக்கு உணவும் உடையும் அளியும். நாங்கள் செய்வதெல்லாம் வளம்பெறச் செய்யும். முக்கியமாக எங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு நற்செய்தியை எடுத்துச் சொல்லும். எங்கள்முயற்சியில் வெற்றியடையச் செய்யும். எங்கள் வேலைக்காரரை உம் வேலைக்காரரும் எங்கள் பிள்ளைகளை உம் பிள்ளைகளும் ஆக்கும். எங்கள் பின் சந்ததியார் மேலும் உம் ஆசீர்வாதம் இருப்பதாக! இவ்வுலகில் எங்கள் சந்ததியார் இருக்கும் வரை அவர்கள் உமக்கு உண்மையுள்ளவர்களாய்வாழ்வார்களாக! ஆண்டவரே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக!

22. Oktober

„Denn Du, Herr, hast es geredet, und mit Deinem Segen lass Deines Knechtes Haus gesegnet werden ewiglich.“ 2. Sam. 7, 29.

Dies ist eine Verheißung, die geltend gemacht wird, und uns deshalb doppelt lehrreich ist. Alles, was Gott, der Herr, geredet hat, sollten wir als fest und wahr annehmen und es dann am Thron geltend machen.

O, wie süß ist es, das anzuführen, was unser Gott gesprochen hat. Wie köstlich, ein „denn“ zu gebrauchen, das sich darauf bezieht, wie David es in diesem Vers tut!

Wir beten nicht, weil wir zweifeln, sondern weil wir glauben. Ungläubig beten ist nicht geziemend für Kinder des Herrn. Nein, Herr, wir können nicht an Dir zweifeln: wir sind überzeugt, dass jedes Deiner Worte ein sicherer Grund für die kühnste Erwartung ist. Wir kommen zu Dir und sprechen: „Tue, wie Du gesagt hast“. Segne das Haus Deines Knechtes. Heile unsere Kranken; errette unsere Zaudernden; bringe die Verirrten zurück, kräftige die, welche in Deiner Furcht leben. Herr, gib uns Nahrung und Kleidung nach Deinem Wort. Fördere unsere Unternehmungen; insbesondere lass unsere Bemühungen gelingen, Dein Evangelium in unserer Nachbarschaft kund zu machen. Mache unsere Diener zu Deinen Dienern, unsere Kinder zu Deinen Kindern. Lass den Segen weiter strömen zu den künftigen Generationen, und solange welche aus unserem Geschlecht auf der Erde bleiben, mögen sie Dir treu bleiben. O Herr Gott, „lass Deines Knechtes Haus gesegnet werden.“