April

எதிரிகள் சமாதானமாவார்கள்

April 17

Enemies at Peace

When a man’s ways please the Lord, he maketh even his enemies to be at peace with him. (Proverbs 16:7)

I must see that my ways please the Lord. Even then I shall have enemies; and, perhaps, all the more certainly because I endeavor to do that which is right. But what a promise this is! The Lord will make the wrath of man to praise Him and abate it so that it shall not distress me.

He can constrain an enemy to desist from harming me, even though he has a mind to do so. This He did with Laban, who pursued Jacob but did not dare to touch him. Or He can subdue the wrath of the enemy and make him friendly, as He did with Esau, who met Jacob in a brotherly manner, though Jacob had dreaded that he would smite him and his family with the sword. The Lord can also convert a furious adversary into a brother in Christ and a fellow worker, as He did with Saul of Tarsus. Oh, that He would do this in every case where a persecuting spirit appears!

Happy is the man whose enemies are made to be to him what the lions were to Daniel in the den, quiet and companionable! When I meet death, who is called the last enemy, I pray that I may be at peace. Only let my great care be to please the Lord in all things. Oh, for faith and holiness; for these are a pleasure unto the Most High!

ஏப்ரல் 17

எதிரிகள் சமாதானமாவார்கள்

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதி.16:7).

என் வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருப்பதைக் குறித்து நான் கவனமாயிருக்கவேண்டும். நான் அவ்விதம் இருந்தால்கூட எனக்குச் சத்துருக்கள் இருப்பார்கள். நிச்சயமாக இருப்பார்கள் என்று கூறலாம். ஏனெனில் நான் சரியானவற்றையே செய்ய முயலுகிறவனாய் இருப்பேன். இது எவ்வளவு சிறந்த வாக்குறுதியாகும். ஆண்டவர் மனிதனின் கோபம் தம்மைப் போற்றும்படி செய்வார். அது எனக்குத் தொல்லை அளிக்காதபடி அதைத் தனித்தும் விடுவார்.

என் சத்துரு எனக்குத் தீமை செய்ய நினைத்திருந்தாலும் அவன் அவ்விதம் செய்யாதபடி கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திவிடுவார். யாக்கோபைத் துரத்திச் சென்ற லாபான் அவன்மேல் கைபோடாதபடி மாற்றிவிட்டார். ஏசா, யாக்கோபிடையே ஏற்பட்ட மாறுதலைப்போல சத்துருவின் கோபத்தை நீக்கி, அவன் நண்பனாகச் செய்வார். நாம் திரும்பி வந்தபோது ஏசா தம்மையும் தம் குடும்பத்தினரையும் வாளினால் வெட்டிவிடுவான் என்று யாக்கோபு பயந்தான். ஆனால் ஏசாவோ சகோதர அன்போடு யாக்கோபைச் சந்தித்தான். தரிசு பட்டணத்துச் சவுலை மாற்றியதுபோல வெறிகொண்ட எதிரியையும் கிறிஸ்துவில் சகோதரராகவும் உடன் ஊழியக்காரராகவும் ஆண்டவர் மாற்றிவிடுவார். மற்றவர்களைத் துன்புறுத்தும் ஆவி செயல்படும் ஒவ்வொரு இடத்திலும் ஆண்டவர் இவ்விதம் கிரியை செய்தால் எவ்வளவு நலமாயிருக்கும்.

சிங்கக் கெபியில் தானியேல் சந்தித்த சிங்கங்கள் அமைதியும் தோழமையும் உள்ளவைகளாய் மாறினதுபோல ஒருவரின் எதிரிகள் மாறிவிட்டால் அவர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தவர் ஆவார். கடைசி எதிரி எனப்படும் மரணத்தைச் சந்திக்கும்போது நான் சமாதானம் உள்ளவனாய் இருக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். எல்லாவற்றிலும் ஆண்டவரை மகிழ்ச்சி அடையச் செய்கிறவனாய் இருக்கவேண்டும் என்பதைக் குறித்து மட்டும் நான் மிகுந்த கவனமாயிருப்பேனாக. மகா உன்னதமானவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் நம்பிக்கையும் தூய்மையும் நான் அடைவேனாக.

17. April

„Wenn jemandes Wege dem Herrn wohlgefallen, so lässt Er auch seine Feinde in Frieden mit ihm sein.“ Spr. 16, 7.

Ich muss sehen, dass meine Wege dem Herrn wohlgefallen. Selbst dann werde ich Feinde haben; und vielleicht umso gewisser, als ich mich bemühe, das zu tun, was recht ist. Aber was für eine Verheißung ist dies! „Wenn Menschen wüten, wendet es der Herr zu Seinem Lobpreis“ (Ps. 76, 10.), und Er wird ihr Wüten so dämpfen, dass es mich nicht ängstigen soll.

Er kann einen Feind abhalten, mir Schaden zu tun, auch wenn dieser Lust dazu hat. Dies tat Er bei Laban, der Jakob verfolgte, aber nicht wagte, ihn anzurühren. Oder Er kann den Zorn des Feindes dämpfen und ihn freundlich machen, wie Er es bei Esau tat, der Jakob in brüderlicher Weise entgegenkam, obwohl dieser gefürchtet, dass er ihn und seine Familie mit dem Schwert schlagen wolle. Der Herr kann auch einen wütenden Gegner in einen Bruder in Christo und einen Mitarbeiter umwandeln, wie Er es mit Saulus von Tarsus tat. O, dass Er dies überall tun wollte, wo ein Verfolgungsgeist sich zeigt!

Glücklich ist der Mann, dessen Feinde für ihn so gemacht werden, wie die Löwen für Daniel in der Grube, ruhig und umgänglich! Wenn ich dem Tod, der der letzte Feind genannt wird, begegne, so ist mein Gebet, dass ich in Frieden sein möge. Nur lasst meine große Sorge die sein, dem Herrn in allen Dingen zu gefallen. O, dass ich Glauben und Heiligkeit hätte, denn daran hat der Höchste Wohlgefallen!