July

முழு நிறை நம்பிக்கை

July 13

Implicit Trust

For I will surely deliver thee, and thou shalt not fall by the sword, but thy life shall be for a prey unto thee: because thou hast put thy trust in me, saith the Lord. (Jeremiah 39:18)

Behold the protecting power of trust in God. The great men of Jerusalem fell by the sword, but poor Ebed-melech was secure, for his confidence was in Jehovah. Where else should a man trust but in his Maker? We are foolish when we prefer the creature to the Creator. Oh, that we could in all things live by faith, then should we be delivered in all time of danger! No one ever did trust in the Lord in vain, and no one ever shall.

The Lord saith, “I will surely deliver thee,” Mark the divine “surely.” Whatever else may be uncertain, God’s care of believers is sure. God Himself is the guardian of the gracious, Under His sacred wing there is safety even when every danger is abroad. Can we accept this promise as sure? Then in our present emergency we shall find that it stands fast. We hope to be delivered because we have friends, or because we are prudent, or because we can see hopeful signs; but none of these things are one-half so good as God’s simple “because thou hast put thy trust in me.” Dear reader, try this way, and, trying it, you will keep to it all your life. It is as sweet as it is sure.

யூலை 13

முழு நிறை நம்பிக்கை

உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை. நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன்உனக்குக் கிடைத்த கொள்ளை பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.39:18).

ஆண்டவரில் வைக்கும் நம்பிக்கை நம்மை எவ்விதம் காப்பாற்றக்கூடியது என்பதைப் பாருங்கள்.எருசலேமிலிருந்து வலிமை வாய்ந்தவர்கள் பட்டயத்தினால் வீழ்ந்தார்கள். ஆனால் எளியவரான எபெத்மெலேக்கு பத்திரமாய்க் காக்கப்பட்டார். ஏனெனில் அவர் யேகோவாவை நம்பினார். தன்னைப் படைத்தவரையெல்லாம் வேறு யாரை மனிதன் நம்பலாம்? படைத்தவரை விட்டுவிட்டுபடைக்கப்பட்டவைகளை நம்பினால் நாம் மூடரே. நாம் விசுவாசிகளாகவே எப்போதும் நிலைத்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அவ்விதமிருந்தால் நாம் எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் விடுவிக்கப்படுவோம். ஆண்டவரை நம்பினவர்கள் ஒருவரும் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை.வெட்கப்படவும் மாட்டார்கள்.

கர்த்தர் உன்னை நிச்சயமாக விடுவிப்பேன் என்கிறார் நிச்சயமாக என்று கூறியிருப்பதைக் கவனித்துப் பாருங்கள். வேறு ஏது நிச்சயமற்றதாய் இருந்தாலும் விசுவாசிகளை ஆண்டவர் பராமரித்துக் காப்பாற்றி வருகிறார் என்பது நிச்சயம்.கர்த்தரே இரக்கமுள்ளவர்களின் பாதுகாவலராய் இருக்கிறார். எல்லா இடங்களிலும் ஆபத்து இருந்தாலும் அவர் தூய செட்டைகளின்கீழ் அடைக்கலம் இருக்கிறது. இந்த வாக்குறுதி உண்மையானதென்று நாம் ஒப்புக்கொள்கிறோமோ? அப்படியானால் இப்பொழுது நமக்கு ஏற்பட்டிருக்கும்ஆபத்திலும் அதை நம்பலாம். நமக்கு நண்பர்கள் இருப்பதினால் அல்லது நாம் விவேகம் உள்ளவர்கள் ஆனபடியால் அல்லது நல்ல அறிகுறிகள் காணப்படுவதால் நாம் விடுவிக்கப்படுவோம் என்று நினைக்கலாம். ஆனால் கடவுள் நீ என்னை நம்பினபடியால் என்று சொல்வதோடு ஒப்பிட்டால் அவைஓரளவே வலிமை வாய்ந்தவை என்பதை நாம் காணலாம். இதை வாசிப்பவரே, இவ்விதம் இருக்க முயற்சி செய்வீராக. ஒருமுறை முயன்று பார்த்தால் வாழ்நாள் முழுவதும் கைக்கொள்வீர். இது எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவு இனிமையானதும் ஆகும்.

13. Juli

„Denn ich will dich sicherlich erretten, dass du nicht durchs Schwert fällst, sondern sollst dein Leben wie eine Beute davonbringen, darum, dass du mir vertraut hast, spricht der Herr.“ Jer. 39, 18.

Seht die schützende Macht des Vertrauens auf Gott. Die großen Männer Jerusalems fielen durch das Schwert, aber der arme Ebed-Melech war geborgen, denn seine Zuversicht war auf Jehovah gestellt. Wem anders sollte ein Mensch vertrauen, als dem, der ihn gemacht hat? Wir sind töricht, wenn wir das Geschöpf dem Schöpfer vorziehen. O, dass wir in allen Dingen durch den Glauben leben könnten, dann würden wir in allen Zeiten der Gefahr erlöst werden! Niemand hat je dem Herrn vergeblich vertraut, und niemand wird das jemals vergeblich tun.

Der Herr spricht: „Ich will dich sicherlich erretten!“ Merkt auf das göttliche „sicherlich“. Was sonst auch ungewiss sein mag, Gottes Sorge für die Gläubigen ist gewiss. Gott selbst ist der Hüter der Frommen. Unter seinen heiligen Flügeln ist Sicherheit, wenn überall Gefahr ist. Können wir diese Verheißung als gewiss annehmen? Dann werden wir in unserer gegenwärtigen Not fi nden, dass sie fest steht. Wir hoffen erlöst zu werden, weil wir Freunde haben, oder weil wir klug sind, oder weil wir hoffnungsvolle Zeichen sehen können; aber nichts von all dem ist halb so gut wie Gottes einfaches „Darum, dass du mir vertraut hast“. Lieber Leser, versuche diese Weise, und wenn du sie versuchst, wirst du dein ganzes Leben dabei bleiben. Sie ist ebenso süß wie sicher.