February

நீதிக்குத் தகுதி உள்ளவர்கள்

February 5

Justice Satisfied

When I see the blood, I will pass over you. (Exodus 12:13)

My own sight of the precious blood is for my comfort; but it is the Lord’s sight of it which secures my safety. Even when I am unable to behold it, the Lord looks at it and passes over me because of it. If I am not so much at ease as I ought to be, because my faith is dim, yet I am equally safe because the Lord’s eye is not dim, and He sees the blood of the great Sacrifice with steady gaze. What a joy is this!

The Lord sees the deep inner meaning, the infinite fullness of all that is meant by the death of His dear Son. He sees it with restful memory of justice satisfied and all His matchless attributes glorified. He beheld creation in its progress and said, “It is very good”; but what does He say of redemption in its completeness? What does He say of the obedience even unto death of His well-beloved Son? None can tell His delight in Jesus, His rest in the sweet savor which Jesus presented when He offered Himself without spot unto God.

Now rest we in calm security. We have God’s sacrifice and God’s Word to create in us a sense of perfect security. He will, He must, pass over us, because He spared not our glorious Substitute. Justice joins hands with love to provide everlasting salvation for all the blood-besprinkled.

பெப்ரவரி 05

நீதிக்குத் தகுதி உள்ளவர்கள்

அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன் (யாத்.12:13).

விலைமதிப்பற்ற அந்த இரத்தத்தைப் பார்ப்பது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கடவுள் அதைப் பார்க்கும்போது அது என் பாதுகாப்புக்கு உத்தரவாதஞ் செய்கிறது. நான் அதைப் பார்க்க முடியாமற் போனாலும் கடவுள் அதைக் கண்டு, அதனால் என்னைக் கடந்து போகிறார். என் விசுவாசம் தெளிவற்றதாய் இருப்பதால் நான் மனஅமைதியற்று இருந்தாலும் நான் பத்திரமாய் இருக்கிறேன். ஏனெனில் கடவுளின் பார்வை தெளிவானதாய் இருக்கிறது. சிறப்பான இரத்தத்தின் தியாகத்தை அவர் பார்க்கிறார். இது நமக்கு அளவிலா மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்.

தம் அருமையான குமாரனுடைய மரணத்தின் ஆழ்ந்த உள்
அர்த்தத்தையும் வரம்பு கடந்த நிறைவையும் அவர் காண்கிறார். அதனால் நாம் நீதிக்குத் தகுதியுள்ளவர்கள் ஆக்கப்பட்டதையும் அவருடைய இணையற்ற பண்புகள் மேன்மை அடைவதையும் அமைதியாக நினைவு கூருகிறார். படைப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அது நல்லது என்று கண்டார். அப்படியிருக்க இரட்சிப்பு முழுவதுமாக நிறைவேற்றப்பட்டதைக் குறித்து அவர் என்ன கூறுகிறார்? அவருடைய நேசகுமாரன் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவரானதைக் குறித்து என்ன கூறுகிறார்? இயேசுவில் அவர் அடைந்த மகிழ்ச்சியையும் இயேசு தம்மைத் தாமே பழுதற்ற பலியாக ஒப்புக் கொடுத்ததினால் ஏற்பட்ட மனநிறைவையும் யாரும் விவரிக்க முடியாது.

நாம் இப்போது அமைதியளிக்கும் பாதுகாப்பு உள்ளவர்களாய் இருக்கிறோம். அது உண்மையென்று உணர்ந்து கொள்ள கடவுளின் தியாகமும் அவர் வார்த்தைகளும் எமக்கு ஆதாரமாக இருக்கின்றன. அவர் தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நமக்காக அவரை ஒப்புக்கொடுத்தபடியினால் கண்டிப்பாக நம்மைக் கடந்து போவார். இரத்தம் தெளிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் நித்திய இரட்சிப்பு அருளுவதாக நீதியும் அன்பும் ஒன்றுசேருகின்றன.

5. Februar

„Wenn ich das Blut sehe, will ich an euch vorübergehen.“ 2. Mose 12, 13.

Dass ich selber das kostbare Blut sehe, ist zu meinem Trost; aber dass der Herr es sieht, ist das, was meine Sicherheit verbürgt. Selbst wenn ich nicht imstande bin, es zu sehen, so blickt der Herr darauf und geht deshalb an mir vorüber. Wenn ich nicht so ruhig bin, wie ich es sein sollte, weil mein Glaube trübe ist, so bin ich doch ebenso sicher, weil des Herrn Auge nicht trübe ist und Er beständig das Blut des großen Opfers ansieht. Welche Freude ist dies!

Der Herr sieht die tiefe, innere Bedeutung, die unendliche Fülle all dessen, was der Tod seines lieben Sohnes bezeichnet. Er sieht es mit ruhiger Erinnerung daran, dass die Gerechtigkeit befriedigt und alle seine unvergleichlichen Eigenschaften verherrlicht sind. Er sah die Schöpfung in ihrem Fortschreiten und sprach: „Es ist sehr gut!“ aber was sagt Er von der Erlösung in ihrer Vollendung? Was sagt Er von dem Gehorsam, selbst bis zum Tode seines geliebten Sohnes? Niemand kann seine Freude an Jesu beschreiben, und seine Ruhe in dem süßen Geruch, den Jesus darbrachte, als Er sich selber ohne Flecken Gott opferte.

Nun ruhen wir in stiller Sicherheit. Wir haben Gottes Opfer und Gottes Wort, das ein Gefühl vollkommener Geborgenheit in uns erschafft. Er will, Er muss an uns vorübergehen, weil Er unseren glorreichen Stellvertreter nicht verschonte. Die Gerechtigkeit reicht der Liebe die Hand, um ewiges Heil für alle Blutbesprengten zu sichern.