June

பரலோகத்திற்கு செல்லும் படிகள்

June 25

A Staircase to Heaven

And he saith unto him, Verily, verily, I say unto you, Hereafter ye shall see heaven open, and the angels of God ascending and descending upon the Son of man. (John 1:51)

Yes, to our faith this sight is plain even at this day. We do see heaven opened. Jesus Himself has opened that kingdom to all believers. We gaze into the place of mystery and glory, for He has revealed it to us. We shall enter it soon, for He is the way.

Now we see the explanation of Jacob’s ladder. Between earth and heaven there is a holy commerce; prayer ascends, and answers come down by the way of Jesus, the Mediator. We see this ladder when we see our Lord. In Him a stairway of light now furnishes a clear passage to the throne of the Most High. Let us use it and send up by it the messengers of our prayers. We shall live the angelic life ourselves if we run up to heaven in intercession, lay hold upon the blessings of the covenant, and then descend again to scatter those gifts among the sons of men.

This choice sight which Jacob only saw in a dream will turn into a bright reality. This very day we will be up and down the ladder each hour: climbing in communion and coming down in labor to save our fellowmen. This is Thy promise, O Lord Jesus; let us joyfully see it fulfilled.

யூன் 25

பரலோகத்திற்கு செல்லும் படிகள்

வானம் திறந்திருக்கிறதையும் தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்தில் இருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இது முதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவேஉங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவான் 1:51).

ஆம்! நாம் நம்பும்போது இன்று கூட இந்தக்காட்சியைக் காண்கிறோம். பரலோகம் திறந்திருக்கிறதைக் காண்கிறோம். எல்லா விசுவாசிகளுக்கும் இயேசுவேஅதைத் திறந்து விட்டிருக்கிறார். மறைபொருள்களும் மகிமையும் நிறைந்த அவ்விடத்தைக் கூர்ந்து நோக்குகிறோம். ஏனெனில் அவர் அதை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். நாம் சீக்கிரத்தில் அதை அடைவோம். ஏனெனில் அவரே அதற்கு வாசலாயிருக்கிறார்.

யாக்கோப்பின்ஏணியைக் குறித்த விளக்கத்தை இப்போது விளங்கிக் கொள்கிறோம். வானத்துக்கும் பூமிக்கும் இடையே வாணிகத் தொடர்பு இருக்கிறது. நம் மத்தியஸ்தரான இயேசு என்னும் பாதை வழியே ஜெபங்கள் பரலோகம் செல்கின்றன. அவற்றிற்கு பதில் நமக்கு வருகிறது. நம் ஆண்டவரைப்பார்க்கும் போது நாம் இந்த ஏணியைப் பார்க்கிறோம். அவரில் மகா உன்னதங்களில் இருப்பவரின் சிங்காசனத்திற்கு செல்வதற்கான ஒளி மிகுந்த படிகள் நமக்கு நேரான வழியை உண்டு பண்ணிக்கொடுத்திருக்கின்றன. அதைப்பயன்படுத்தி நம் வேண்டுதல்களின் தூதர்களை மேலேஅனுப்பலாம். நம் மன்றாட்டுகளின் மூலம் பரலோகம் சென்று உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைக் கைப்பற்றி மக்களிடையே அவற்றை நாற்புறமும் பரப்ப கீழே இறங்கி வந்தால் நாமே அந்தத் தூதர்களைப் போன்றவர்களாவோம்.

யாக்கோபு சொப்பனத்தில் மட்டுமே கண்ட அந்தசிறப்பு வாய்ந்த காட்சி நமக்கு உண்மையான காட்சியாகும். இந்நாளிலே ஒவ்வொரு மணிநேரமும் நாம் ஆன்மீகக் கூட்டுறவில் ஏணியில் ஏறிச்சென்று மக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் கீழே இறங்கி வரலாம். ஆண்டவராகிய இயேசுவே இது உம்வாக்குறுதி. அது நிறைவேறுவதை நாம்மகிழ்ச்சியோடு காண்போமாக!

25. Juni

„Und spricht zu ihm: Wahrlich, wahrlich, ich sage euch, von nun an werdet ihr den Himmel offen sehen, und die Engel Gottes hinauf und herabfahren auf des Menschen Sohn.“ Joh. 1, 51.

Ja, für unseren Glauben ist dieser Anblick selbst h e u t e ein deutlicher. Wir sehen den Himmel offen. Jesus hat das Himmelreich allen Gläubigen aufgetan. Wir schauen in den Ort des Geheimnisses und der Herrlichkeit hinein, denn Er hat ihn uns enthüllt. Wir sollen bald hineinkommen, denn Er ist der Weg.

Nun sehen wir die Erklärung der Jakobsleiter. Zwischen Himmel und Erde ist ein heiliger Verkehr; das Gebet steigt hinauf, und die Antwort kommt hernieder durch Jesus, den Mittler. Wir sehen diese Leiter, wenn wir unseren Herrn sehen. Er gleicht einer lichten Treppe, die uns freien Zugang zum Thron des Höchsten gibt. Lasst uns diese benutzen und die Boten unserer Gebete darauf emporsenden. Wir werden selber das Leben der Engel leben, wenn wir in Fürbitte hinauf zum Himmel eilen, die Segnungen des Bundes ergreifen, und dann wieder herabkommen, um diese Gaben unter den Menschenkindern auszuteilen.

Diesen köstlichen Anblick, den Jakob nur im Traume hatte, wollen wir in leuchtende Wirklichkeit verwandeln. Heute noch wollen wir jede Stunde die Leiter aufund absteigen; hinaufklimmen in Gemeinschaft mit Gott, und herabkommen in Arbeit, um unsere Mitmenschen zu erretten. Dies ist Deine Verheißung, o Herr Jesus, lass uns sie fröhlich erfüllt sehen.