August

வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது

August 5

Law in the Heart

The law of his God is in his heart; none of his steps shall slide. (Psalm 37:31)

Put the law into the heart, and the whole man is right. This is where the law should be; for then it lies, like the tables of stone in the ark, in the place appointed for it. In the head it puzzles, on the back it burdens, in the heart it upholds.

What a choice word is here used, “the law of his God”! When we know the Lord as our own God His law becomes liberty to us. God with us in covenant makes us eager to obey His will and walk in His commands. Is the precept my Father’s precept? Then I delight in it.

We are here guaranteed that obedient-hearted man shall be sustained in every step that he takes. He will do that which is right, and he shall therefore do that which is wise. Holy action is always the most prudent, though it may not at the time seem to be so. We are moving along the great high road of God’s providence and grace when we keep to the way of His law. The Word of God has never misled a single soul yet; its plain directions to walk humbly, justly, lovingly, and in the fear of the Lord are as much words of wisdom to make our way prosperous as rules of holiness to keep our garments clean. He walks surely who walks righteously.

ஓகஸ்ட் 05

வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது. நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை (சங்.37:31).

வேதத்தில் கூறப்பட்டிருப்பவைகளை மனதில் வைத்திருக்கும் மனிதனின் நடைகள் சரியானவையாய் இருக்கும். வேதம் இருதயத்தில் தான் இருக்கவேண்டும். ஏனெனில் கற்பனைகள் அடங்கிய கற்பலகைகள் உடன்படிக்கைப் பெட்டியில் இருந்தது போல் வேதத்திற்கென்று குறிக்கப்பட்ட இடம்இருதயம்தான். வேதத்தைக் குறித்து நினைத்துப் பார்த்தால் குழப்பமாயிருக்கும். அதைச் சுமப்பது கடினமாய்த் தெரியும். ஆனால் அது இருதயத்தில் இருந்தால் ஆதரவளிக்கும்.

அவனுடைய தேவன் அருளிய வேதம் என்று சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். தேவன்நம்முடைய கடவுள் என்று நாம் அறிந்தால் அவர் வேதம் நம் தனி உரிமை ஆகிறது. கடவுள் நம்மோடு செய்த உடன்படிக்கை அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும் அவர் சித்தத்திற்குக் கீழ்ப்படியவும் நம்மை ஆவல் உள்ளவர்கள் ஆக்குகிறது. எந்தக் கட்டளையும் என் பிதாவினுடையகட்டளையானால் அதைக் கைக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கீழு;ப்படிதலிலுள்ள மனிதன் அவன் நடைகளில் தாங்கிப் பிடிக்கப்படுவான் என்று நமக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. அவன் சரியானவைகளையே செய்வதால் விவேகமானவைகளைச் செய்வான். தூயசெயல்கள்எப்போதும் அறிவு நுட்பம் வாய்ந்தவையாய் இருக்கும். ஒருவேளை அவற்றைச் செய்யும்போது அப்படிப்பட்டவையாய்த் தோன்றாமல் இருக்கலாம். கடவுளின் வேதம் கூறுகிற பாதையில் நாம் நடந்தால் கடவுளின் அருளும் கிருபையும் நிறைந்த நெடுஞ்சாலையில் நடக்கிறவர்களாய் இருப்போம்.இந்நாள்வரை கடவுளின் வார்த்தை யாரையும் தவறான பாதையில் நடத்தியதில்லை. நம் ஆடைகளைச் சுத்தமாய் வைத்துக்கொள்ளக் கொடுக்கப்பட்டுள்ள தூய வழிகளைப் போல் தாழ்மையுள்ளவர்களாயும் நீதியுள்ளவர்களாயும் அன்புள்ளவர்களாயும் கடவுள் பயமுள்ளவர்களாயும் நடக்கச்சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் நம் பாதையை வளமாக்கக் கூடியவை. நீதியான பாதையில் நடப்பவர்கள் உறுதியாய் நடப்பவர்கள் ஆவார்கள்.

5. August

„Das Gesetz seines Gottes ist in seinem Herzen, seine Tritte sollen nicht gleiten.“ Ps. 37, 31.

Lege das Gesetz in das Herz, so steht es mit dem ganzen Menschen recht. Das ist der Ort, wo das Gesetz sein sollte, denn dann liegt es, wie die steinernen Tafeln in der Bundeslade, an dem ihm bestimmten Platz. Im Kopf verwirrt es, auf dem Rücken belastet es, im Herzen hält es aufrecht.

Was für ein köstliches Wort ist das hier gebrauchte, „das Gesetz seines Gottes!“ Wenn wir den Herrn als unseren eigenen Gott kennen, so wird sein Gesetz zur Freiheit für uns. Gott mit uns im Bunde macht uns eifrig, seinem Willen zu gehorchen und in seinen Geboten zu wandeln. Ist die Vorschrift meines Vaters Vorschrift? Dann habe ich meine Freude daran.

Uns wird hier verbürgt, dass der gehorsame Mann aufrecht gehalten werden soll bei jedem Schritt, den er macht. Er will das tun, was recht ist, und soll deshalb das tun, was weise ist. Heiliges Tun ist immer das Klügste, obgleich es zuerst nicht so scheinen mag. Wir gehen auf der großen Hochstraße der Vorsehung und Gnade Gottes, wenn wir uns auf dem Weg seines Gesetzes halten. Das Wort Gottes hat noch nie eine einzige Seele irregeleitet; seine deutlichen Anweisungen demütig, gerecht, liebevoll und in der Furcht des Herrn zu wandeln, sind ebenso sehr Worte der Weisheit, die zu unserer Wohlfahrt dienen, wie Regeln der Heiligkeit, unsere Kleider rein zu halten. Der wandelt sicher, der gerecht wandelt.