August

தொடுகிறவர்களும் கண்டுபிடிக்கிறவர்களும்

August 18

Seekers, Finders

If thou seek him, he will be found of thee. (1 Chronicles 28:9)

We need our God; He is to be had for the seeking, and He will not deny Himself to any one of us if we personally seek His face. It is not if thou deserve Him, or purchase His favor, but merely if thou “seek” Him. Those who already know the Lord must go on seeking His face by prayer, by diligent service, and by holy gratitude: to such He will not refuse His favor and fellowship. Those who, as yet, have not known Him to their souls’ rest should at once commence seeking and never cease till they find Him as their Savior, their Friend, their Father, and their God.

What strong assurance this promise gives to the seeker! “He that seeketh findeth.” You, yes you, if you seek your God shall find Him. When you find Him you have found life, pardon, sanctification, preservation, and glory. Will you not seek, and seek on, since you shall not seek in vain’ Dear friend, seek the Lord at once. Here is the place, and now is the time. Bend that stiff knee; yes, bend that stiffer neck, and cry out for God, for the living God. In the name of Jesus, seek cleansing and justification. You shall not be refused. Here is David’s testimony to his son Solomon, and it is the writer’s personal witness to the reader. Believe it and act upon it, for Christ’s sake.

ஒகஸ்ட் 18

தொடுகிறவர்களும் கண்டுபிடிக்கிறவர்களும்

நீ அவரைத்தேடினால் உனக்குத் தென்படுவார் (1.நாளா.28:9).

நமக்கு நம் கடவுள் தேவை. அவரைத் தேடினால் கண்டடைவோம். நாம் அவரைத்தரிசிக்க வேண்டுமென்று முழு மனதுடன் விரும்பினால் அவர் தம்மை மறைத்துக் கொள்ளமாட்டார். அவரைத் தரிசிக்க நாம் ஏற்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதுமில்லை. அவர் அன்பு ஆதரவை விலை கொடுத்து வாங்க வேண்டுமென்பதுமில்லை. அவரைத் தேடினாலே போதும். ஆண்டவரை ஏற்கனவேநன்கு அறிந்தவர்கள் வேண்டுதலினாலும் ஊக்கந்தவறாத ஊழியத்தினாலும் சீரிய நன்றியறிதலினாலும் அவரைத் தேட வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு அவர் அன்பு ஆதரவையும் தோழமையையும் மறுக்க மாட்டார். அவரிலே தங்கள் ஆத்துமாக்கள் சமாதானத்தோடு தங்கக்கூடும் என்று இன்னும்அறியாதவர்கள் இப்போதே அவரைத் தேடத்தொடங்கி அவரைத் தங்கள் இரட்சகராகவும் நண்பராகவும் பிதாவாகவும் கடவுளாகவும் அறிந்து கொள்ளும்வரை தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

அவரைத் தேடுகிறவர்களுக்கு இந்த வாக்குறுதி எவ்வளவு திடம் அளிக்கிறது என்று பாருங்கள்.அவரைத் தேடுகிறவன் கண்டடைவான். இதை வாசிக்கிறவரே நீர் கடவுளைத் தேடினால் அவரைக் கண்டடைவீர். அவரைக் கண்டடைந்தவுடன் வாழ்வு, மன்னிப்பு, பரிசுத்தமாக்கப்படுதல், பாதுகாப்பு, மகிமை எல்லாவற்றையும் பெறுவீர்கள். நீங்கள் அவரைத்தேட மாட்டீர்களா?தேடிக்கொணுடேயிருக்க மாட்டீர்களா? ஏனெனில் நீங்கள் தேடுவது வீணாய்ப் போகாது. அன்பான நண்பரே நீர் உடனே கடவுளைத் தேடும். இதுவே சரியான இடமும் காலமும் ஆகும். விறைப்பான அந்த முழங்காலை முடக்கும் இன்னமும் கடினமான கழுத்தையும் வளைத்து கடவுளை அதாவது உயிருள்ள கடவுளைநோக்கிக் கூப்பிடும். இயேசுவின் நாமத்தில் சுத்திகரிக்கப்படவும், பரிசுத்தமாக்கப்படவும் நாடுங்கள். உங்கள் வேண்டுதல் மறுக்கப்படாது. இது தாவீது தன் மகன் சாலோமோனுக்கு சொன்ன சான்றுரையாகும். இதுவே இதை எழுதியவர் இதை வாசிப்பவருக்கும் சொல்லும்சான்றுரையுமாகும். கிறிஸ்துவின் நாமத்தினால் இதை நம்பி இதன்படி செய்யுங்கள்.

18. August

„Wirst du Ihn suchen, so wirst du Ihn finden.“ 1. Chron. 28, 9.

Wir haben unseren Gott nötig; wir können Ihn haben, wenn wir Ihn suchen, und Er wird sich keinem von uns verleugnen, wenn wir persönlich sein Angesicht suchen. Es heißt nicht: wirst du Ihn verdienen oder seine Gunst erkaufen, sondern nur: „wirst du Ihn »suchen«.“ Die, welche den Herrn schon kennen, müssen fortfahren, sein Angesicht durch Gebet, durch fleißigen Dienst und durch heilige Dankbarkeit zu suchen: Solchen wird Er seine Huld und seine Gemeinschaft nicht verweigern. Die, welche Ihn bis jetzt noch nicht so kennen, dass sie die Ruhe ihrer Seele darin gefunden haben, sollten sogleich das Suchen beginnen und nie aufhören, bis sie Ihn als ihren Heiland, ihren Freund, ihren Vater und ihren Gott finden.

Was für eine starke Zusicherung gibt diese Verheißung dem Suchenden! „Wer da suchet, der wird finden.“ Du, ja, d u sollst deinen Gott finden, wenn du Ihn suchst. Wenn du Ihn findest, so hast du Leben, Vergebung, Heiligung, Bewahrung und Seligkeit gefunden. Willst du nicht suchen und weiter suchen, da du nicht vergeblich suchen sollst? Lieber Freund, suche den Herrn sogleich. Hier ist der Ort, und jetzt ist die Zeit. Beuge jenes steife Knie; ja, beuge jenen steifen Nacken und schreie nach Gott, nach dem lebendigen Gott. In dem Namen Jesu suche Reinigung und Rechtfertigung. Sie wird dir nicht verweigert werden. Hier ist Davids Zeugnis an seinen Sohn Salomo, und es ist des Verfassers persönliches Zeugnis vor dem Leser. Glaube es und handle danach, um Christi willen.