October

ஆற்றல் வாய்ந்த காந்தம்

October 4

The Mighty Magnet

And I, if I be lifted up from the earth, will draw all men unto me. (John 12:32)

Come, ye workers, be encouraged. You fear that you cannot draw a congregation. Try the preaching of a crucified, risen, and ascended Savior; for this is the greatest “draw” that was ever yet manifested among men. What drew you to Christ but Christ? What draws you to Him now but His own blessed self? If you have been drawn to religion by anything else, you will soon be drawn away from it; but Jesus has held you and will hold you even to the end. Why, then, doubt His power to draw other? Go with the name of Jesus to those who have hitherto been stubborn and see if it does not draw them.

No sort of man is beyond this drawing power. Old and young, rich and poor, ignorant and learned, depraved or amiable—all men shall feel the attractive force. Jesus is the one magnet. Let us not think of any other. Music will not draw to Jesus, neither will eloquence, logic, ceremonial, or noise. Jesus Himself must draw men to Himself; and Jesus is quite equal to the work in every case. Be not tempted by the quackeries of the day; but as workers for the Lord work in His own way, and draw with the Lord’s own cords. Draw to Christ, and draw by Christ, for then Christ will draw by you.

அக்டோபர் 4

ஆற்றல் வாய்ந்த காந்தம்

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன். யோவான் 12:32

ஊழியக்காரரே, வந்துஊக்கமடையுங்கள். உங்கள் போதனையைக் கேட்க பலர் கூடமாட்டார்கள் என்று அஞ்சுகிறீர்கள். சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடு எழுந்து, பரலோகத்துக்கு ஏறிப்போன இரட்சகரைப் பற்றிக் கூறுங்கள். மனிதரைக் கவர்ந்து இழுக்க வெளிப்படுத்தப்பட்ட முறைகளில் இதுவேசிறந்தது ஆகும். கிறிஸ்துவேயல்லாமல் வேறு யார் உங்களைக் கிறிஸ்து வண்டை இழுத்தார். இப்போது அவரேயல்லாமல் வேறு யார் உங்களை அவரண்டை இழுக்கிறார்? வேறு எதனாலாவது இழுக்கப்பட்டு நீங்கள் கடவுளை நம்பியிருந்தால் கூடிய சீக்கிரத்தில் அந்த நம்பிக்கையிலிருந்து வேறுஒன்றுக்கு இழுக்கப்பட்டுவிடுவீர்கள். ஆனால் இயேசு உங்களை உறுதியாகப் பற்றிக் பிடித்திருக்கிறார். இறுதிவரை இழுத்துப் பிடித்திருப்பார். அப்படியானால் மற்றவர்களை இழுத்துப் பிடிக்க அவருக்கு வல்லமை இருக்கிறதா என்று ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? இதுவரை பிடிவாதமாய்இருந்தவர்களிடம் இயேசுவின் நாமத்தை அறிவித்து, அதனால் அவர்கள் இழுக்கப்படுகிறார்களா இல்லையா என்று பாருங்கள்.

இந்த ஆற்றலால் கவரப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முதியோரானாலும், வாலிபரானாலும், படிப்பறிவு இல்லாதவர்கள்ஆனாலும், படித்தவர்கள் ஆனாலும், மோசமானவர்கள் ஆனாலும், மனத்துக்கு இனியவர்கள் ஆனாலும் எல்லாரும் இழுக்கும் அதன் காந்த சக்தியை உணர்ந்தவர்கள். இயேசுவே ஒரே காந்தம் ஆனவர். வேறு எதைப்பற்றியும் நாம் நினைக்காமல் இருப்போமாக. இசையோ, பேச்சுத்திறமையோ, காரசாரமான வாதங்களோ, சடங்காசாரங்களோ, அதிகமான சப்தமோ நம்மை இயேசுவண்டை இழுக்க முடியாது. இயேசுவே எல்லாரையும் தம்மண்டை இழுத்துக்கொள்ளவேண்டும். அதைச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு. இக்காலத்தில் போலியான முறைகளினால் ஏமாற்றப்படாமல்இருங்கள். ஆண்டவரின் ஊழியக்காரராக அவர் முறைகளை உபயோகித்து, ஆண்டவரின் சக்தியால் இழுங்கள். கிறிஸ்துவால் கிறிஸ்துவண்டை இழுங்கள். அப்படியானால் கிறிஸ்து உங்களண்டை வருவார்.

4.Oktober

„Und ich, wenn ich erhöht werde von der Erde, so will ich sie alle zu mir ziehen.“ Joh. 12, 32.

Kommt, ihr Arbeiter, fasst Mut. Ihr fürchtet, dass ihr keine Hörer herbeiziehen könnt. Versucht es mit der Predigt von einem gekreuzigten, auferstandenen und zum Himmel aufgefahrenen Heiland; denn die „zieht“ mehr als irgendetwas andres, was sich je unter den Menschen kund gegeben hat. Was zog euch zu Christus, als Christus? Was zieht euch jetzt zu Ihm, als seine eigene, teure Persönlichkeit? Wenn ihr durch irgendetwas anderes zur Religion gezogen worden seid, so werdet ihr bald wieder davon weggezogen werden; aber Jesus hat euch gehalten und wird euch bis ans Ende halten. Warum wollt ihr denn an seiner Macht zweifeln, andere zu ziehen? Geht mit dem Namen Jesus zu den Halsstarrigen, und seht, ob der sie nicht ziehen wird.

Keine Art von Menschen ist über diese ziehende Macht hinaus. Alte und Junge, Reiche und Arme, Unwissende und Gelehrte, Tiefgesunkene oder Liebenswürdige – alle Menschen sollen die Anziehungskraft fühlen. Jesus ist der eine Magnet. Lasst uns nicht an einen anderen denken. Musik wird nicht zu Jesus ziehen und ebensowenig Beredsamkeit, Logik, Zeremoniell oder Lärm. Jesus selber muss die Menschen zu sich selber ziehen; und Jesus ist durchaus imstande zu diesem Werk in allen Fällen. Lasst euch nicht verführen durch die Quacksalbereien der Gegenwart, sondern arbeitet als Arbeiter für den Herrn in seiner eigenen Weise und zieht mit des Herrn eigenen Seilen. Zieht zu Christus und zieht durch Christus, denn alsdann wird Christus durch euch ziehen.