March

பரம முன்னேற்பாடு

March 20

Divine Provision

Wherefore, if God so clothe the grass of the field, which today is, and tomorrow is cast into the oven, shall he not much more clothe you, O ye of little faith? (Matthew 6:30)

Clothes are expensive, and poor believers may be led into anxiety as to where their next suit will come from. The soles are thin; how shall we get new shoes? See how our thoughtful Lord has provided against this care. Our heavenly Father clothes the grass of the field with a splendor such as Solomon could not equal: will He not clothe His own children? We are sure He will. There may be many a patch and a darn, but raiment we shall have.

A poor minister found his clothes nearly threadbare, and so far gone that they would hardly hold together; but as a servant of the Lord he expected his Master to find him his livery. It so happened that the writer on a visit to a friend had the loan of the good man’s pulpit, and it came into his mind to make a collection for him, and there was his suit. Many other cases we have seen in which those who had served the Lord have found Him considerate of their wardrobe. He who made man so that when he had sinned he needed garments, also in mercy supplied him with them; and those which the Lord gave to our first parents were far better than those they made for themselves.

மார்ச் 20

பரம முன்னேற்பாடு

அற்ப விசுவாசிகளே ! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத்.6:30).

துணிமணிகள் மிகுந்த விலை உள்ளவையாய் இருக்கின்றன. மாற்று ஆடை எங்கிருந்தது வருமோ என்று அற்ப விசுவாசிகள் கவலைப்படுகிறார்கள். பாதரட்சைகளின் அடிப்பாகம் தேய்திருக்கிறது. புதுப் பாதரட்சைகளின் அடிப்பாகம் தேய்ந்திருக்கிறது. புதுப் பாதரட்சைகள் வாங்குவது எப்படி என்று கலங்குகிறோம். அக்கவலைக்கெல்லாம் முன்னேற்பாடாக நம் ஆண்டவர் அன்பாதரவுடன் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். சாலோமோன் முதலாய் உடுத்திராதவிதமாகக் காட்டுப் புல்லை உடுத்துவித்துள்ளார். அப்படிப்பட்டவர் தம் சொந்த மக்களை உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? நிச்சயம் என்பதை நாம் அறிவோம். ஒருவேளை நம் ஆடைகளில் கிழிந்துள்ள பாகங்கள் தைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நமக்கு ஆடைகள் எப்படியும் இருக்கும்.

ஏழை போதகர் ஒருவரின் உடமைகள் மிகவும் பழமையானவையாயும் கிழிந்ததும் இருந்தன. ஆனால் அவர் ஆண்டவரின் ஊழியக்காரரானபடியால் ஆண்டவர் தமக்கான உடைகளை அளிப்பார் என்று எதிர்பார்த்தார். இந்நூலின் ஆசிரியர் போதகரான நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்று அவர் ஆலயத்தில் பிரசங்கம் செய்தார். பணம் சேர்த்து அந்தப் போதகருக்கு உதவவேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு வரவே ஏழைப் போதகருக்குப் புது உடைகள் கிடைத்தன. இவ்விதமாக ஆண்டவருக்கென்று உழைத்தவர்களுக்குத் தேவையான உடைகளை ஆண்டவர் அளித்துள்ளதற்குப் பல எடுத்துக்காட்டுகளை நாம் அறிந்திருக்கிறோம். மனிதன் பாவஞ் செய்தபோது அவனுக்கு ஆடைகள் தேவைப்பட்டவிதமாக அவனைப் படைத்தவர், இரக்கமாக அவனுக்கு அவற்றை அளித்தார். நம் ஆதித் தாய் தந்தையர்க்கு ஆண்டவர் அளித்திருந்த ஆடைகள் அவர்கள் தங்களுக்கென உண்டுபண்ணினவைகளைவிடச் சிறந்தவைகளாய் இருந்தன.

20. März

„So denn Gott das Gras auf dem Felde also kleidet, das doch heute steht, und morgen in den Ofen geworfen wird; sollte Er das nicht vielmehr euch tun? O ihr Kleingläubigen!“ Mt. 6, 30.

Kleider sind kostspielig, und arme Gläubige mögen in Sorgen sein, woher ihr nächster Anzug kommen soll. Die Sohlen sind dünn; wie sollen wir neue Schuhe erhalten? Seht, wie unser vorsorgender Herr dieser Sorge vorgebeugt hat. Unser himmlischer Vater kleidet das Gras auf dem Felde mit einer Pracht, der Salomo nicht gleichkommen konnte: wird Er nicht seine eigenen Kinder kleiden? Wir sind gewiss, dass Er es will. Es mag manchen Flicken und manche Stopfstelle geben, aber Kleidung sollen wir haben.

Ein armer Prediger fand, dass seine Kleider fadenscheinig und so abgetragen waren, dass sie kaum noch zusammenhielten; indes als ein Diener des Herrn erwartete er, dass sein Herr ihm die Livree geben würde. Es traf sich so, dass dem Schreiber dieser Zeilen, als er einen Freund besuchte, die Kanzel dieses guten Mannes geliehen wurde, und es kam ihm in den Sinn, eine Kollekte für ihn zu halten, und seine Livree war da. Viele andere Fälle haben wir gesehen, wo die, welche dem Herrn dienten, fanden, dass Er an ihre Kleidung dachte. Der, welcher den Menschen so machte, dass er, nachdem er gesündigt hatte, der Kleider bedurfte, versah ihn auch in Barmherzigkeit mit denselben; und die, welche der Herr unseren ersten Eltern gab, waren viel besser, als die, welche sie für sich selbst machten.