July

அவர்மேல் வைக்கப்படும் பாரங்கள்

July 14

Burdens Cast on Him

Cast thy burden upon the Lord, and he shall sustain thee; he shall never suffer the righteous to be moved. (Psalm 55:22)

It is a heavy burden; roll it on Omnipotence. It is thy burden now, and it crushes thee; but when the Lord takes it, He will make nothing of it. If thou art called still to bear, “he will sustain thee.” It will be on Him and not on thee. Thou wilt be so upheld under it that the burden will be a blessing. Bring the Lord into the matter, and thou wilt stand upright under that which in itself would bow thee down.

Our worst fear is lest our trial should drive us from the path of duty; but this the Lord will never suffer. If we are righteous before Him, He will not endure that our affliction should move us from our standing. In Jesus He accepts us as righteous, and in Jesus He will keep us so.

What about the present moment? Art thou going forth to this day’s trial alone? Are thy poor shoulders again to be galled with the oppressive load? Be not so foolish. Tell the Lord all about thy grief and leave it with Him. Don’t cast your burden down and then take it up again; but roll it on the Lord and leave it there. Then shalt thou walk at large, a joyful and unburdened believer, singing the praises of thy great Burden-bearer.

யூலை 14

அவர்மேல் வைக்கப்படும் பாரங்கள்

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்.55:22).

இது கனமான பாரம், அதை எல்லாம் வல்ல இறைவன்மேல் தள்ளிவிடு. இப்பொழுது அது உன் பாரமாய் இருக்கிறது. அது உன்னை நசுக்குகிறது. ஆனால் ஆண்டவர் அதைத் தூக்கிக்கொண்டால் அது அவருக்கு கனமானதல்ல. நீ அதைத் தூக்கிக்கொள்ளவேண்டுமென்றாலும்அவர் உன்னை ஆதரிப்பார். அது அவர்மேல் இருக்கும். உன்மேல் இருக்காது. அதன் பளுவைத் தாங்கிக்கொண்டிருக்கும்போது நீ ஆதரிக்கப்படுவதால் அந்தப் பாரம் உனக்கு ஆசீர்வாதமாயிருக்கும். ஆண்டவரோடு உன் பாரத்தைப் பற்றிக் கலந்து பேசு. அப்போது உன்னை வளையச்செய்யக்கூடியஅந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டிருந்தாலும் நீ நிமிர்ந்து நிற்பாய்.

நமக்கேற்படும் சோதனை கடமையின் பாதையிலிருந்து நம்மை வழி விலகச் செய்துவிடுமோ என்றுதான் நாம் பயப்படுகிறோம். ஆனால் இவ்விதம் நேரிட நம் ஆண்டவர் அனுமதிக்கமாட்டார். அவர்முன்பாக நாம் நீதிமான்களாயிருந்தால் நம் சோதனை நம்மை நிலைபெயரச் செய்ய அவர் ஒரு நாளும் அனுமதிக்கமாட்டார். இயேசுவில் அவர் நம்மை நீதிமான்களாக ஏற்றுக்கொள்கிறார். இயேசுவில் நாம் அவ்விதமே நிலைத்திருக்கவும் செய்வார்.

இன்றைய தினத்தில்ஏற்படக்கூடிய சோதனைகளை நீ தனியாகவே சமாளிக்கப்போகிறாயா? அந்தப் பாரம் மறுபடியும் உன் தோள்களை அழுத்தப்போகிறதா? மதியீனமாய் இராதே. உன் கவலைகளையெல்லாம் ஆண்டவரிடம் சொல்லி, அவர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. உன் பாரத்தைக் கீழே இறக்கிவைத்துவிட்டு மறுபடியும் தூக்கிக்கொள்ளாதே. கர்த்தர்மேல் தள்ளி அங்கேயே வைத்துவிடு. பின் நீ பாரமற்ற மகிழ்ச்சியான விசுவாசியாக, உன் பாரத்தை சுமக்கிறவரின் புகழைப் பாடிக்கொண்டு, சுதந்திரமாக நடமாடலாம்.

14. Juli

„Wirf deine Bürde auf den Herrn, der wird dich aufrecht erhalten, Er wird den Gerechten nicht ewiglich in Unruhe lassen.“ Ps. 55, 22.

Es ist eine schwere Bürde, wälze sie auf die Allmacht. Es ist jetzt deine Bürde, und sie drückt dich nieder, aber wenn der Herr sie nimmt, so wird Er sich nichts daraus machen. Wenn du immer noch berufen bist, sie zu tragen, so „will Er dich aufrecht erhalten“. Sie wird auf Ihm liegen und nicht auf dir. Du wirst so darunter aufrecht gehalten werden, dass die Bürde dir ein Segen sein wird. Bringe den Herrn in die Sache hinein, und du wirst aufrecht unter dem stehen, was dich sonst niederbeugen würde.

Unsere schlimmste Furcht ist, dass unser Leiden uns von dem Pfade der Pfl icht abtreiben könnte; aber dies wird der Herr nie dulden. Wenn wir vor Ihm gerecht sind, wird Er nicht zugeben, dass unsere Trübsal uns von unserem Standpunkt abbringt. In Jesu nimmt Er uns als gerecht an, und in Jesu will Er uns so bewahren. Und wie ist es in diesem Augenblick? Gehst du allein in die Prüfung dieses Tages hinein? Sollen deine armen Schultern wieder von der schweren Last gedrückt werden? Sei

nicht so töricht. Erzähle dem Herrn all deinen Kummer, und überlasse Ihm denselben.

Wirf nicht deine Bürde nieder und nimm sie dann wieder auf; sondern wälze

sie auf den Herrn und lass sie da. Dann sollst du frei umher wandeln, ein fröhlicher,

entlasteter Gläubiger, und das Lob deines großen Bürdenträgers singen.