July

உண்மையும் பயன் உள்ளவனும் ஆனவன்

July 9

Faithful and Useful

Mine eyes shall be upon the faithful of the land, that they may dwell with me: he that walketh in a perfect way, he shall serve me. (Psalm 101:6)

If David spoke thus, we may be sure that the Son of David will be of the same mind. Jesus looks out for faithful men, and He fixes His eyes upon them, to observe them, to bring them forward, to encourage them, and to reward them. Let no true-hearted man think that he is overlooked; the King Himself has His eye upon him.

There are two results of this royal notice. First we read, “That they may dwell with me.” Jesus brings the faithful into His house, He sets them in His palace, He makes them His companions, He delights in their society. We must be true to our Lord, and He will then manifest Himself to us. When our faithfulness costs us most, it will be best rewarded; the more furiously men reject, the more joyfully will our Lord receive us.

Next, he says of the sincere man, “He shall serve me.” Jesus will use for His own glory those who scorn the tricks of policy and are faithful to Himself, His Word, and His cross. These shall be in His royal retinue, the honored servants of His Majesty. Communion and usefulness are the wages of faithfulness. Lord make me faithful that I may dwell with Thee and serve Thee.

ஜுலை 09

உண்மையும் பயன் உள்ளவனும் ஆனவன்

தேசத்தின் உண்மையானவர்கள் என்னேடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும் உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்(சங்.101:6).

தாவீது இவ்விதம் கூறினால் தாவீதின் குமாரனும் இவ்விதமே கூறுவார் என்பது நிச்சயம். இயேசு உண்மையானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை முன்னேறச் செய்யவும் அவர்களுக்கு ஊக்கமும்பரிசும் அளிக்கவும் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறார். உண்மையான எந்த மனிதனும் தான் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகக் கவலைப்படவேண்டியதில்லை. அரசரே அவர்மேல் நோக்கமாயிருக்கிறார்.

அரசர் அவர்மேல் நோக்கமாயிருப்பதால் இருபயன்கள் ஏற்படுகின்றன. முதலாவதுஅவர்கள் அவரோடு வாசம் பண்ணுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு உண்மையானவர்களைத் தம் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து தம் அரண்மனையில் அமர்த்துகிறார். அவர்களைத் தம் தோழர் ஆக்கி அவர்களோடு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.

நாம் ஆண்டவருக்குஉண்மையுள்ளவர்களாக இருந்தால் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துவார். நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கு எவ்வளுவுக்கெவ்வளவு பெருமுயற்சி தேவைப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பயன் கொடுப்பதாய் இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு வெறிகொண்டு மக்கள் நம்மை விலக்கிவைக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆண்டவர் நம்மை வரவேற்கிறார்.

இரண்டாவதாக உத்தமமான வழியில் நடப்பவன் என்னைச் சேவிப்பான் என்கிறார். மதிநுற்பத்தின் தந்திரங்களை வெறுத்து ஒதுக்கி இயேசுவுக்கும் அவர் வார்த்தைக்கும் அவர் சிலுவைக்கும்உண்மையாய் நடப்பவர்களை அவர் மகிமைக்கென்று பயன்படுத்துவார். அவர்கள் அரசரான அவருடைய பரிவாரமும் மதிப்புக்குரிய ஊழியக்காரரும் ஆவார்கள். உண்மையாய் நடப்பவர்கள் தோழமையும் பயனுடைமையும் பெறுவார்கள். ஆண்டவரே நான் உம்மோடு இருந்து உமக்கு ஊழியம் செய்வதற்காக என்னைஉண்மையுள்ளவன் ஆக்கும்.

9. Juli

„Meine Augen sehen nach den Treuen im Lande, dass sie bei mir wohnen; wer auf vollkommenem Wege wandelt, der soll mir dienen.“ Ps. 101, 6.

Wenn David so sprach, mögen wir gewiss sein, dass der Sohn Davids gleichen Sinnes sein wird. Jesus sieht aus nach den treuen Menschen und heftet sein Auge auf sie, um sie zu beobachten, sie vorwärts zu bringen, sie zu ermutigen und zu belohnen. Möge kein Treuer denken, dass er übersehen sei; der König selbst hat sein Auge auf ihn gerichtet.

Es sind zwei Folgen dieser königlichen Beachtung da. Zuerst lesen wir, „dass sie bei mir wohnen“. Jesus bringt die Treuen in sein Haus, lässt sie in seinem Palast wohnen, macht sie zu seinen Gefährten, Er freut sich an ihrer Gesellschaft. Wir müssen unserem Herrn treu sein, dann will Er sich uns offenbaren. Wenn unsere Treue uns am meisten kostet, wird sie am besten belohnt werden; je grimmiger die Menschen uns verwerfen, desto freudiger will der Herr uns aufnehmen.

Danach sagt Er von dem Aufrichtigen: „er soll mir dienen“. Jesus wird für seine eigene Ehre diejenigen gebrauchen, welche die Kniffe der Klugheit verachten und Ihm, seinem Wort und seinem Kreuz treu sind. Diese sollen in seinem königlichen Gefolge sein, die geehrten Diener seiner Majestät. Gemeinschaft mit Ihm und nützliches Wirken sind der Lohn der Treue. Herr, mache mich treu, auf dass ich bei Dir wohnen und Dir dienen möge!