February

நிலையானதொரு சாட்சி

February 10

A Constant Witness

For thou shalt be his witness unto all men of what thou hast seen and heard. (Acts 22:15)

Paul was chosen to see and hear the Lord speaking to him out of heaven. This divine election was a high privilege for himself; but it was not intended to end with him; it was meant to have an influence upon others, yea, upon all men. It is to Paul that Europe owes the gospel at this hour.

It is ours in our measure to be witnesses of that which the Lord has revealed to us, and it is at our peril that we hide the precious revelation. First, we must see and hear, or we shall have nothing to tell; but when we have done so, we must be eager to bear our testimony. It must be personal: “Thou shalt be.” It must be for Christ: “Thou shalt be his witness.” It must be constant and all absorbing; we are to be this above all other things and to the exclusion of many other matters. Our witness must not be to a select few who will cheerfully receive us but to “all men”—to all whom we can reach, young or old, rich or poor, good or bad. We must never be silent like those who are possessed by a dumb spirit; for the text before us is a command, and a promise, and we must not miss it—”Thou shalt be his witness.” “Ye are my witnesses, saith the Lord.”

பெப்ரவரி 10

நிலையானதொரு சாட்சி

நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கும் முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய் (அப்.22:15).

வானத்திலிருந்து ஆண்டவர் பேசியதைப் பார்க்கவும் கேட்கவும் பவுல் தெரிந்து கொள்ளப்பட்டார். இவ்விதமாகக் கடவுள் அவரைத் தெரிந்து கொண்டது அவருக்குக் கிடைத்த தனிச்சலுகை ஆகும். ஆனால் அச்சலுகையின் பயன் அவரோடு முடிந்து விடவில்லை. அது மற்றவர்களிலும் மாறுதல் பண்ணவேண்டும் என்னும் குறிக்கோளை உடையதாயிருந்தது. அந்த மாறுதல் சிலரில் மட்டுமல்ல எல்லா மனிதரிலும் ஏற்படவேண்டும். பவுலினாலேயே ஐரோப்பாவிலுள்ளவர்கள் நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார்கள்.

ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளவைகளுக்கு நாம் சாட்சியாயிருக்க வேண்டும். சிறப்பு வாய்ந்த அவற்றை மறைத்து வைப்பது நம்மை இடருக்கு உள்ளாக்கும். முதலாவது அவர் வெளிப்படுத்துகிறவைகளை நாம் பார்க்கவும் கேட்கவும் வேண்டும். இல்லாவிடில் நாம் சொல்லுவதற்கு ஒன்றுமே இருக்காது. நாம் பார்க்கவும் கேட்கவும் பின் அவற்றைக் குறித்துச் சாட்சி கூற ஆவல் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். அது நாம் கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்ததாய் இருக்க வேண்டும் என்பதற்காக நீ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாம் கிறிஸ்துவுக்குச் சாட்சியாய் இருக்க வேண்டும். நீ அவருக்குச் சாட்சியாய் இருப்பாய் என்று வசனம் கூறுகிறது. அந்தச் சாட்சி நிலையானதாயும் கருத்தைக் கவர்கிறதாயும் இருக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் விட இதையே நாம் முக்கிய வேலையாகக் கருத வேண்டும். நாம் சொல்லுவதை ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு முன் மட்டும் சாட்சியாயிருப்பது போதுமானதல்ல. சகல மனுஷருக்கு முன்பாக என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது வாலிபர், முதியவர், செல்வர், ஏழைகள், நல்லவர், கெட்டவர் எல்லாரையும் அது குறிக்கிறது. ஊமையான ஆவி பிடித்தவர்கள் போல் நாம் வாயை மூடிக்கொண்டு இருக்கக் கூடாது. மேலே கூறப்பட்ட வசனம் ஒரு கட்டளையும் வாக்குறுதியும் ஆகும். அதற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்கக் கூடாது. நீ சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய் நீங்கள் எனக்குச் சாட்சியாயிருப்பீர்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆண்டவரே, நானும் அவ்விதமாயிருக்க இந்த வாக்கை என்னில் நிறைவேற்றும்.

10. Februar

„Denn du sollst sein Zeuge zu allen Menschen sein von dem, das du gesehen und gehört hast.“ Apg. 22, 15.

Paulus war erwählt, den Herrn vom Himmel herab sprechen zu sehen und zu hören. Diese göttliche Erwählung war ein hohes Vorrecht für ihn selber, aber sie war nicht bestimmt, mit ihm zu endigen, sie sollte Einfl uss auf andere haben, ja, auf alle Menschen. Paulus ist es, dem zu dieser Stunde Europa das Evangelium verdankt.

Unsere Sache ist es, jeder nach seinem Maße, Zeugen dessen zu sein, was der Herr uns geoffenbart hat, und wir laufen Gefahr, wenn wir die köstliche Offenbarung verbergen. Zuerst müssen wir sehen und hören, sonst werden wir nichts zu erzählen haben; aber wenn wir dies getan, so müssen wir begierig sein, unser Zeugnis abzulegen. Es muss persönlich sein: „Du sollst sein.“ Es muss für Christus sein: „Du sollst s e i n Zeuge sein.“ Es muss beständig und alles in sich ziehend sein; wir sollen dies vor allem anderen sein und so, dass vieles andere dadurch ausgeschlossen wird. Unser Zeugnis darf nicht vor wenigen Auserlesenen sein, die uns freudig aufnehmen, sondern „zu allen Menschen“ – zu allen, die wir erreichen können, jung oder alt, reich oder arm, gut oder schlecht. Wir dürfen niemals schweigen, wie die, welche von einem stummen Geist besessen sind; denn der vorliegende Spruch ist ein Gebot und eine Verheißung, und wir dürfen ihrer nicht verlustig gehen. – „Du sollst sein Zeuge sei n .“ „Ihr aber seid meine Zeugen,“ spricht der Herr.

Herr, erfülle dieses Wort auch an mir!