October

அவர் நினைவில் இருக்கும் உடன்படிக்கை

October 1

A Covenant He Remembers

He hath given meat unto them that fear him: he will ever be mindful of his covenant. (Psalm 111:5)

Those who fear God need not fear want. Through all these long years the Lord has always found meat for His own children, whether they have been in the wilderness, or by the brook Cherith, or in captivity, or in the midst of famine. Hitherto the Lord has given us day by day our daily bread, and we doubt not that He will continue to feed us till we want no more.

As to the higher and greater blessings of the covenant of grace, He will never cease to supply them as our case demands. He is mindful that He made the covenant and never acts as if He regretted it. He is mindful of it when we provoke Him to destroy us. He is mindful to love us, keep us, and comfort us, even as He engaged to do. He is mindful of every jot and tittle of His engagements, never suffering one of His words to fall to the ground.

We are sadly unmindful of our God, but He is graciously mindful of us. He cannot forget His Son who is the surety of the covenant, nor His Holy Spirit who actively carries out the covenant, nor His own honor, which is bound up with the covenant. Hence the foundation of God standeth sure, and no believer shall lose his divine inheritance, which is his by a covenant of salt.

ஒக்டோபர் 1

அவர் நினைவில் இருக்கும் உடன்படிக்கை

தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார். தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார் (சங்.111:5).

கடவுளுக்குப் பயந்தவர்கள் வேலையிலிருக்க நேரிட்டு விடுமோ என்றுஅச்சங்கொள்ளவேண்டியதில்லை. கடந்த ஆண்டுகளில் எல்லாம் தம் சொந்தப் பிள்ளைகள் வனாந்தரத்தில் இருந்தாலும், கேரீத் ஆற்றண்டையில் இருந்தாலும், சிறையிருப்பில் இருந்தாலும், பஞ்சத்தை அனுபவித்தாலும் ஆண்டவர் அவர்களுக்கு ஆகாரம் கொடுத்துவந்திருக்கிறார். நமக்கு இதுவரை அன்றன்றைக்குத் தேவையான ஆகாரத்தை அளித்து வந்திருக்கிறார். நமக்கு இனிமேல் ஆகாரம் தேவையில்லை என்னும் காலம்வரை தொடர்ந்து கொடுத்து வருவார் என்பதைக் குறித்து நாம் ஐயப்படவேண்டியதில்லை.

கிருபையின் உடன்படிக்கையின்படி அவர் வாக்குப் பண்ணியிருக்கும் உயர்வானவையும் சிறப்பானவையுமான ஆசீர்வாதங்களை நமக்குத் தேவையானவரை அளிக்கத் தவறமாட்டார். அவர் செய்துள்ள உடன்படிக்கையை நினைவில் வைத்துள்ளார். அதைக் குறித்து துக்கப்படுவது போல் ஒரு நாளும்நடந்துகொள்ளமாட்டார். நம்மை அழித்துவிடத் தூண்டத்தக்கதாக நாம் எரிச்சல் மூட்டும் போதுகூட அவர் தம் உடன்படிக்கையை நினைப்பார். அவர் வாக்குறுதி செய்துள்ளதுபோல் நம்மை நேசிக்கவும், பாதுகாக்கவும், ஆறுதல்படுத்தவும் வேண்டும் என்பதை நினைவில்வைத்துள்ளார். அவர் செய்வதாகச் சொல்லியுள்ள ஒவ்வொரு சிறு செயலையும் ஞாபகத்தில் வைத்து, அவற்றில் ஒன்றைக்கூடச் செய்யாமல் இருக்கமாட்டார்.

நாமோ நம் கடவுளை நினைப்பதில்லை. அவர் கிருபையாக நம்மை நினைத்துக்கொண்டேயிருக்கிறார். உடன்படிக்கையின் அச்சாரமான அவர் குமாரனையும், உடன்படிக்கையைச் செயல்படுத்தும் பரிசுத்த ஆவியானவரையும் உடன்படிக்கையோடு தொடர்புள்ள அவர் புகழையும் ஒரு நாளும் மறக்கமாட்டார். ஆகவே கடவுளின் அஸ்திபாரம் உறுதியாய் இருக்கிறது. மாறாத உடன்படிக்கையின்படி தன்னுடையதாயிருக்கும் சுதந்தரத்தை எந்த விசுவாசியும் இழப்பதில்லை.

1. Oktober

„Er gibt Speise denen, so Ihn fürchten; Er gedenket ewiglich an seinen Bund.“ Ps. 111, 5.

Die, welche Gott fürchten, brauchen keinen Mangel zu fürchten. Alle diese langen Jahre hindurch hat der Herr immer Speise für seine eigenen Kinder gefunden, ob sie in der Wüste waren oder am Bache Krith oder in der Gefangenschaft oder inmitten der Teuerung. Bisher hat der Herr uns Tag für Tag unser tägliches Brot gegeben, und wir zweifeln nicht, dass Er fortfahren wird, uns zu speisen, bis wir nichts mehr bedürfen.

Mit den höheren und größeren Segnungen des Gnadenbundes aber will Er nie aufhören, uns zu versorgen, je nachdem unsere Lage es erfordert. Er gedenkt daran, dass Er den Bund machte und handelt nie, als wenn Er dies bereute. Er gedenkt daran, wenn wir Ihn erzürnen und Ihn reizen, uns zu verderben. Er gedenkt daran, uns zu lieben, zu behüten und zu trösten, wie Er sich verpfl ichtet hat zu tun. Er gedenkt an jedes Jota und jeden Titel seiner Verpfl ichtungen und lässt nie eines seiner Worte auf die Erde fallen.

Wir gedenken leider wenig an unseren Gott, aber Er gedenkt gnädig an uns. Er kann nicht seinen Sohn vergessen, welcher der Bürge des Bundes ist, noch seinen Heiligen Geist, durch dessen Wirken der Bund in Ausführung gebracht wird, noch seine eigene Ehre, welche mit dem Bund eng verknüpft ist. Deshalb steht der Grund Gottes fest, und kein Gläubiger, soll das göttliche Erbteil verlieren, das sein ist durch einen Salzbund.