June

கடவுளின் வாக்குறுதி மாறுவதில்லை

June 1

God’s Promise Keeps

Cast thy bread upon the waters: for thou shalt find it after many days. (Ecclesiastes 11:1)

We must not expect to see an immediate reward for all the good we do; nor must we always confine our efforts to places and persons which seem likely to yield us a recompense for our labors. The Egyptian casts his seed upon the waters of the Nile, where it might seem a sheer waste of corn. But in due time the flood subsides, the rice or other grain sinks into the fertile mud, and rapidly a harvest is produced. Let us today do good to the unthankful and the evil. Let us teach the careless and the obstinate. Unlikely waters may cover hopeful soil. Nowhere shall our labor be in vain in the Lord.

It is ours to cast our bread upon the waters; it remains with God to fulfill the promise “Thou shalt find it.” He will not let His promise fail. His good word which we have spoken shall live, shall be found, shall be found by us, Perhaps not just yet, but some day we shall reap what we have sown. We must exercise our patience, or perhaps the Lord may exercise it. “After many days,” says the Scripture, and in many instances those days run into months and years, and yet the Word stands true. God’s promise will keep; let us mind that we keep the precept and keep it this day.

யூன்  1

கடவுளின் வாக்குறுதி மாறுவதில்லை

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் (பிர 11:1).

நாம்செய்யும்நன்மைகளினாலெல்லாம் உடனே பயன் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. நம் உழைப்புக்குக் கைம்மாறு செய்யக்கூடிய இடங்களிலும் மக்கள் இடையேயும் மட்டுமே எப்பவும் நாம் உழைக்கவும் கூடாது. எகிப்தியர்கள் நீல நதியின் தண்ணீர் மேல் தானியங்களைப் போடுவார்கள் அவைவீணாக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால் ஏற்ற காலத்தில் வெள்ளம் வடிந்து நெல் போன்ற தானியங்கள் அடியிலுள்ள சேற்றில் புதைந்து விடும். சீக்கிரத்தில் அவை முளைத்து வளர்ந்து அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கும். தீயவர்களும் நன்றியைப் பற்றிய உணர்வு இல்லாதவர்களுக்கும் இன்றுநன்மை செய்வோமாக. கவனமற்றவர்களுக்கும் பிடிவாதமுடையவர்களுக்கும் போதிப்போமாக. நம்பிக்கை தரக்கூடிய மண்ணின் மேல் சிறிதளவும் நம்பிக்கை தரக்கூடாத தண்ணீர் இருக்கலாம். ஆண்டவரில் எந்த இடத்திலும் நம் உழைப்பு வீண்போகாது.

ஆகாரத்தைத் தண்ணீர்களின் மேல்போடுவது நம் வேலையாகும். அதின் பலனைக் காண்பாய் என்னும் வாக்குறுதியைக் கடவுள் நிறைவேற்றுவார். அந்த வாக்குறுதி நிறைவேறாமற்போக அவர் விடமாட்டார். நாம் எடுத்துச்சொன்ன அவர் வார்த்தைகள் வீணாய்ப் போகா. அவை கண்டுபிடிக்கப்படும் ஒருவேளை இப்போதே அல்ல. ஆனால்நாம் விதைத்தவற்றின் பயனை எப்படியும் ஒருகாலத்தில் அறுப்போம். நாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஒருவேளை ஆண்டவரே பொறுமையைப் பயிற்றுவிப்பார். வேதத்தில் அநேக நாள்களுக்குப்பின் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை பலமாதங்களும் ஆண்டுகளும்கடந்து போகலாம். ஆகிலும் இந்த வாக்குறுதி மாறுவதில்லை. அது நிலைத்திருக்கும். இந்தக் கட்டளையை இன்றே நிறைவேற்ற நாம் கவனமாயிருப்போமாக.

1. Juni

„Wirf dein Brot auf das Wasser, so wirst du es fi nden nach vielen Tagen.“ Pred. 11, 1.

Wir dürfen nicht erwarten, für alles Gute, was wir tun, sofortigen Lohn zu sehen; ebensowenig dürfen wir unsere Bemühungen auf Orte und Personen beschränken, von denen es wahrscheinlich ist, dass sie uns Ersatz für unsere Arbeit gewähren werden. Der Ägypter wirft seinen Samen auf das Wasser des Nils, was eine schiere Vergeudung des Korns scheinen könnte. Aber seiner Zeit nimmt die Flut ab, der Reis oder was es sonst für Korn ist, sinkt in den fruchtbaren Schlamm, und rasch wird eine Ernte hervorgebracht. Lasst uns heute den Undankbaren und den Bösen Gutes tun. Lasst uns die Sorglosen und die Hartnäckigen lehren. Wasser, das keinen Erfolg verspricht, mag hoffnungsvollen Boden bedecken. Nirgends soll unsere Arbeit vergeblich in dem Herrn sein.

Es ist unsere Sache, unser Brot auf das Wasser zu werfen; es bleibt Gott überlassen, die Verheißung zu erfüllen: „Du wirst es finden.“ Er wird nicht versäumen, sie zu halten. Sein gutes Wort, das wir gesprochen haben, soll leben, soll gefunden werden, soll von uns gefunden werden. Vielleicht nicht eben jetzt, aber eines Tages werden wir ernten, was wir gesät haben. Wir müssen uns in der Geduld üben, denn vielleicht wird der Herr uns darin üben. „Nach vielen Tagen“, spricht die Schrift, und in vielen Fällen werden diese Tage zu Monaten und Jahren, und dennoch bleibt das Wort wahr, Gottes Verheißung hält sich; lasst uns Sorge tragen, dass wir die Vorschrift halten und sie diesen Tag halten.