November

கர்த்தர் ஒருநாளும் கைவிடமாட்டார்

November 17

God Never Forsakes

For the Lord will not cast off his people, neither will he forsake his inheritance. (Psalm 94:14)

No, nor will He cast even so much as one of them. Man has his castoffs, but God has none; for His choice is unchangeable, and His love is everlasting. None can find out a single person whom God has forsaken after having revealed Himself savingly to him.

This grand truth is mentioned in the psalm to cheer the heart of the afflicted. The Lord chastens His own; but He never forsakes them. The result of the double work of the law and the rod is our instruction, and the fruit of that instruction is a quieting of spirit, a sobriety of mind, out of which comes rest. The ungodly are let alone till the pit is digged into which they will fall and be taken; but the godly are sent to school to be prepared for their glorious destiny hereafter. Judgment will return and finish its work upon the rebels, but it will equally return to vindicate the sincere and godly. Hence we may bear the rod of chastisement with calm submission; it means not anger, but love.

God may chasten and correct,

But He never can neglect;

May in faithfulness reprove,

But He ne’er can cease to love.

நவம்பர் 17

கர்த்தர் ஒருநாளும் கைவிடமாட்டார்

கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்திரத்தைக் கைவிடாமலும் இருப்பார் (சங்.94:14).

அவர் மக்களில் ஒருவரைக்கூட அவர் நெகிழவிடமாட்டார். மனிதன் நெகிழவிடுவான். ஆனால் கடவுள் ஒருபோதும் ஒருவரையும் நெகிழவிடமாட்டார். அவர் தெரிந்து கொள்கிறவர்களை மாற்றிக் கொண்டே இருக்க மாட்டார். அவர்கள்மேல் அவர் காட்டும் அன்பு நித்தியமானஅன்பு ஒருவருக்குத் தாம் இரட்சகர் என்று வெளிப்படுத்தின பின் அவரைக் கைவிட்டதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. அல்லல்படுகிறவர்களின் இதயங்களை மகிழ்ச்சியாக்கவே சிறப்பான இந்த உண்மை சங்கீதத்தில் கூறப்பட்டிருக்கிறது. தமச்குச் சொந்தமானவர்களை ஆண்டவர் தண்டித்துத்திருத்துகிறார். ஆனால் ஓருபோதும் அவர்களைக் கைவிடுவதில்லை. நமக்குப் போதிப்பதற்காகவே கற்பனைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அந்தப் போதனையின் விளைவு அமைதிப்படுத்தப்பட்ட ஆவியும் சமநிலை அடைந்த மனமுமாகும். இவற்றினால் இளைப்பாறுதல் பெறுகிறோம். தெய்வபயம்அற்றவர்கள் விழவேண்டிய குழி தோண்டப்பட்டு அவர்கள் அதில் விழும்வரை அவர்கள் செயலில் தலையிடுவதில்லை. ஆனால் தெய்வபயமுள்ள கடவுளின் மக்கள் இனிமேல் அவர்கள் அடையப்போகும் மகிமையான நிலைக்கு ஆயத்தம் பண்ணப்படுவதற்காக கற்றுக் கொள்ள அனுப்பப்படுகிறார்கள். கலகம்செய்கிறவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனையடைவார்கள். அதேவிதமாக பக்தியுள்ளவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் உரிமை நிறுவப்படும். ஆகவே நாம் தண்டிக்கப்பட்டு திருத்தப்படும்போது அமைதியாகப் பணிந்து போவது நல்லது. அது சினத்தையல்ல அன்பையே காட்டுகிறது.

கடவுள் தண்டித்துத் திருத்தலாம்
ஆயினும் ஒருநாளும் புறக்கணிக்க மாட்டார்
அன்பினால் கடிந்துரைக்கலாம்
ஆயினும் நேசிப்பதை நிறுத்தமாட்டார்