February

மாசு அகற்றப்பட்டது

February 9

The Dross Purged

And I will bring the third part through the fire, and will refine them as silver is refined, and will try them as gold is tried; they shall call on my name, and I will hear them: I will say, It is my people: and they shall say, The Lord is my God. (Zechariah 13:9)

Grace transmutes us into precious metal, and then the fire and the furnace follows as a necessary consequence. Do we start at this? Would we sooner be accounted worthless, that we might enjoy repose, like the stones of the field! This would be to choose the viler part—like Esau, to take the pottage and give up the covenant portion. No, Lord; we will gladly be cast into the furnace rather than be cast out from Thy presence!

The fire only refines; it does not destroy. We are to be brought through the fire, not left in it. The Lord values His people as silver, and therefore He is at pains to purge away their dross. If we are wise, we shall rather welcome the refining process than decline it. Our prayer will be that our alloy may be taken from us rather than that we should be withdrawn from the crucible.
O Lord, Thou triest us indeed! We are ready to melt under the fierceness of the flame. Still, this is Thy way, and Thy way is the best. Sustain us under the trial and complete the process of our purifying, and we will be Thine forever and ever.

பெப்ரவரி 09

மாசு அகற்றப்பட்டது

அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறது போல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறது போல அவர்களைப் புடமிடுவேன். அவர்கள் என் நாமத்தைத் தொழுது கொள்வார்கள். நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன். இது என் ஜனமென்று நான் சொல்லுவேன். கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள் (சக.13:9).

கடவுளின் கிருபை விலையேறப்பெற்ற உலோகமாக நம்மைத் தரமாற்றுகிறது. அதன் இன்றியமையாத விளைவாக நாம் உலைக்களத்தில் நெருப்பால் புடமிடப்பட வேண்டியதாகிறது. நாம் இவ்விதம் தரம் மாற்றப்படுவதற்கு நம்மை ஒப்புக் கொடுக்கிறோமா? அல்லது வயல் வெளிகளிலுள்ள கற்களைப்போல அப்படியே அசையாமல் கிடக்கும் வாழ்க்கையை வாழ்வதற்காக நாம் மதிப்பில்லாதவர்கள் என்று கடவுளால் கருதப்படத்தக்கவர்களாய் வாழ்ந்து வருகிறோமா? அவ்விதம் வாழ்வது இழிந்த வாழ்வைத் தெரிந்து கொள்வதாகும். அதாவது ஏசாவைப்போல் கூழுக்காக உடன்படிக்கையின் பங்கை இழப்பதைப் போலாகும். இல்லை ! ஆண்டவரே உம்முடைய சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ளப்படுவதைவிட உலைக்களத்தில் தள்ளப்படுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்.

நெருப்பு மாசை அகற்றித் தூய்மையாக்குகிறது, அழித்துவிடுவதில்லை. நாங்களும் நெருப்பிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விடுவோம். அங்கேயே கிடந்து வெந்து அழிந்து விடமாட்டோம். ஆண்டவர் தம் மக்களை வெள்ளியைப் போல் மதிக்கிறார். ஆகையால் அவர்களில் உள்ள மாசை நீக்க வேண்டுமென்று கவலை கொள்கிறார். நாம் விவேகம் உள்ளவர்களாய் இருந்தால் அவ்விதம் சுத்தப்படுவதை மறுக்கமாட்டோம், வரவேற்போம். உலோகங்களை உருக வைக்கும் கலத்திலிருந்து எடுக்கப்பட்டு விடவேண்டும் என்றல்லாமல், நம்மிலுள்ள மட்ட உலோகக் கலப்பு நீக்கப்பட வேண்டும் என்பதே நம் வேண்டுதலாயிருக்கும்.

ஆண்டவரே, நீர் எங்களை மெய்யாகவே புடமிடுகிறீர். கொடிய அக்கினியில் உருக நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம். இது உம்முடைய வழியாகும். உம்முடைய வழி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இச்சோதனையின் போது எங்களைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு எங்களை முற்றிலுமாகத் தூய்மையாக்கும். அதன் பின் நாங்கள் எப்போதும் உம்முடையவர்களாயிருப்போம்.

9. Februar

„Und will dasselbe dritte Teil durchs Feuer führen und läutern, wie man Silber läutert, und fegen, wie man Gold fegt. Die werden dann meinen Namen anrufen, und ich will sie erhören. Ich will sagen: Es ist mein Volk, und sie werden sagen: Herr, mein Gott.“ Sach. 13, 9.

Die Gnade verwandelt uns in kostbares Metall, und dann kommen Feuer und Schmelzofen als notwendige Folge. Erschrecken wir davor? Wollten wir lieber für wertlos geachtet werden, um Ruhe zu genießen wie die Steine des Feldes? Dies hieße das schlechtere Teil wählen, wie Esau das Linsengericht nehmen und das Erbteil des Bundes aufgeben. Nein, Herr, wir wollen mit Freuden in den Schmelzofen geworfen werden, lieber, als von Deinem Angesicht verworfen sein!

Das Feuer läutert nur, es zerstört nicht. Wir sollen durch das Feuer geführt, nicht darin gelassen werden. Der Herr schützt die Seinen wie Silber, und deshalb gibt Er sich Mühe, sie von den Schlacken zu reinigen. Wenn wir weise sind, werden wir den Läuterungsprozess eher willkommen heißen, als ihn abwehren. Unser Gebet wird dann mehr sein, dass wir von dem schlechten Zusatz befreit, als dass wir aus dem Schmelztiegel genommen werden mögen.

O Herr, Du prüfst uns in der Tat! Wir sind fast aufgelöst durch den Grimm der Flammen. Doch, dies ist Dein Weg, und Dein Weg ist der beste. Erhalte uns in der Prüfung und vollende den Prozess unserer Läuterung, und wir wollen Dein sein in alle Ewigkeit.