March

மகிமை அடைவதற்கு தகுதி உள்ளவர்கள்

March 19

Becoming Fit for Glory

The Lord will give grace and glory. (Psalm 84:11)

Grace is what we need just now, and it is to be had freely. What can be freer than a gift? Today we shall receive sustaining, strengthening, sanctifying, satisfying grace. He has given daily grace until now, and as for the future, that grace is still sufficient. If we have but little grace the fault must lie in ourselves; for the Lord is not straitened, neither is He slow to bestow it in abundance. We may ask for as much as we will and never fear a refusal. He giveth liberally and upbraideth not.

The Lord may not give gold, but He will give grace: He may not give gain, but He will give grace. He will certainly send us trial, but He will give grace in proportion thereto. We may be called to labor and to suffer, but with the call there will come all the grace required;

What an “end” is that in the text—”and glory!” We do not need glory yet, and we are not yet fit for it; but we shall have it in due order. After we have eaten the bread of grace, we shall drink the wine of glory. We must go through the holy, which is grace, to the holiest of all, which is glory. These words and glory are enough to make a man dance for joy. A little while—a little while, and then glory forever!

மார்ச் 19

மகிமை அடைவதற்கு தகுதி உள்ளவர்கள்

கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார் (சங்.84:11).

இப்போது நமக்குத் தேவையானது கிருபை. அது இலவசமாகக் கிடைக்கும் கொடைப்பொருளைவிட வேறே எது இலவசமானதாய் இருக்கமுடியும்? இன்று நாம் தாங்கிப்பிடிக்கிறதும், வலுவுட்டுகிறதும், நேர்மைப்படுத்துகிறதும், மனநிறைவு அளிப்பதுமான கிருபை பெறுவோம். இந்நிமிடம்வரை ஒவ்வொரு நாளும் அவர் கிருபை அளித்துள்ளார். அது எதிர்காலத்துக்கும் போதுமானதாகும். நமக்குக் குறைவான அளவே கிருபை கிடைத்திருக்குமேயானால் நம்மில்தான் குறை இருக்கும். ஏனெனில் ஆண்டவர் கட்டுக்குள் இறுக்கப்பட்டவருமல்ல. அவர் அளிக்க மறுத்துவிடுவாரோ என்று அஞ்சாமல் நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவைக் கேட்கலாம். அவர் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய கடவுள்.

அவர் ஒருவேளை பொன் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் கிருபை அருளுவார். அவர் ஒருவேளை இலாபம் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் கிருபை அருளுவார். அவர் நிச்சயமாக நமக்குச் சோதனை அனுப்பலாம். ஆனால் அதற்கு ஏற்ற அளவு கிருபையும் அருளுவார். உழைக்கவும் தீங்கு அனுபவிக்கவும் நாம் அழைக்கப்படலாம். அந்த அழைப்போடு அதற்குத் தேவையான கிருபையும் அருளப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள வசனத்தின் மகிமையும் அருளுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. நமக்கு இதற்குள் மகிமை தேவையில்லை. நாம் அதற்குத் தகுதியானவர்களாயும் இல்லை. ஆனால் தகுந்த வரிசைப்படி நாம் அதை அடைவோம். கிருபையின் அப்பத்தைப் புசித்தபின் மகிமையின் திராட்ச இரசத்தைக் குடிப்போம். கிருபை என்னும் தூய பிரகாரத்தின் வழியாக மகிமை என்னும் மகா பிரதான பிரகாரத்துக்கு நாம் செல்லவேண்டும். வசனத்தில் மகிமையும் என்று கூறப்பட்டுள்ளது நம்மை ஆனந்தக்களிப்படையச் செய்யக்கூடியது. சிறது காலமே நாம் காத்திருக்கவேண்டும். பின் நித்திய மகிமை அடைவோம்.

19. März

„Der Herr will Gnade und Herrlichkeit geben.“ Ps. 84, 12.

Gnade ist das, was wir eben jetzt brauchen, und sie ist allen zugänglich. Was kann freier sein als eine Gabe? Heute sollen wir erhaltende, stärkende, heiligende befriedigende Gnade empfangen. Er hat bis jetzt tägliche Gnade gegeben, und für die Zukunft ist diese Gnade immer noch genügend. Wenn wir nur wenig Gnade haben, muss der Fehler in uns liegen; denn des Herrn Macht ist nicht verkürzt und Er ist auch nicht säumig, sie im Überfluss zu verleihen. Wir können nun so viel bitten, wie wir wollen und niemals ein Nein erwarten. Er gibt einfältig jedermann und ohne es jemandem vorzuwerfen. Der Herr mag kein Gold geben, aber Er gibt Gnade: Er mag keinen Gewinn geben, aber Er will Gnade geben. Er wird uns gewiss Prüfungen senden, aber Er wird Gnade im Verhältnis dazu geben. Wir mögen berufen werden zu arbeiten und zu leiden, aber mit dem Beruf wird alle dazu nötige Gnade kommen.

Was für ein „und“ ist das in dem Spruch – „und Herrlichkeit!“ Wir brauchen noch keine Herrlichkeit, und wir taugen noch nicht dafür; aber wir sollen sie zur rechten Zeit haben. Nachdem wir das Brot der Gnade gegessen haben, sollen wir den Wein der Herrlichkeit trinken. Wir müssen durch das Heilige – welches die Gnade ist, zu dem Allerheiligsten, welches die Herrlichkeit ist, gehen. Diese Worte „und Herrlichkeit“ sind genug, um einen Mann vor Freuden tanzen zu lassen. Eine kleine Weile – eine kleine Weile, und dann Herrlichkeit auf ewig!