October

ஒருபோதும் தனிமையாய் இருப்பதில்லை

October 8

Never Alone

Thou shalt no more be termed Forsaken. (Isaiah 62:4)

“Forsaken” is a dreary word. It sounds like a knell. It is the record of sharpest sorrows and the prophecy of direst ills. An abyss of misery yawns in that word forsaken. Forsaken by one who pledges his honor! Forsaken by a friend so long tried and trusted! Forsaken by a dear relative! Forsaken by father and mother! Forsaken by all! This is woe indeed, and yet it may be patiently born if the Lord will take us up.

But what must it be to feel forsaken of God? Think of that bitterest of cries, “My God, my God, why hast thou forsaken me?” Have we ever in any degree tasted the wormwood and the gall of “forsaken” in that sense? If so, let us beseech our Lord to save us from any repetition of so unspeakable a sorrow. Oh, that such darkness may never return! Men in malice said of a saint, “God hath forsaken him; persecute and take him.” But it was always false. The Lord’s loving favor shall compel our cruel foes to eat their own words or, at least, to hold their tongues.

The reverse of all this is that superlative word Hephzibah “the Lord delighteth in thee.” This turns weeping into dancing. Let those who dreamed that they were forsaken hear the Lord say, “I will never leave thee nor forsake thee.”

ஒக்டோபர் 08

ஒருபோதும் தனிமையாய் இருப்பதில்லை

நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்பட்டாலும்….. (ஏசா.62:4).

கைவிடப்பட்டவள் என்பது கவர்ச்சியற்ற ஒரு சொல்லாகும்.அது சாவு மணியோசையைப் போன்றது. அது தாங்கொணா மனத்துயரம் அனுபவித்ததைக் குறிக்கிறது. இனி வரும் கொடிய தீங்கை முன் அறிவிக்கின்றது. கைவிடப்பட்டவள் என்னும் வார்த்தை ஆழ்துயரைக் குறிக்கிறது. தன் உயர் ஒழுக்க நெறியைக் குறித்து வாக்குறுதி கொடுத்தவரால்கைவிடப்பட்டதையும் நெடுங்காலம் நெருங்கிப் பழகி நம்பியிருந்த நண்பனால் கைவிடப்பட்டதையும் அருமையான உறவினர் ஒருவரால் கைவிடப்பட்டதையும் பெற்றோரால் கைவிடப்பட்டதையும் எல்லாராலும் கைவிடப்பட்டதையும் குறிக்கிறது. இவ்விதம் நேர்ந்தால் இது உண்மையாகவே கடுந்துயர்ஆகும். ஆயினும் ஆண்டவர் நம்மை ஆதரித்தால் நாம் இதைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளலாம்.

ஆனால் கடவுள் கைவிடப்பட்டதாக உணர்ந்தால் எப்படியிருக்கும்? என் தேவனே என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னும் பரிதாபமான சத்தத்தை நினைவு படுத்திப்பாருங்கள். அந்தவிதமாகக் கைவிடப்பட்டதாக நாம் எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா? அப்படியானால் அவ்விதமான சொல்லொணாத் துயர் மறுபடியும் நேரிடாமல் காப்பாற்றுமாறு ஆண்டவரைக் கெஞ்சிக் கேட்போமாக! அவ்விதமான இருண்ட காலம் மறுபடியும் ஒருபோதும் வராதிருப்பதாக! ஒருபரிசுத்தவானைக் குறித்து மக்கள் வன்மத்துடன் தேவன் அவனைக் கைவிட்டார் அவனைத் தொடர்ந்து பிடியுங்கள் என்றார்கள். ஆனால் அது ஒருபோதும் உண்மையான கூற்றாக இல்லை. ஆண்டவரின் அன்பு நிறைந்த கருணை கொடியவரான நம் பகைவரை அவர்கள் சொன்ன சொல் தவறு என்று மனமார ஒப்புக்கொள்ளச் செய்யும் அல்லது அவ்விதம் பேசாது இருக்கவாவது செய்யும்.

இவ்விதமான நிலைக்கு மாறானது எப்சிபா – கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார் என்பது. இது அழுகையை ஆடல்பாடலாக மாற்றுகிறது. தாங்கள் கைவிடப்பட்டு விட்டதாகக் கனவு கண்டவர்கள் ஆண்டவர் நான்உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொல்வதைக் கேட்கட்டும்.

8. Oktober

„Du sollst nicht mehr „Verlassen“ heißen.“ Jes. 62, 4.

„Verlassen“ ist ein trauriges Wort. Es klingt wie eine Totenglocke. Es erzählt von den tiefsten Schmerzen und weissagt die schwersten Übel. Ein Abgrund von Elend gähnt in diesem Wort „Verlassen“. Verlassen von einem, der sich mit seiner Ehre verbürgte! Verlassen von einem Freund, den wir so oft geprüft, und dem wir so lange vertraut haben! Verlassen von einem lieben Verwandten! Verlassen von Vater und Mutter! Verlassen von allen! Dies ist in der Tat ein Weh, und doch kann es ertragen werden, wenn der Herr uns aufnimmt.

Aber was muss es sein, sich von Gott verlassen zu fühlen? Denkt an jenen bittersten aller Rufe: „Mein Gott, mein Gott, warum hast Du mich verlassen?“ Haben wir je in irgendwelchem Grade den Wermut und die Galle des „Verlassen“ in diesem Sinne geschmeckt? Wenn das, so lasst uns den Herrn bitten, uns vor der Rückkehr eines so unaussprechlichen Schmerzes zu bewahren. O, dass solche Finsternis niemals wiederkäme! Wahrlich, die Menschen sprachen in Bosheit: „Gott hat Ihn verlassen; jagt nach und ergreift Ihn.“ Aber das war stets falsch, und des Herrn liebevolle Huld wird unsere grausamen Feinde zwingen, ihre Worte zurückzunehmen oder wenigstens ihren Mund zu halten.

Das Gegenteil von all diesem ist jenes erhabene Wort „Hephzibah“: „der Herr hat Lust an dir“. Dies wandelt das Weinen in Tanzen. Mögen die, welche wähnen, verlassen zu sein, den Herrn sagen hören: „Ich will dich nicht verlassen noch versäumen.“