January

கடவுளின் விரோதிகள் தலை வணங்கிப் பணிவார்கள்

January 21

God’s Enemies Shall Bow

The Egyptians shall know that I am the Lord. (Exodus 7:5)

The ungodly world is hard to teach. Egypt does not know Jehovah and therefore dares to set up its idols and even ventures to ask, “Who is the Lord?” Yet the Lord means to break proud hearts, whether they will or not. When His judgments thunder over their heads, darken their skies, destroy their harvests, and slay their sons, they begin to discern somewhat of Jehovah’s power. There will yet be such things done in the earth as shall bring skeptics to their knees. Let us not be dismayed because of their blasphemies, for the Lord can take care of His own name, and He will do so in a very effectual manner.

The salvation of His own people was another potent means of making Egypt know that the God of Israel was Jehovah, the living and true God. No Israelite died by any one of the ten plagues. None of the chosen seed were drowned in the Red Sea. Even so, the salvation of the elect and the sure glorification of all true believers will make the most obstinate of God’s enemies acknowledge that Jehovah, He is the God.

Oh, that His convincing power would go forth by His Holy Spirit in the preaching of the gospel, till all nations shall bow at the name of Jesus and call Him Lord!

ஜனவரி 21

கடவுளின் விரோதிகள் தலை வணங்கிப் பணிவார்கள்

நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் (யாத்.7:5).

கடவுள் பயம் இல்லாத மக்களுக்குப் போதிப்பது மிகவும் கடினமானது. எகிப்தியர்கள் யேகோவாவைப்பற்றி அறியார்கள். ஆகையால் தங்களுக்கென்று விக்கிரகங்களை உண்டுபண்ணிக் கொண்டு, கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? என்று கேட்கக்கூடத் துணிகிறார்கள். ஆயினும் பெருமை உள்ள ஆத்துமாக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவற்றை நொறுக்கஆண்டவர் சித்தம் கொள்ளுகிறார். அவர் நியாயத் தீர்ப்புக்கள் இடிபோல் அவர்கள் தலைமேல் விழும்போதும், இருள் சூழ்ந்து கொள்ளும்போதும், அவர்கள் விளைச்சல் அளிக்கப்படும்போதும், அவர்கள் புதல்வர் கொள்ளப்படும் போதும் யேகோவாவின் ஆற்றலை ஓரளவுஉய்த்துணர்கிறார்கள். நாத்திகர் முழங்கால்கள் கூட முடங்கத்தக்கதாக உலகில் வேறு பல நிகழ்ச்சிகளும் நடைபெறும். அவர்கள் கடவுளை நிந்திப்பதைக் குறித்து நாம் கலக்கம் அடைய வேண்டியதில்லை. ஆண்டவருக்கு அவர் நாமத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அவர் சிறந்த விதமாகஅதைச் செய்து முடிப்பார்.

தம் மக்களைக் கடவுள் இரட்சித்துக் காப்பாற்றியது, இஸ்ரவேலரின் கடவுளே உண்மையானவரும் உயிருள்ளவருமான யேகோவா என்று எகிப்தியரை அறிந்து கொள்ளச் செய்தது ஆற்றல் மிக்க செயலாகும். பத்து வாதைகளினால் இஸ்ரவேலரில் ஒருவர் கூடமரணமடையவில்லை. தெரிந்து கொள்ளப் பட்டவர்களில் ஒருவர்கூட சிவந்த சமுத்திரத்தில் மூழ்கிவிடவில்லை. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவதையும் உண்மையான விசுவாசிகள் மேன்மை அடைவதையும் காண்பது கடவுளின் எதிரிகளில் பிடிவாத குணமுள்ளவர்களையும் கூட யேகோவாவேகடவுள் என்று அறிக்கையிடச் செய்யும்.

எல்லா நாட்டினரும் இயேசுவைத் தலைவணங்கிப் பணிந்து, ஆண்டவரே என்று அழைக்கும் வரை நற்செய்தியைப் போதிப்பதில், மக்களை முகம்தாள் வைக்கும் கடவுளின் ஆற்றலோடும் அவர் பரிசுத்த ஆவியோடும் செயல்பட்டால் எவ்வளவுஇனிமையாயிருக்கும்!

21. Januar

„Die Ägypter sollen es inne werden, dass ich der Herr bin.“ 2. Mose 7, 5.

Die ungöttliche Welt zu lehren ist hart. Ägypten kennt nicht den HErrn, und wagt deshalb, seine Götzen aufzurichten und erkühnt sich sogar zu fragen: „Wer ist der Herr?“ Jedoch, der Herr hat im Sinn, stolze Herzen zu brechen, ob sie wollen oder nicht. Wenn seine Gerichte über ihren Häuptern donnern, ihren Himmel verdunkeln, ihre Ernten zerstören und ihre Söhne erschlagen, dann beginnen sie etwas von der Macht des HErrn inne zu werden. Es werden noch Dinge auf Erden geschehen, welche Zweifl er auf die Knie bringen sollen. Lasst uns nicht entmutigt werden durch ihre Lästerungen, denn der Herr vermag für seinen eigenen Namen Sorge zu tragen und wird dies in sehr wirksamer Weise tun.

Die Errettung seines Volkes war ein anderes, kräftiges Mittel, Ägypten wissen zu lassen, dass der Gott Israels der HErr, der lebendige und wahre Gott sei. Kein Israelite starb durch eine der zehn Plagen. Keiner von dem erwählten Samen ertrank im Roten Meer. Ebenso wird die Errettung der Erwählten und die gewisse Verherrlichung aller wahren Gläubigen die hartnäckigsten Feinde Gottes zu dem Eingeständnis zwingen, dass Er Gott der HErr ist.

O, dass Seine überzeugende Macht durch den Heiligen Geist die Predigt des Evangeliums begleitete, bis alle Völker sich vor dem Namen Jesu beugten und Ihn Herr nennten!