August

கடவுளை மகிமைப்படுத்தும் கோபம்

August 22

Wrath to God’s Glory

Surely the wrath of man shall raise thee: the remainder of wrath shalt thou restrain. (Psalm 76:10)

Wicked men will be wrathful. Their anger we must endure as the badge of our calling, the token of our separation from them: if we were of the world, the world would love its own. Our comfort is that the wrath of man shall be made to redound to the glory of God. When in their wrath the wicked crucified the Son of God they were unwittingly fulfilling the divine purpose, and in a thousand cases the willfulness of the ungodly is doing the same. They think themselves free, but like convicts in chains they are unconsciously working out the decrees of the Almighty.

The devices of the wicked are overruled for their defeat. They act in a suicidal way and baffle their own plottings. Nothing will come of their wrath which can do us real harm. When they burned the martyrs, the smoke which blew from the stake sickened men of popery more than anything else.

Meanwhile, the Lord has a muzzle and a chain for bears. He restrains the more furious wrath of the enemy. He is like a miller who holds back the mass of the water in the stream, and what He does allow to flow He uses for the turning of His wheel. Let us not sigh, but sing. All is well, however hard the wind blows.

ஒகஸ்ட் 22

கடவுளை மகிமைப்படுத்தும் கோபம்

மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப் பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர் (சங்.76:10).

அநீதியான மக்கள் சீற்றங் கொள்கிறார்கள். அவர்கள் கோபத்தை நம் அழைப்பின் சின்னமாகவும் அவர்களிலிருந்து நாம் தனிப்பட்டவர்கள் என்பதின் அடையாளமாகவும் பொறுத்துக்கொள்ளவேண்டும். நாம் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையவர்களை நேசிக்கும். மனிதனுடைய கோபம் கடவுளின் மகிமை பெருக உதவத் தக்கதாக மாற்றப்படும் என்பதே நமக்கு ஆறுதல் அளிப்பதாகும். பழிபாவத்துக்கு அஞ்சாத மக்கள் தங்கள் கோபத்தினால் தேவனுடைய குமாரனைச் சிலுவையில்அறைந்த போது, அறியாமலே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதேவிதமாகக் கடவுள் பயம் இல்லாதவர்களும் பலவிதங்களில் செய்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் சங்கிலிகளால் கட்டப்பட்ட குற்றவாளிவளைப்போல் தங்களைஅறியாமலே சர்வ வல்லவரின் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள்.

துன்மார்க்கரின் திட்டங்கள் உதறித்தள்ளப்படுவதால் அவை தோல்வியடைகின்றன. அவர்கள் அறியாமலே தங்களுக்குத் தீமை இழைக்கும் விதமாகத் திட்டங்கள் தீட்டி அவற்றினால் குழப்பம் அடைகிறார்கள்.அவர்களின் சீற்றத்தினால் நமக்கு எந்தவிதமான தீமையும் நேரிடாது. இரத்தசாட்சிகளைத் தீக்கிரையாக்கின போது அத்தீயிலிருந்து கிளம்பின புகை தீயிட்டவர்களுக்கே தீமை விளைவித்தது.

கரடி போன்றவர்களை அடக்கக் கூடிய சங்கிலியும் முகவாய்க் கட்டும் ஆண்டவரின்கையில் இருக்கின்றன. பகைவரின் மிஞ்சும் கோபத்தை அவர் அடக்குவார். அவர் ஓர் ஆலையின் உரிமையாளரைப் போல் இருக்கிறார். தேவைக்கு அதிகமான நீரை வாய்க்கால் வழியே செல்லாமல் தடுத்து விடுகிறார். அவ்விதமாகத் தடுத்த நீரை ஆலையின் காற்றாடியைச் சுற்றப்பயன்படுத்துகிறார். நாம் பெருமூச்சு விடவேண்டியதில்லை. பாட்டுகள் பாடலாம். எவ்வளவு வேகமாகக் காற்று வீசினாலும் எல்லாம் நல்ல விதமாக முடியும்.

22. August

„Wenn Menschen wider Dich wüten, wird es Dir zum Lobpreis; und wenn sie noch mehr wüten, so bist Du auch noch gerüstet.“ Ps. 76, 11.

Gottlose Menschen werden immer wüten. Ihren Zorn müssen wir tragen als das Merkmal unserer Berufung, das Zeichen unserer Absonderung von ihnen; wären wir von der Welt, so hätte die Welt das Ihre lieb. Unser Trost ist, dass das Wüten der Menschen Gott zur Ehre gereichen soll. Als die Gottlosen in ihrer Wut den Sohn Gottes kreuzigten, erfüllten sie ohne ihr Wissen den göttlichen Ratschlag, und in tausend Fällen tut der Eigenwille der Ungöttlichen das Gleiche. Sie dünken sich frei, aber wie Verbrecher in Ketten führen sie unbewussterweise die Ratschlüsse des Allmächtigen aus.

Die Anschläge der Gottlosen werden so gelenkt, dass sie zu ihrer Niederlage dienen. Sie handeln in selbstmörderischer Weise und vereiteln ihre eigenen Pläne. Nichts wird aus ihrer Wut kommen, was uns wirklichen Schaden tun kann. Als sie die Märtyrer verbrannten, erregte der Rauch, der von ihren Scheiterhaufen aufstieg, den Menschen mehr Widerwillen gegen das Papsttum als irgendetwas anderes.

Mittlerweile hat der Herr einen Maulkorb und eine Kette für Bären. Er hält die grimmigste Wut des Feindes zurück. Er ist wie ein Müller, der die Masse des Wassers in dem Strom zurückhält, und das, was er fließen lässt, zum Drehen seines Rades gebraucht. Lasst uns nicht seufzen, sondern singen. Alles ist gut, wie stark auch der Wind weht.