November

வாய்க்கால்களை வெட்டுங்கள்

November 4

You Make the Trenches

And he said, Thus saith the Lord, Make this valley full of ditches. For thus saith the Lord, Ye shall not see wind, neither shall ye see rain; yet that valley shall be filled with water, that ye may drink both ye, and your cattle, and your beasts. (2 Kings 3:16-17)

Three armies were perishing of thirst, and the Lord interposed. Although He sent neither cloud nor rain, yet He supplied an abundance of water. He is not dependent upon ordinary methods but can surprise His people with novelties of wisdom and power. Thus are we made to see more of God than ordinary processes could have revealed. Although the Lord may not appear for us in the way we expect, or desire, or suppose, yet He will in some way or other provide for us. It is a great blessing for us to be raised above looking to secondary causes so that we may gaze into the face of the great First Cause.

Have we this day grace enough to make trenches into which the divine blessing may flow? Alas! We too often fail in the exhibition of true and practical faith. Let us this day be on the outlook for answers to prayer. As the child who went to a meeting to pray for rain took an umbrella with her, so let us truly and practically expect the Lord to bless us. Let us make the valley full of ditches and expect to see them all filled.

நவம்பர் 04

வாய்க்கால்களை வெட்டுங்கள்

அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால் வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள். மழையையும் காணமாட்டீர்கள். ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருக ஜீவன்களும்குடிக்கும்படிக்கு இந்தப்பள்ளத்தாக்கு நீரினால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (2.இராஜா.3:16-17).

மூன்று சேனைகள் தாகத்தால் ஆற்றல் இழந்து கொண்டிருந்தன. ஆண்டவர்இச்சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார். அவர் மேகத்தையாவது மழையையாவது அனுப்பாவிட்டாலும் மிகுதியான தண்ணீர் கிடைக்கச் செய்தார். அவர் சாதாரண முறைகளைப் பயன்படுத்துவதில்லை. அவர் ஞானத்தையும் ஆற்றலையும் நவீனமான முறைகளில் வெளிப்படுத்துவார். சாதாரண முறைகள் அவரைவெளிப்படுத்துவதை விட இந்த முறைகள் கடவுளை நாம் அதிகமாய்க் கண்டறிய உதவும். நான் எதிர்பார்க்கும் அல்லது விரும்பும் அல்லது ஊகிக்கும் முறையில் ஆண்டவர் வெளிப்படாவிட்டாலும் ஏதாவது ஒரு முறையில் நமக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பார். நமக்குக் கிடைக்க வேண்டுமென்றுவிரும்புகிறவற்றையே பற்றி நினைத்துக் கொண்டிராமல் அவற்றைக் கொடுக்கிறவரின் அருள்முகத்தையே நோக்கிப்பார்க்கும் நிலைக்கு நம்மை உயர்த்திருப்பது பெரிய ஆசீர்வாதம் ஆகும்.

இன்று ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்கள் பொழிந்து பெருக்கெடுத்து ஓடத்தக்கதாகவாய்க்கால்கள் வெட்டப் போதுமான கிருபை நமக்கு இருக்கிறதா? ஐயோ, நாம் பலதடவை உண்மையான நடைமுறைக்குரிய விசுவாசத்தை எடுத்துக்காட்டத் தவறிவிடுகிறோம். இந்த நாளிலே நம் ஜெபத்திற்கு பதிலாகக் கிடைக்கப் போகிறவைகளை நம்பிக்கையோடு எதிர்நோக்கிஇருப்போமாக! மழைக்காக ஜெபம் செய்யக் கூட்டத்திற்கு சென்ற ஒரு சிறுமி குடையை எடுத்துச் சென்றது போல இன்று உண்மையாகவே ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்னும் விசுவாசத்தோடு இருப்போமாக! பள்ளத்தாக்கிலெங்கும் வாய்க்கால்களை வெட்டி அவை நிரப்பப்படும் என்று நம்பிஇருப்போமாக!

4. November

„Und Er sprach: So spricht der Herr: Macht dieses Tal voller Gräben. Denn so spricht der Herr: Ihr werdet keinen Wind noch Regen sehen; dennoch soll das Tal voll Wasser werden, dass ihr und euer Gesinde und euer Vieh trinkt.“ 2. Kön. 3, 16. 17.

Drei Heere waren nahe daran zu verdursten, und der Herr trat dazwischen. Obgleich Er weder Wolke noch Regen sandte, versorgte Er sie doch reichlich mit Wasser. Er ist nicht von den gewöhnlichen Methoden abhängig, sondern kann sein Volk durch neue Wege der Weisheit und der Macht überraschen. Auf diese Art sehen wir mehr von Gott, als ein gewöhnliches Verfahren uns offenbart haben könnte. Obgleich der Herr nicht für uns erscheint in der Weise, wie wir es erwarten oder wünschen oder voraussetzen, will Er dennoch in der einen oder anderen Weise für uns sorgen. Es ist ein großer Segen für uns, über das Sehen auf die Mittelursachen hinausgehoben zu werden, so dass wir in das Angesicht der großen Ersten Ursache schauen.

Haben wir heute Gnade genug, Gräben zu machen, in welche der göttliche Segen fl ießen kann? Ach! wir legen zu oft keinen wahren und praktischen Glauben an den Tag. Lasst uns heute nach Erhörungen von Gebeten aussehen. Wie das Kind, das zu einer Versammlung ging, wo um Regen gebetet werden sollte, einen Regenschirm mit sich nahm, so lasst uns wahrhaft und praktisch erwarten, dass der Herr uns segnen werde. Lasst uns das Tal voller Gräben machen und erwarten, sie alle gefüllt zu sehen.