March

தாழ்மை உள்ளவர்களுக்குக் கிருபை

March 22

Grace for the Humble

He giveth grace unto the humble. (James 4:6)

Humble hearts seek grace, and therefore they get it. Humble hearts yield to the sweet influences of grace, and so it is bestowed on them more and more largely. Humble hearts lie in the valleys where streams of grace are flowing, and hence they drink of them. Humble hearts are grateful for grace and give the Lord the glory of it, and hence it is consistent with His honor to give it to them.

Come, dear reader, take a lowly place. Be little in thine own esteem, that the Lord may make much of thee. Perhaps the sigh breaks out, “I fear I am not humble.” It may be that this is the language of true humility. Some are proud of being humble, and this is one of the very worst sorts of pride. We are needy, helpless, undeserving, hell-deserving creatures, and if we are not humble we ought to be. Let us humble ourselves because of our sins against humility, and then the Lord will give us to taste of His favor. It is grace which makes us humble, and grace which finds in this humility an opportunity for pouring in more grace. Let us go down that we may rise. Let us be poor in spirit that God may make us rich. Let us be humble that we may not need to be humbled but may be exalted by the grace of God.

மார்ச் 22           

தாழ்மை உள்ளவர்களுக்குக் கிருபை

தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (யாக்.4:6).

தாழ்மையான இருதயங்கள் கிருபையை நாடிச் செல்வதினால் அதைப் பெறுகின்றன. தாழ்மையான இருதயங்கள் கிருபையின் சக்திக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதினால் அவைகளுக்கு அதிகமான கிருபை அளிக்கப்படுகிறது. தாழ்மையான இருதயங்கள் கிருபையின் ஓடைகள் பாயும் பள்ளத்தாக்குகளில் தங்கியிருப்பதினால் கிருபையை அனுபவிக்கின்றன. தாழ்மையான இருதயங்கள் கிருபைக்காக நன்றி உள்ளவைகளாயிருந்து, ஆண்டவருக்குக் கிருபை அளிப்பது அவர் மேன்மைக்கு ஏற்றதாயிருக்கிறது.

இதை வாசிப்பவரே, வாரும். தாழ்மையான இடத்தை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவர் உமக்கு முக்கியத்துவம் அளிக்கத்தக்கதாக நீர் முக்கியத்துவம் அற்றவரென்று எண்ணிக்கொள்ளும். ஒருவேளை நீர் பெருமூச்சோடு நான் தாழ்மையுள்ளவன் அல்ல என்றே நினைக்கிறேன் என்று சொல்லலாம். ஒருவேளை உண்மையான தாழ்மை உள்ளவர்களே இவ்விதம் நினைக்கலாம். சிலர் தாங்கள் தாழ்மையாய் இருப்பதாக பெருமை கொள்ளுகிறார்கள். இது மிகவும் கேவலமான பெருமையாகும். நாம் தேவையில் இருப்பவர்களும், உதவியற்றவர்களும், தகுதியற்றவர்களும், நரகத்திற்கே தகுதி உள்ளவர்களும் ஆனவர்கள். ஆகையால் நம்மில் தாழ்மை இல்லாவிடில் நாம் தாழ்மை உள்ளவர்கள் ஆவது அவசியம். தாழ்மை அற்றவர்களாய் நாம் செய்துள்ள பாவங்களுக்காக நம்மைத் தாழ்த்தலாம். அப்படிச்செய்தால் ஆண்டவர் அவர் தயவை நாம் அனுபவிக்கச்செய்வார். கிருபைiயே நம்மைத் தாழ்மை உள்ளவர்கள் ஆக்குகிறது. கிருபையே இந்தத் தாழ்மையோடு இன்னும் அதிகமான தாழ்மை அளிக்கப்படும் வாய்ப்பைக் கண்டுபிடிக்கிறது. நாம் உயர்வதற்காகத் தாழ்மையாய் இருப்போமாக. கடவுள் நம்மை வளம்பெற்றவர்கள் ஆக்குவதற்காக நாம் ஆவியில் எளிமை உள்ளவர்கள் ஆவோமாக. நாம் தாழ்த்தப்படாமல், கடவுளின் கிருபையால் உயர்த்தப்படும்படியாகத் தாழ்மை உள்ளவர்களாய் இருப்போமாக.

23. März

„Den Demütigen gibt Er Gnade.“ Jak. 4, 6.

Demütige Herzen suchen Gnade und erhalten sie deshalb. Demütige Herzen geben sich den lieblichen Einfl üssen der Gnade hin, und deshalb wird sie ihnen immer reichlicher verliehen. Demütige Herzen liegen in den Tälern, wo die Ströme der Gnade fließen, und darum trinken sie daraus. Demütige Herzen sind dankbar für Gnade und geben dem Herrn die Ehre dafür, deshalb verträgt es sich mit seiner Ehre, sie ihnen zu geben.

Komm, lieber Leser, nimm einen niedrigen Platz ein. Sei klein in deiner eigenen Achtung, damit der Herr viel aus dir mache. Vielleicht bricht der Seufzer hervor: „Ich fürchte, ich bin nicht demütig.“ Es mag sein, dass dies die Sprache wahrer Demut ist. Einige sind stolz darauf, dass sie demütig sind, und dies ist eine der schlimmsten Arten des Stolzes. Wir sind bedürftige, hilfl ose, unwürdige, die Hölle verdienende Geschöpfe, und wenn wir nicht demütig sind, so sollten wir es doch sein. Wir wollen uns demütigen um unserer Sünden gegen die Demut willen, und dann wird der Herr uns seine Huld empfi nden lassen. Es ist die Gnade, die uns demütig macht, und die Gnade fi ndet in dieser Demut einen Anlass, noch mehr Gnade einzugießen. Lasst uns hinuntergehen, damit wir hinaufsteigen. Lasst uns arm im Geiste sein, damit Gott uns reich mache. Lasst uns demütig sein, damit wir nicht nötig haben, gedemütigt zu werden, sondern durch die Gnade Gottes erhoben werden mögen.