August

தண்டிக்கப்படுவோம் ஆனால் எந்நாளுமல்ல

August 14

Child Chastisement Not Forever

And I will for this afflict the seed of David, but not for ever. (1 Kings 11:39)

In the family of grace there is discipline, and that discipline is severe enough to make it an evil and a bitter thing to sin. Solomon, turned aside by his foreign wives, had set up other gods and grievously provoked the God of his father; therefore, ten parts out of twelve of the kingdom were rent away and set up as a rival state. This was a sore affliction to the house of David, and it came upon that dynasty distinctly from the hand of God, as the result of unholy conduct. The Lord will chasten His best beloved servants if they cease from full obedience to His laws: perhaps at this very hour such chastening is upon us. Let us humbly cry, “O Lord, show me wherefore thou contendest with me.”

What a sweet saving clause is that—”but not for ever”! The punishment of sin is everlasting, but the fatherly chastisement of it in a child of God is but for a season. The sickness, the poverty, the depression of spirit, will pass away when they have had their intended effect. Remember, we are not under law but under grace. The rod may make us smart, but the sword shall not make us die. Our present grief is meant to bring us to repentance that we may not be destroyed with the wicked.

ஒகஸ்ட் 14

தண்டிக்கப்படுவோம் ஆனால் எந்நாளுமல்ல

நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப் படுத்துவேன். ஆகிலும் எந்நாளும் அப்படியிராது (1. இராஜா.11:39).

கிருபையினால் ஆளப்படும் குடும்பத்தில் கட்டுப்பாட்டுக்கும் தண்டிப்புக்கும்கூட இடம் இருக்கிறது. அந்தத் தண்டனை பாவம் செய்வது எவ்வளவு தீமையும் கசப்புமான அனுபவமாகும் என்று காட்டக்கூடிய அளவு கடுமையானதாய் இருக்கின்றது. அந்நிய நாட்டினரான மனைவிகளால் சாலோமோன் கடவுளைவிட்டுப் பின்வாங்கிப் போய் வேறு தேவர்களை உண்டாக்கி, அவன் முற்பிதாக்களின் கடவுளுக்குச் சினமூட்டினான். ஆகையால் பன்னிரண்டு பிரிவுகளாலான அவன் அரசின் பத்துப்பிரிவுகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அவன் அரசுக்குப் போட்டியான வேறொரு அரசாக்கப்பட்டது. இதுதாவீதின் குடும்பத்தினருக்குப் பேரிடர் ஆயிற்று. சாலோமோனின் பொல்லாத நடத்தையினால் கடவுளே அவ்விதம் செய்தார். கடவுளின் கட்டளைகளுக்கு முழுவதுமாகக் கீழ்ப்படியாமல் இருந்தால் தம் சிறந்த ஊழியக்காரரைக் கூட அவர் தண்டித்துத் திருத்துவார். ஒருவேளை இந்நேரத்தில் நாம்அவ்விதத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். நாம் தாழ்மையாக நீர் என்னிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர். அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்று கூறலாம்.

ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்பது எவ்வளவு இனிய வாக்குறுதியாகும். பாவத்திற்குத் தண்டனைநித்தியமானது. ஆனால் ஆண்டவரின் பிள்ளை தகப்பனால் தண்டிக்கப்படுவது வரையறையுடைய காலத்திற்கேயாகும். நோவும், வறுமையும், சோர்வும் எவ்வளவு காலத்திற்கு எம்மை வருத்த வேண்டுமென்று திட்டமிடப்பட்டுள்ளதோ அவ்வளவு காலத்திற்குப் பின் மாறிவிடும். நாம்நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவர்களல்ல, கிருபைக்கு உட்பட்டவர்கள் என்பதைநினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சாட்டையின் அடியினால் ஏற்படும் வலி தாங்கமுடியாததாய் இருக்கலாம். ஆனால் வாள் நம்மை வெட்டி வீழ்த்தாது. நாம் பொல்லாதவர்களுடன் அழிக்கப்பட்டு விடாதபடிமனந்திரும்புவதற்காகவே இக்காலத் துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாயிருக்கிறது.

14. August

„Und will den Samen Davids um deswillen demütigen, doch nicht ewiglich.“ 1. Kön. 11, 39.

Im Haushalt Gottes ist Zucht, und diese Zucht ist streng genug, um das Sündigen zu einer schlimmen und bitteren Sache zu machen. Salomo, von seinen fremden Weibern verleitet, hatte anderen Göttern nachgewandelt und den Gott seines Vaters sehr zum Zorn gereizt; darum wurden von den zwölf Teilen des Reiches zehn abgerissen und ein besonderer Staat daraus gebildet. Dies war eine starke Demütigung für das Haus Davids, und sie kam über dieses Herrscherhaus deutlich von der Hand Gottes als Folge unheiligen Tuns. Der Herr wird die liebsten seiner Knechte züchtigen, wenn sie aufhören seinen Gesetzen völlig gehorsam zu sein: vielleicht sind wir zu eben dieser Stunde unter solcher Züchtigung. Lasst uns demütig rufen: „O Herr, zeige mir, warum Du mit mir haderst.“

Was für ein lieblicher Zusatz ist dies – „doch nicht ewiglich!“ Die Strafe für die Sünde ist ewig, aber die väterliche Züchtigung derselben bei einem Kinde Gottes ist nur auf eine Zeit lang. Die Krankheit, die Armut, die Niedergeschlagenheit werden verschwinden, wenn sie ihre beabsichtigte Wirkung gehabt haben. Gedenkt daran, wir sind nicht unter dem Gesetz, sondern unter der Gnade. Die Rute mag uns schlagen, aber das Schwert soll uns nicht töten. Unser gegenwärtiges Leiden soll uns zur Buße bringen, auf dass wir nicht mit den Gottlosen umkommen.