February

தடுமாற்றமற்ற நம்பிக்கை

February 27

Unstaggering Trustfulness

He shall not be afraid of evil tidings; his heart is fixed, trusting in the Lord. (Psalm 112:7)

Suspense is dreadful. When we have no news from home, we are apt to grow anxious, and we cannot be persuaded that “no news is good news.” Faith is the cure for this condition of sadness; the Lord by His Spirit settles the mind in holy serenity, and all fear is gone as to the future as well as the present.

The fixedness of heart spoken of by the psalmist is to be diligently sought after. It is not believing this or that promise of the Lord, but the general condition of unstaggering trustfulness in our God, the confidence which we have in Him that He will neither do us ill Himself nor suffer anyone else to harm us. This constant confidence meets the unknown as well as the known of life. Let the morrow be what it may, our God is the God of tomorrow. Whatever events may have happened, which to us are unknown, our Jehovah is God of the unknown as well as of the known. We are determined to trust the Lord, come what may. If the very worst should happen, our God is still the greatest and best. Therefore will we not fear though the postman’s knock should startle us or a telegram wake us at midnight. The Lord liveth, and what can His children fear?

பெப்ரவரி 27

தடுமாற்றமற்ற நம்பிக்கை

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான். அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும் (சங்.112:7).

உறுதியற்ற நிலை அச்சந்தருகிறதாகும். நம் குடும்பத்தினரிடமிருந்து எந்தச் செய்தியும் வராவிட்டால் நாம் கவலைக்குள்ளாகிறோம். செய்தி வராமலிருந்தால் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும் என்று நாம் நம்பத்துணிவதில்லை. இவ்விதமான துயர நிலைiயை மாற்றக்கூடியது நம்பிக்கையே ஆகும். ஆண்டவர் தம்முடைய ஆவியினால் மனதை அமைதியடையச் செய்கிறார். ஆகவே நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்தான எல்லா பயங்களும் ஓடிவிடுகின்றன.

சங்கீதக்காரன் விளக்கும் திடநம்பிக்கையை நாம் தளரா ஊக்கத்துடன் நாடவேண்டும். அது ஆண்டவரின் ஏதாவதொரு வாக்குறுதியை நம்புவது மட்டுமல்ல, ஆனால் அவர் ஒருநாளும் நமக்கு எந்தத் தீமையும் செய்யவும் மாட்டார், யாரும் செய்ய அனுமதிக்கவும் மாட்டார் என்னும் உறுதியான நம்பிக்கை உள்ளவர்களாய்த் தடுமாற்றமின்றி நம் கடவுளில் பற்றுவைப்பதே ஆகும். இவ்விதமாய் உறுதியான நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தால், வாழ்க்கையில் நமக்குத் தெரிந்தவைகளையும் தெரியாதவைகளையும் குறித்து அச்சம் கொள்ளமாட்டோம். நம் கடவுளை நாளைய தினத்தின் கடவுளுமாய் இருப்பதால் நமக்கு நாளைய தினத்தைக் குறித்து பயம் இருக்காது. நமக்குத் தெரியாமல் என்ன நிகழ்ச்சிகள் நேர்ந்திருந்தாலும் நாம் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில் நம் யெகோவா தெரிந்தவைகள் தெரியாதவைகளின் கடவுளாயிருக்கிறார். என்ன நேரிட்டாலும் நாம் ஆண்டவரை நம்புவோம் என்னும் உறுதியான தீர்மானம் உள்ளவர்களாய் இருக்கிறோம். எவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டாலும் நம் கடவுளே பெரியவரும் சிறப்புள்ளவருமாய் இருக்கிறார். ஆகையால் தபாற்காரர் கதவைத் தட்டினாலும் நள்ளிரவில் தந்தி வந்தாலும் நாம் அச்சம் அடையமாட்டோம். ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். அவர் பிள்ளைகள் பயப்படவேண்டியதில்லை.

27. Februar

„Er wird sich nicht fürchten vor böser Kunde; sein Herz ist fest und trauet auf den Herrn.“ Ps. 112, 7.

Ungewissheit ist schrecklich. Wenn wir keine Nachrichten von Zuhause haben, sind wir geneigt, ängstlich zu werden und lassen uns nicht überzeugen, dass „keine Nachrichten gute Nachrichten“ sind. Der Glaube ist die Heilung für diesen Zustand der Traurigkeit; der Herr lässt durch seinen Geist heilige Heiterkeit über die Seele kommen, und alle Furcht ist verschwunden, sowohl für die Zukunft wie für die Gegenwart.

Die Festigkeit des Herzens, von der der Psalmist redet, sollte fl eißig gesucht werden. Sie ist nicht der Glaube an diese oder jene Verheißung des Herrn, sondern der allgemeine Zustand nicht wankenden Vertrauens auf unsren Gott, die Zuversicht, die wir zu Ihm haben, dass Er uns weder selbst Böses tun will, noch irgendeinem anderen gestatten, uns zu schaden. Diese beständige Zuversicht ist sowohl betreffs des Unbekannten als des Bekannten in unserem Leben. Lass den morgigen Tag sein, was er will, unser Gott ist der Gott des morgigen Tages. Was für Ereignisse auch geschehen sein mögen, die uns unbekannt sind, unser Jehovah ist sowohl der Gott des Unbekannten als des Bekannten. Wir sind entschlossen, dem Herrn zu trauen, komme was da wolle. Wenn das Allerschlimmste geschehen sollte, so ist unser Gott immer noch größer und der Erhabenste. Darum wollen wir uns nicht fürchten, ob auch das Klopfen des Postboten uns erschrecken oder ein Telegramm uns um Mitternacht aufwecken sollte. Der Herr lebt, und was können seine Kinder fürchten?