April

மன்னித்து மறந்து விடு

April 29

Forget and Forgive

Say not thou, I will recompense evil; but wait on the Lord, and he shall save thee. (Proverbs 20:22)

Be not in haste. Let anger cool down. Say nothing and do nothing to avenge yourself. You will be sure to act unwisely if you take up the cudgels and fight your own battles; and, certainly, you will not show the spirit of the Lord Jesus. It is nobler to forgive and let the offense pass. To let an injury rankle in your bosom and to meditate revenge is to keep old wounds open and to make new ones. Better forget and forgive.

Peradventure, you say that you must do something or be a great loser; then do what this morning’s promise advises: “Wait on the Lord, and he shall save thee.” This advice will not cost you money but is worth far more, Be calm and quiet. Wait upon the Lord; tell Him your grievance; spread Rabshakeh’s letter before the Lord, and this of itself will be an ease to your burdened mind. Besides, there is the promise “He shall save thee.” God will find a way of deliverance for you. How He will do it neither you nor I can guess, but do it He will, If the Lord saves you, this will be a deal better than getting into petty quarrels and covering yourself with filth by wrestling with the unclean, Be no more angry. Leave your suit with the Judge of all.

ஏப்ரல் 29

மன்னித்து மறந்து விடு

தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே. கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார் (நீதி.20:22).

அவசரப்படாதே உன்சினம் தணியட்டும். பழிவாங்குவதற்காக எதுவும் சொல்லாதே. எதுவும் செய்யாதே. உன் கைத்தடியை எடுத்துக்கொண்டு உன் போர்களில் நீயே
சண்டை செய்யப் போவாயேயானால் அறிவுக் கேடாகஏதாவது செய்துவிடுவாய். அதுவுமல்லாமல் ஆண்டவர் இயேசுவின் தன்மையையும் காட்டுகிறவனாய் இருக்கமாட்டாய். அக்குற்றத்தை மன்னித்து அதை விட்டுவிடுவது நற்பண்பாகும். உனக்குச் செய்யப்பட்ட தீமை மனதிலே உறுத்திக் கொண்டு இருக்கச் செய்து எவ்விதம் பழிவாங்கலாம் என்று ஆழ்ந்து திட்டமிட்டுக் கொண்டேயிருப்பது பழைய காயங்களை ஆறவிடாமல் தடுப்பதையும் புதுக்காயங்கள் ஏற்பட வழி வகைகள் ஆயத்தம் செய்து கொடுப்பதையும் போன்றதாகும். மன்னித்து மறந்து விடுவது நல்லது.
ஒருவேளை ஏதாவது செய்யாவிட்டால் அதிகமாய் இழந்துவிட நேரிடும் என்று நீ எண்ணினால் மேலே கூறப்பட்ட வாக்குறுதியில் சொல்லப்பட்டிருப்பதுபோல் கர்த்தருக்குக் காத்திரு. அவர் உன்னை இரட்சிப்பார். இந்த ஆலோசனையை நீ விலைக்கு வாங்க வேண்டியதில்லை. ஆனால் இது மிகவும் விலையேறப் பெற்றதாகும். குழப்பம் இல்லாமல் அமைதியாய் இரு. கர்த்தருக்குக் காத்திரு. உன் மனக்குறையை அவரிடம் எடுத்துச் சொல். அதுவே உன் மனக்கனத்தைக் குறைக்கும். அதோடு அவர் உன்னை இரட்சிப்பார் என்ற வாக்குறுதியும் உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. உன்னை விடுவிப்பதற்கு ஏற்ற வழியை ஆண்டவர் கண்டு பிடிப்பார். அவர் அதை எவ்விதம் செய்வார் என்பதை நானாவது நீங்களாவது ஊகித்துப் பார்க்க முடியாது. ஆனால் அவர் கண்டிப்பாகச் செய்வார். நீங்கள் சிறு சச்சரவுகளில் ஈபடுவதையும் அசுத்தத்தோடு மல்லுக்கு நிற்பதால் அசுத்தம் அடைவதையும்விட ஆண்டவர் உன்னை இரட்சிக்கும் வாய்ப்புக்குக் காத்திருப்பது எவ்வளவு மேலானது என்று நினைத்துப்பாருங்கள். சினத்தை விட்டுவிடுங்கள். எல்லோருக்கும் மேலான நியாயாதிபதியிடம் உங்கள் வழக்கை விட்டுவிடுங்கள்.

29. April

„Sprich nicht: Ich will Böses vergelten. Harre des Herrn, der wird dir helfen.“ Spr. 20, 22.

Sei nicht hastig. Lass den Zorn abkühlen. Sage nichts und tue nichts, um dich selbst zu rächen. Du wirst gewiss unweise handeln, wenn du den Stock aufhebst, um deinen eigenen Kampf zu fechten; und sicherlich wirst du nicht den Geist des Herrn Jesu zeigen. Es ist edler zu vergeben und an die Beleidigung nicht mehr zu denken. Ein angetanes Unrecht in deinem Busen schwelen zu lassen und auf Rache zu sinnen, heißt alte Wunden offen halten und neue machen. Besser vergeben und vergessen.

Vielleicht sagst du, du müsstest entweder etwas tun oder der große Verlierer sein; dann tue, was diese Verheißung dir rät: „Harre des Herrn, der wird dir helfen.“ Dieser Rat wird dir kein Geld kosten, aber er ist weit mehr wert. Sei gelassen und ruhig. Harre des Herrn; trage Ihm deine Beschwerde vor: breite Rabsakes Brief vor dem Herrn aus, das an sich schon wird deine belastete Seele erleichtern. Außerdem liegt hier die Verheißung: „Der wird dir helfen.“ Gott wird einen Weg der Befreiung für dich finden. Wie Er es tun wird, können weder du noch ich erraten, aber tun wird Er es. Wenn der Herr dir hilft, so wird das sehr viel besser sein, als dich in kleinliche Zänkereien einzulassen und durch das Ringen mit den Unreinen dich mit Schmutz zu bedecken. Sei nicht mehr zornig. Überlass deine Sache dem Richter aller.