October

நித்திய வீட்டுக்குப் போகிற வழியில் ஆறுதல்

October 2

Comfort En Route Home

And Joseph said unto his brethren, I die: and God will surely visit you, and bring you out of this land unto the land which he swore to Abraham, to Isaac, and to Jacob. (Genesis 50:24)

Joseph had been an incarnate providence to his brethren. All our Josephs die, and a thousand comforts die with them. Egypt was never the same to Israel after Joseph was dead, nor can the world again be to some of us what it was when our beloved ones were alive.

But see how the pain of that sad death was alleviated! They had a promise that the living God would visit them. A visit from Jehovah! What a favor! What a consolation! What a heaven below! O Lord, visit us this day; though indeed we are not worthy that Thou shouldest come under our roof.

But more was promised: the Lord would bring them out. They would find in Egypt a cold welcome when Joseph was dead; nay, it would become to them a house of bondage. But it was not to be so forever; they would come out of it by a divine deliverance and march to the land of promise. We shall not weep here forever. We shall be called home to the gloryland to join our dear ones. Wherefore, “comfort one another with these words.”

ஒக்டோபர் 02

நித்திய வீட்டுக்குப் போகிற வழியில் ஆறுதல்

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன். ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப்போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி……… (ஆதி.50:24).

யோசேப்பு தன் சகோதரருக்கு மனித உருவில் காணப்பட்ட கடவுள் போன்றவர். நமக்கும் யோசேப்பைப் போன்றவர்கள் யாவரும்இறந்துவிடலாம். அவர்கள் நமக்கு அளித்து வந்த ஆறுதல்; தேறுதலும் அவர்களோடு இல்லாமற்போய்விடும். யோசேப்பு மரித்தபின் இஸ்ரவேலுக்கு எகிப்து ஒருபோதும் யோசேப்பு உயிரோடு இருந்தபோது இருந்ததுபோல் இல்லை. அதேபோல் நம்மில் சிலருக்கும், நமக்கு அருமையானவர்கள்உயிரோடு இருந்தபோது இருந்ததுபோல் உலகம் இருக்காது.

துக்கம் தரும் அப்பேர்ப்பட்ட மரணத்தினால் ஏற்பட்ட வேதனை எவ்விதமாகக் குறைக்கப்பட்டது என்று பாருங்கள். எப்போதும் உயிரோடிருக்கும் கடவுள் அவர்களைச் சந்திப்பார் என்னும் வாக்குறுதிகொடுக்கப்பட்டது. யேகோவா அவர்களைச் சந்திப்பார். அது எப்படிப்பட்ட சலுகை என்றும், ஆறுதல் அளிக்கும் செய்தி என்றும். பூலோகத்திற்குப் பரலோகம் வந்தது போன்ற நிகழ்ச்சி என்றும் நினைத்துப் பாருங்கள். ஆண்டவரே, நீர் எங்களிடம் வர நாங்கள் தகுதிஅற்றவர்கள், என்றாலும் இன்று எங்களைச் சந்தியும்.

இவ்வளவு மட்டுமல்ல இன்னும் சிறப்பானவையும் வாக்குப்பண்ணப்பட்டன. கடவுள் அவர்களை அந்தத் தேசத்தை விட்டு….போகப்பண்ணுவார். யோசேப்பு மரணம் அடைந்தபின் எகிப்தியர் முகஞ்சுளித்தேஅவர்களுக்கு வரவேற்பு அளிப்பார்கள் என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். அது அவர்களுக்கு அடிமைத்தனத்தின் வீடாகவே இருக்கும், ஆனால் எப்போதைக்கும் அப்படி இருக்காது. கடவுள் அவர்களுக்கு அந்தத் தேசத்திலிருந்து விடுதலை அளித்து, தான் ஆபிரகாமுக்கும்,ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார். நாம் நித்தியமாக இங்கு இருந்து, அழுதுகொண்டிருக்கமாட்டோம். நமக்கு அன்பானவர்களோடு சேர்ந்துகொள்ள மகிமையான நாட்டுக்குச் செல்வோம். ஆகையால் இந்தவார்த்தைகளினாலே ஒருவரையோருவர் தேற்றுங்கள்.

2. Oktober

„Und Joseph sprach zu seinen Brüdern: Ich sterbe, und Gott wird euch heimsuchen, und aus diesem Lande führen in das Land, das Er Abraham, Isaak und Jakob geschworen hat.“ 1. Mose 50, 24.

Joseph war eine menschgewordene Vorsehung für seine Brüder gewesen. All unsere Josephe sterben, und tausend Annehmlichkeiten sterben mit ihnen. Ägypten war niemals für Israel das, was es früher gewesen war, nachdem Joseph gestorben ist; und die Welt kann für manche von uns niemals wieder das sein, was sie war, als unsere Lieben noch lebten.

Aber seht, wie der Schmerz um diesen traurigen Todesfall gemildert wurde! Sie hatten eine Verheißung, dass der lebendige Gott sie heimsuchen würde. Eine Heimsuchung Jehovahs! Welche Gunst! Welcher Trost! Was für ein Himmel hienieden! O Herr, suche uns diesen Tag heim; obwohl wir dessen, in der Tat, nicht würdig sind, dass Du unter unser Dach kommst.

Aber mehr noch war verheißen: der Herr wollte sie ausführen. Sie würden in Ägypten eine kalte Behandlung finden, wenn Joseph tot wäre, ja, es würde für sie ein Haus der Knechtschaft werden. Aber es sollte nicht so für immer sein; sie würden durch eine göttliche Befreiung herauskommen und nach dem verheißenen Land ziehen. Wir sollen nicht für immer hier weinen. Wir sollen heimgerufen werden ins Land der Herrlichkeit, um mit unseren Lieben vereint zu werden; So tröstet euch nun untereinander mit diesen Worten.