January

கடவுள் அச்சத்தை நீக்கிவிடுகிறார்

January 26

God Routs Fear

Surely there is no enchantment against Jacob, neither is there any divination against Israel. (Numbers 23:23)

How this should cut up root and branch all silly, superstitious fears! Even if there were any truth in witchcraft and omens, they could not affect the people of the Lord. Those whom God blessed, devils cannot curse.

Ungodly men, like Balaam, may cunningly plot the overthrow of the Lord’s Israel; but with all their secrecy and policy they are doomed to fail. Their powder is damp; the edge of their sword is blunted. They gather together; but as the Lord is not with them, they gather together in vain. We may sit still and let them weave their nets, for we shall not be taken in them. Though they call in the aid of Beelzebub and employ all his serpentine craft, it will avail them nothing: the spells will not work, the divination will deceive them. What a blessing this is! How it quiets the heart! God’s Jacobs wrestle with God, but none shall wrestle with them and prevail. God’s Israels have to prevail against them. We need not fear the fiend himself, nor any of those secret enemies whose words are full of deceit and whose plans are deep and unfathomable. They cannot hurt those who trust in the living God. We defy the devil and all his legions.

ஜனவரி 26

கடவுள் அச்சத்தை நீக்கிவிடுகிறார்

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை (எண்.22:23).

இந்த வசனம் மடத்தனமானவையும்மூடநம்பிக்கையோடு தொடர்புள்ளவையுமான எல்லாப் பயங்களையும் வேரோடு அற்றுப் போகப்பண்ணக்கூடியது அல்லவா? பில்லிசூனியம், குறிசொல்லுதல் முதலியவற்றில் ஏதாவது உண்மை இருந்தால் கூட அவை ஆண்டவரின் மக்களைப் பாதிக்க முடியாது. கடவுள் ஆசீர்வதிக்கும் மக்களைப் பிசாசுசபிக்க முடியாது.

பாலாமைப்போன்ற கடவுள் பயமற்ற மனிதர் இஸ்ரவேலை வீழ்த்த தந்திரமாகத் திட்டமிடலாம். அவர்கள் இரகசியத் திட்டங்களும் தந்திரச் செயல்களும் வெற்றிபெற முடியாது. அவர்கள் வெடிமருந்து ஈரமாயும் அவர்கள் வாளின் முனை கூரற்றுமே இருக்கும்.சூழ்ச்சி செய்ய அவர்கள் ஒன்றாகக் கூடுகிறார்கள். ஆனால் ஆண்டவர் அவர்களோடு இல்லாதபடியால் அவர்கள் கூடுவது பயனற்றதாகி விடுகிறது.

நாம் அமர்ந்திருந்து, அவர்கள் வலைகள் பின்னுவதைக் குறித்துக் கவலையற்றிருக்கலாம். ஏனெனில் நாம் அந்த வலைகளில் மாட்டிக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் பெயல்சேபூலின் உதவியை வேண்டி நிற்கலாம். அவனுடைய ஆழ்ந்த அறிவைக்கூடப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றால் எவ்விதப் பயனும் ஏற்படாது. அவற்றின் மந்திர ஆற்றல் பயனற்றுப்போம். அவர்கள் முன்னுரைத்தவற்றில் ஏமாற்றமே அடைவார்கள். இதைஅறிந்து கொள்வது நமக்கு எவ்வளவு ஆசீர்வாதமானதாகும்! இது நம் உள்ளத்திற்கு ஆழ்ந்த அமைதி அளிக்கக் கூடியது. கடவுளின் யாக்கோபுகள் கடவுளோடு போராடுகிறார்கள். ஆனால் அவர்களோடு வேறே யாரும் போராடி மேற்கொள்ள முடியாது. கடவுளின் இஸ்ரவேல்களோடு கடவுள் இருப்பதால் ஆற்றல்உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை மேற்கொள்ளும் ஆற்றல் வேறே யாருக்கும் இல்லை. சாத்தானைக் குறித்தாவது, வஞ்சகமான வார்த்தை உடையவர்களும் சூழ்ச்சி வாய்ந்ததும், ஆழம் காண முடியாததுமான திட்டங்கள் வகுப்பவர்களுமான இரகசியமான எதிரிகளைக் குறித்தாவதுநாம் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. உயிரோடிருக்கும் கடவுளை நம்புகிறவர்களுக்கு அவர்கள் ஓரு தீங்கும் செய்ய முடியாது. பிசாசையும் அவன் பெருமுயற்சியையும் நாம் தைரியமாக எதிர்த்து நிற்கலாம்.

26. Januar

„Es ist keine Zauberei wider Jakob und keine Wahrsagerei wider Israel.“ 4. Mose 23, 23.

Wie sollte dies alle albernen und abergläubischen Befürchtungen mit der Wurzel ausrotten! Selbst wenn irgendetwas Wahres an Zauberei und an Omen wäre, so könnte es doch nicht das Volk Gottes berühren. Die, welche Gott segnet, können die Teufel nicht verfluchen.

Ungöttliche Menschen wie Bileam mögen listig Pläne ersinnen, das Israel des Herrn zu vernichten; aber mit all ihrer Heimlichkeit und Schlauheit sind sie doch dazu verurteilt, dass ihnen alles fehlschlägt. Ihr Pulver ist nass, die Spitze ihres Schwertes ist stumpf. Sie kommen zusammen, aber da der Herr nicht mit ihnen ist, so kommen sie vergeblich zusammen. Wir mögen still sitzen und sie ihre Netze weben lassen, denn wir werden nicht darin gefangen werden. Ob sie Beelzebub zu Hilfe rufen und alle seine Schlangenlist aufwenden, so wird es ihnen nichts nutzen; der Zauber wird nicht wirken, die Wahrsagerei wird sie betrügen. Was für ein Segen ist dies! Wie beruhigt es das Herz! Gottes Jakobe ringen mit Gott, aber niemand soll mit i h n e n ringen und siegen. Gottes Israele haben Macht bei Gott und siegen, aber niemand soll Macht haben, sie zu besiegen. Wir brauchen den bösen Feind selber nicht zu fürchten und auch keinen jener geheimen Gegner, deren Worte voll Betrug und deren Pläne tief und unergründlich sind. Sie können denjenigen nicht schaden, die auf den lebendigen Gott vertrauen. Wir trotzen dem Teufel und all seinen Legionen.