January

எப்பொழுதும் வளர்ந்து கொண்டேயிருத்தல்

January 7

Always Growing

Thou shalt see greater than these. (John 1:50)

This is spoken to a childlike believer, who was ready to accept Jesus as the Son of God, the King of Israel, upon one convincing piece of argument. Those who are willing to see shall see; it is because we shut our eyes that we become so sadly blind.

We have seen much already. Great things and unsearchable has the Lord showed unto us, for which we praise His name; but there are greater truths in His Word, greater depths of experience, greater heights of fellowship, greater works of usefulness, greater discoveries of power, and love, and wisdom. These we are yet to see if we are willing to believe our Lord. The faculty of inventing false doctrine is ruinous, but power to see the truth is a blessing. Heaven shall be opened to us, the way thither shall be made clear to us in the Son of Man, and the angelic commerce which goes on between the upper and the lower kingdoms shall be made more manifest to us. Let us keep our eyes open toward spiritual objects and expect to see more and more. Let us believe that our lives will not drivel down into nothing but that we shall be always on the growing hand, seeing greater and still greater things, till we behold the great God Himself and never again lose the sight of Him.

ஜனவரி 07

எப்பொழுதும் வளர்ந்து கொண்டேயிருத்தல்

இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் (யோ.1:50).

மெய்ப்பித்துக் காட்டப்பட்ட ஒரே சான்றினால் இயேசுவே தேவனுடைய குமாரனும், இஸ்ரவேலின் அரசரும் ஆனவர் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய சிறு பிள்ளையைப் போன்ற விசுவாசம் இருந்த ஒருவருக்கு இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. காண்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் காண்பார்கள். நம் கண்களை மூடிக்கொள்வதாலேயே நாம் குருடராகிறோம்.

இதற்குள்ளாகவே நாம் அதிகம் கண்டுள்ளோம். பெரியகாரியங்களையும் தேடிக்காணக்கூடாதவைகளையும் ஆண்டவர் நமக்குக் காண்பித்துள்ளார். அதற்காக அவருக்குத் துதி செலுத்துகிறோம். ஆயினும் அவர் வார்த்தைகளில் இன்னும் அதிகமான உண்மைகளும், அனுபவ ஆழமும், கூட்டுறவு ஏற்றமும், பயன்தரும் செயல்களும், ஆற்றல்கண்டுணர்தலும், அன்பும், அறிவுநுட்பமும் இருக்கின்றன. நாம் ஆண்டவரை நம்ப ஆயத்தமாயிருந்தால் இனி இவற்றையும் காண்போம். தவறான சித்தாந்தங்களைப் புனைந்து உருவாக்குதல் அழிவுக்கு இழுத்துச் செல்லும். ஆனால் உண்மையைக் காணும் ஆற்றல் ஆசீர்வாதமாயிருக்கும்.

வானம் நமக்குத் திறக்கப்படும் அங்கு செல்வதற்கான வழி மனிதகுமாரனில் நமக்குத் தெளிவாக்கப்படும். மேலும் கீழுமுள்ள அரசுகளுக்கு இடையே நிலைத்துள்ள தெய்வீகத் தோழமைத் தொடர்பு நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்தப்படும். ஆன்மீகப் பொருட்களைக்காணநம் கண்களைத் திறந்து வைத்திருந்து, இன்னும் அதிகமான உண்மைகளைக் காண்பதை எதிர்நோக்கியிருப்போமாக! நம் வாழ்க்கை சிதறி அழிந்து விடாது என்றும், நாம் மகிமை பொருந்தின கடவுளைக் காணும்வரை வளர்ந்து கொண்டும் பெரிய பெரிய சம்பவங்களை அறிந்து கொண்டும்போவோம் என்றும், அவரைக்கண்டபின் எப்போதும் அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்போம் என்றும் நம்புவோமாக!

7. Januar

„Du wirst noch Größeres als dieses sehen.“ Joh. 1, 50

Dies ist zu einem kindlich Gläubigen gesprochen, der bereit war, auf einen überzeugenden Beweisgrund hin Jesus als den Sohn Gottes, den König Israels, anzunehmen. Die, welche willig sind, zu sehen, sollen sehen; nur, weil wir unsere Augen verschließen, werden wir so traurig blind.

Wir haben schon viel gesehen. Große und unerforschliche Dinge hat der Herr uns gezeigt, wofür wir seinen Namen preisen; aber es sind noch größere Wahrheiten in seinem Wort, größere Tiefen der Erfahrung, größere Höhen der Gemeinschaft, größere Werke im Dienste Gottes, größere Enthüllungen der Macht und der Liebe und der Weisheit. Diese sollen wir noch sehen, wenn wir willig sind, unserem Herrn zu glauben. Die Fähigkeit, falsche Lehre zu erfi nden, ist verderblich, doch das Vermögen, die Wahrheit zu sehen, ist ein Segen. Der Himmel soll uns geöffnet,
der Weg dahin soll uns in dem Menschensohn frei gemacht werden, und wir sollen den Engelsverkehr, der zwischen dem oberen und dem unteren Reiche stattfi ndet, klarer wahrnehmen. Lasst uns die Augen für geistliche Dinge offen halten und erwarten, immer mehr zu sehen. Lasst uns glauben, dass unser Leben nicht in Nichts zusammenschrumpfen wird, sondern dass wir immer mehr wachsen und Größeres und noch Größeres sehen werden, bis wir den großen Gott selber schauen und Er sich niemals wieder unseren Blicken entziehen wird.