October

ஒருபோதும் வெட்கமடைய மாட்டோம்

October 14

Never Ashamed

Whosoever therefore shall confess me before men, him will I confess also before my Father which is in heaven. (Matthew 10:32)

Gracious promise! It is a great joy to me to confess my Lord. Whatever my faults may be, I am not ashamed of Jesus, nor do I fear to declare the doctrines of His cross. O Lord, I have not hid Thy righteousness within my heart.

Sweet is the prospect which the text sets before me! Friends forsake and enemies exult, but the Lord does not disown His servant. Doubtless my Lord will own me even here and give me new tokens of His favorable regard. But there comes a day when I must stand before the great Father. What bliss to think that Jesus will confess me then! He will say, “This man truly trusted Me and was willing to be reproached for My name’s sake; and therefore I acknowledge him as Mine.” The other day a great man was made a knight, and the Queen handed him a jeweled garter; but what of that? It will be an honor beyond all honors for the Lord Jesus to confess us in the presence of the divine Majesty in the heavens. Never let me be ashamed to own my Lord. Never let me indulge a cowardly silence or allow a fainthearted compromise. Shall I blush to own Him who promises to own me?

ஒக்டோபர் 14

ஒருபோதும் வெட்கமடைய மாட்டோம்

மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன் அறிக்கை பண்ணுவேன் (மத்.10:32).

இது கிருபை நிறைந்த வாக்குறுதியாகும். என் ஆண்டவரை அறிக்கை பண்ணுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய தவறுகள் எவையானாலும் நான் இயேசுவைக் குறித்து வெட்கமடைவதில்லை. அவர் சிலுவையின் கோட்பாடுகளை பலர் அறியக் கூறவும் அஞசுவதில்லை.ஆண்டவரே உம் நீதியை நான் என் இதயத்துள் இரகசியமாக வைக்கவில்லை.

மேலே கூறப்பட்டுள்ள வாக்குறுதி எனக்கு எடுத்துச் சொல்லும் எதிர்கால வாய்ப்பு மகிழ்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. நண்பர் கைவிட்டு விடுகிறார்கள். பகைவர் மகிழ்ச்சியடைகிறார். ஆனால் ஆண்டவர் அவர்ஊழியக்காரனை ஏற்க மறுப்பதில்லை. சந்தேகத்துக்கு இடமின்றி இங்கு என் ஆண்டவர் என்னை ஏற்றுக் கொண்டு அவர் என்மேல் தயவாய் இருப்பதைப் புதிய அடையாளங்களினால் காட்டுவார். ஆனால் நான் சிறப்பு வாய்ந்த பிதாவின் முன் நிற்க வேண்டிய நாள் வருகின்றது. அந்நாளில் இயேசுஎன்னை அறிக்கை பண்ணுவார் என்பது எப்பேற்பட்ட பேறாகும்! அவர் இவன் உண்மையாகவே என்னை விசுவாசித்து என் நாமத்திற்காக நிந்திக்கப்பட ஆயத்தமாயிருந்தான். ஆகையால் இவன் என்னுடையவன் என்று நான் அறிக்கையிடுகிறேன் என்பார். முன்பு ஒரு நாள் பெரியவர் ஒருவர் ஆங்கிலஅரசின் சிறப்புப் பட்டம் பெற்றார். அப்பட்டத்தின் சின்னத்தை அரசி அவருக்கு அளித்தார். அதனாலென்ன பரலோகத்தில் இருக்கிற பிதாவின் முன்பாக இயேசு நம்மை அறிக்கை பண்ணுவது எல்லா சிறப்புகளிலும் மேலானதாகும். என் ஆண்டவரை அறிக்கை பண்ண நான் ஒருநாளும்வெட்கப்படாமல் இருப்பேனாக! அறிக்கை பண்ணுவதற்கு அஞ்சிக் கோழைத்தனத்தினால் ஒருநாளும் அமைதியாக இருந்து விடாதிருப்பேனாக, அல்லது தளர்ந்த உள்ளத்துடன் சமரசம் பண்ணாதிருப்பேனாக! என்னை அறிக்கை பண்ணுவதாக வாக்குக் கொடுப்பவரை அறிக்கை பண்ண நான்வெட்கப்படாமல் இருப்பேனாக !

14. Oktober

„Wer mich bekennt vor den Menschen, den will ich bekennen vor meinem himmlischen Vater.“ Mt. 10, 32.

Gnadenvolle Verheißung! Es ist eine große Freude für mich, meinen Herrn zu bekennen. Was auch meine Fehler sein mögen, ich schäme mich nicht meines Jesu und fürchte mich auch nicht, die Lehren von seinem Kreuz zu verkünden. O Herr, ich habe nicht Deine Gerechtigkeit in meinem Herzen verborgen.

Süß ist die Aussicht, die der Text mir eröffnet! Freunde verlassen mich und Feinde frohlocken, aber der Herr verleugnet seinen Knecht nicht. Ohne Zweifel wird der Herr mich auch hier noch anerkennen und mir neue Zeichen seiner Gunst geben. Aber es kommt ein Tag, wo ich vor dem großen Vater stehen muss. Was für eine Seligkeit, zu denken, dass Jesus mich dann bekennen will! Er wird sagen: „Dieser Mann vertraute mir wahrhaft und war willig, um meines Namens willen Schmach zu leiden: und deshalb erkenne ich ihn als den meinen an.“ Vor nicht langer Zeit wurde ein großer Mann zu einem Ritter gemacht und die Königin übergab ihm ein mit Juwelen besetztes Hosenband; aber was ist das? Es wird eine Ehre über alle Ehren sein, wenn der Herr Jesus uns bekennt in Gegenwart der göttlichen Majestät in dem Himmel. Möge ich mich nie schämen, meinen Herrn zu bekennen. Lasst mich nie feige schweigen oder einem schwachherzigen Kompromiss zustimmen. Soll ich mich schämen, dass Er zu mir gehört, der verheißt, dass ich zu Ihm gehöre?