May

சுகம் பெறுவதற்கு அறுவை சிகிச்சை

May 14

Surgery for Healing

Come, and let us return unto the Lord: for he hath torn, and he will heal us; he hath smitten, and he will bind us up. (Hosea 6:1)

It is the Lord’s way to tear before He heals. This is the honest love of His heart and the sure surgery of His hand. He also bruises before He binds up, or else it would be uncertain work. The law comes before the gospel, the sense of need before the supply of it. Is the reader now under the convincing, crushing hand of the Spirit? Has he received the spirit of bondage again to fear? This is a salutary preliminary to real gospel healing and binding up.

Do not despair, dear heart, but come to the Lord with all thy jagged wounds, black bruises, and running sores. He alone can heal, and He delights to do it. It is our Lord’s office to bind up the brokenhearted, and He is gloriously at home at it. Let us not linger but at once return unto the Lord from whom we have gone astray. Let us show Him our gaping wounds and beseech him to know His own work and complete it. Will a surgeon make an incision and then leave his patient to bleed to death? Will the Lord pull down our old house and then refuse to build us a better one? Dost Thou ever wantonly increase the misery of poor anxious souls? That be far from Thee, O Lord.

மே 14

சுகம்  பெறுவதற்கு அறுவை சிகிச்சை

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள். நம்மைப் பீறினார். அவரே நம்மைக் குணமாக்குவார். நம்மை அடித்தார். நம்முடைய காயங்களைக் கட்டுவார் (ஓசி.6:1).

சுகம் அளிக்கு முன் பீறுவது ஆண்டவரின் வழியாகும். இது அவர் உள்ளத்தின் உண்மையான அன்பும் சுகம் அளிப்பதற்கு அவர் கைகளினால் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையும் ஆகும். காயங்களைக் கட்டுமுன் புண்படுத்துகிறார். இல்லையெனில் அது உறுதியில்லாத வேலையாகும். நற்செய்தி கொடுக்கப்படுமுன் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. தேவை நிறைவு செய்யப்படுமுன் அது தேவை என்னும் உணர்வு அவசியம். இதை வாசிப்பவர் இன்று ஆவியின் உறுதிப்பாடான அழுத்தும் கரங்களின் கீழ் இருக்கிறாரா? அல்லது பயம்கொள்வதற்கு அடிமைத் தனத்தின் ஆவியை மீண்டும் பெற்றிருக்கிறாரா? சுகம் பெறுவோம் நம் காயங்கள் கட்டப்படும் என்னும் நற்செய்தியைப் பெறுவதற்கு அழுத்தும் கரங்களின் கீழ் இருப்பது முன் ஏற்பாடு ஆகும்.

என் உள்ளமே சோர்ந்து போகாதே தாறுமாறாகக் கிழிக்கப்பட்ட உன் காயங்களோடும் கன்றிப்போன காயங்களோடும் சீழ்ப்படிந்துள்ள புண்ணோடும் ஆண்டவரிடம் வா அவரே குணப்படுத்தக் கூடியவர். அவர் மகிழ்ச்சியோடு அதைச் செய்வார். நொறுங்குண்ட இதயத்தின் காயத்தைக் கட்டுவது நம் ஆண்டவரின் பணியாகும். அதில் அவர் நன்கு பழக்கப்பட்டவராயிருக்கிறார். நாம் தாமதிக்க வேண்டியதில்லை. ஆண்டவரை விட்டுத் தூரம் விலகிப் போயிருந்தால் உடனே அவரிடம் திரும்பி விடுவோமாக. இரணமாயிருக்கும் நம் காயங்களை அவரிடம் காட்டி அவரே அவற்றைச் சுகப்படுத்தக்கூடும் என்று எடுத்துக்கூறி குணப்படுத்தச் சொல்லி வேண்டிக் கொள்வோமாக. அறுவைச் சிகிச்சை செய்யும் வைத்தியர் யாரும் காயத்தைக் கீறிவிட்டு நோயாளி இரத்தம் இழந்து மரணம் அடையவிட்டு விடுவாரா? ஆண்டவர் நம் பழைய வீட்டை இடித்துப்போட்டு அதை விட நல்ல  வீட்டைக் கட்ட மறுத்துவிடுவாரா? கவலை நிறைந்த ஏழை ஆத்துமாக்களின் துயரத்தை வேண்டுமென்றே அதிகமாக்குவாரா? ஆண்டவரே அது உமக்கு வெகு தூரமாயிருப்பதாக !

14. Mai

„Kommt, wir wollen wieder zum Herrn; denn Er hat uns zerrissen, Er wird uns auch heilen; Er hat uns geschlagen, Er wird uns auch verbinden.“ Hos. 6, 1.

Es ist des Herrn Weise, zu zerreißen ehe Er heilt. Das ist die aufrichtige Liebe seines Herzens und die sichere Heilkunst seiner Hand. Er schlägt, ehe Er verbindet, sonst würde es ein ungewisses Werk sein. Das Gesetz kommt vor dem Evangelium; das Gefühl der Bedürftigkeit vor der Gabe. Ist der Leser jetzt unter der überführenden, zermalmenden Hand des Geistes? Hat er den knechtischen Geist empfangen, dass er sich abermals fürchten muss? Dies ist eine heilsame Vorbereitung auf das wirkliche Heilen und Verbinden des Evangeliums.

Verzweifle nicht, liebes Herz, sondern komme zu dem Herrn mit all deinen zackigen Wunden, schwarzen Beulen und eiternden Geschwüren. Er allein kann heilen, und Er freut sich, es zu tun. Es ist unseres Herrn Amt, die zerbrochenen Herzen zu verbinden, und Er versteht es trefflich. Lasst uns nicht zögern, sondern sofort wieder zum Herrn kommen, von dem wir uns verirrt haben. Lasst uns Ihm unsere klaffenden Wunden zeigen und Ihn bitten, Hand an sein Werk zu legen und es zu vollenden. Wird ein Wundarzt schneiden und dann seinen Kranken zu Tode bluten lassen? Wird der Herr unser altes Haus niederreißen und sich dann weigern, uns ein besseres zu bauen? Vermehrst Du je unnötigerweise das Elend armer, geängstigter Seelen? Das sei ferne von Dir, o Herr.